நடிகர் அரசியல்வாதியாக கூடாதா? அதுவும், ஓம் சக்தி... பராசக்தி டயலாக்.. வில்லங்க கேள்விக்கு MS பாஸ்கர் பதிலடி
சென்னை: உமாபதி ராமையா இயக்கத்தில், நட்டி நட்ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள 'டிஎன் 2026' திரைப்படம் ரிலீஸுக்கு முன்பே பெரிய அளவில் சர்ச்சையையும், அதே நேரத்தில் எதிர்பார்ப்பையும் உருவாக்கி வருகிறது. குறிப்பாக இந்த படத்தின் டீசர் மற்றும் அதில் இடம்பெற்ற வசனங்கள் அரசியல் வட்டாரங்களிலும், சினிமா ரசிகர்களிடமும் பெரும் விவாதத்தை கிளப்பியிருக்கின்றன.

எம் எஸ் பாஸ்கர் விளக்கம்
இந்த நிலையில், சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் நடிகர் எம்.எஸ். பாஸ்கரிடம் ஒரு முக்கியமான கேள்வி எழுப்பப்பட்டது. "நடிகர்கள் அரசியலுக்கு வருவது சரியா?" என்ற கேள்விக்கு அவர் கொடுத்த பதில் தான் தற்போது வைரலாகி வருகிறது. அதற்கு பதிலளித்த அவர், "அரசியல்வாதிகளும் சினிமாவில் நடிக்க வருகிறார்கள் அல்லவா? அப்படியிருக்க நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் என்ன தவறு?" என்று நேரடியாக பதிலடி கொடுத்தார். இந்த பதில் ரசிகர்களிடையே பெரும் ஆதரவை பெற்றதுடன், சமூக வலைதளங்களில் தீவிரமாக பகிரப்பட்டு வருகிறது.
பஞ்ச் டயலாக்
இதோடு மட்டும் இல்லாமல், அந்த நிகழ்ச்சியில் எம்.எஸ். பாஸ்கர் பேசிய ஒரு பஞ்ச் வசனமும் கவனத்தை ஈர்த்தது. ஏற்கனவே டீசரில் இடம்பெற்ற "ஓம் சக்தி பராசக்தி" என்ற வசனம் விஜய் பேசும் டயலாக்கை குறிப்பதாக ரசிகர்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர். இதற்கு தொடர்ச்சியாக அவர் "ஓம் சக்தி பராசக்தி... டிஎன் 2026 வெற்றி" என்று கூறியதும், இது மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்த படம் அரசியல் பின்னணியுடன் உருவாகி இருப்பதால், பலரும் இது நடிகர் விஜயை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாக கூறி வருகின்றனர். குறிப்பாக நட்டி நட்ராஜின் லுக், அவருக்காக வைக்கப்பட்ட கட்அவுட்கள், உடல் மொழி போன்றவை எல்லாம் விஜயை நினைவூட்டுகிறது என்ற கருத்து பரவலாக பேசப்படுகிறது.
ஆனால் இந்த விமர்சனங்களுக்கு இயக்குனர் உமாபதி ராமையா தெளிவான விளக்கம் அளித்துள்ளார். "இந்த படம் யாருடைய வாழ்க்கையையும் அடிப்படையாக வைத்து எடுக்கப்படவில்லை. ட்ரெய்லரை பார்த்து மக்கள் தாங்களாகவே கற்பனைகளை உருவாக்கிக்கொள்கிறார்கள்.
படம் வெளியான பிறகு உண்மை என்ன என்பதை அனைவரும் புரிந்துகொள்வார்கள் என்று அவர் கூறியுள்ளார். மேலும், "விஜய் எனக்கு மிகவும் பிடித்தவர். அவர் ஒரு சிங்கம் மாதிரி. அவரை கலாய்த்து படம் எடுப்பது சாத்தியமே இல்லை" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், இந்த படத்துக்கு கதை எழுதிய தம்பி ராமையாவும் இந்த சர்ச்சைகளுக்கு பதில் அளித்துள்ளார். "இந்த கதையை நாங்கள் பல வருடங்களுக்கு முன்பே எழுதி முடித்துவிட்டோம். இப்போது நடக்கும் அரசியல் சம்பவங்களுடன் இதை இணைத்து பார்க்க முடியாது. ஒரு சம்பவத்தை படமாக்குவதற்கே மாதங்கள் ஆகும். அப்படி இருக்கையில் சமீபத்திய நிகழ்வுகளை உடனடியாக படத்தில் காட்ட முடியாது" என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும், விஜயை தவறாக காட்டும் எந்த நோக்கமும் இந்த படத்தில் இல்லை என்றும் அவர் உறுதியாக தெரிவித்துள்ளார்.
இப்படத்தில் நட்டி நட்ராஜ் உடன் எம்.எஸ். பாஸ்கர், தம்பி ராமையா, சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த், ஜான் விஜய், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தர்புகா சிவா இசையமைத்துள்ள இந்த படம், அரசியல் மற்றும் காமெடி கலந்த கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
மொத்தத்தில், 'டிஎன் 2026' படம் ரிலீஸுக்கு முன்பே மிகப்பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது. டீசர் மட்டுமே இவ்வளவு சர்ச்சையை உருவாக்கிய நிலையில், படம் வெளியாகிய பிறகு என்ன மாதிரியான எதிர்வினைகள் வரும் என்பது தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
-
விஜய் வெற்றி.. மக்கள் முடிவை தவறுன்னு சொல்ல நீங்க யார்? சிவக்குமார் சொன்னதும் சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் -
பரந்தூர் ஏர்போர்ட் டிராப்? சென்னையை காவு கொடுக்க போகிறாரா விஜய்... நெட்டிசன் வெளியிட்ட பதிவு -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
விஜய் எடுக்கும் ரிஸ்க்.. பரந்தூர் விமான நிலையத்தால் பல விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும்! -
மாட்டிக்கிட்ட பங்கு..பயிர்க் கடன் தள்ளுபடி! ரூல்ஸ் தெரியாமல் சிக்கிய விஜய்! நேக்காக எஸ்கேப்பான திமுக -
TASMAC: பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் ஏன்? யார் யாருக்கு லஞ்சம் போகிறது தெரியுமா? முழு லிஸ்டடால் ஷாக் -
டெல்லியில் முதல்வர் விஜய் - சோனியா, ராகுல் சந்திப்பு திடீர் ரத்து.. என்ன நடந்தது? -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!”












Click it and Unblock the Notifications