கால் முறிந்த நண்பனுக்காக சன் டிவி கயல் செய்த செயல்..சீரியலை போல தான் நிஜ வாழ்க்கையிலும் இருக்கிறாரா?
சென்னை: சன் டிவியில் கயல் சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் சைத்ரா அந்த சீரியலில் அவருடைய தம்பியாக நடித்த அவினாஷ் உடன் வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் பலருடைய கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
எப்போதும் தன்னுடைய பெண் தோழிகளோடு சுற்றி வரும் சைத்ரா தற்போது காலில் அடிபட்டிருக்கும் தன்னுடைய நண்பரோடு கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடி இருக்கிறார்.
வாழ்க்கையில் எந்த சூழ்நிலையிலும் சோகமான நேரத்தில் துணை இருப்பது தான் நட்பு என்பதை சைத்ரா நிரூபித்திருக்கிறார்.

விஜய் டிவியில் அறிமுகம்
சன் டிவி ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் கதாநாயகி சைத்ரா ரெட்டி என்று சொல்வதை விடவும் கயல் என்று சொல்வதே அனைவருக்கும் தெரிந்தது. அவர் தற்போது சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோ ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. கயல் சீரியலில் மூலமாக பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை பெற்றிருக்கும் சைத்ரா கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர்தான். இவர் ஆரம்பத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாண முதல் காதல் வரை என்ற சீரியல் மூலமாக தமிழில் அறிமுகமானார். முதல் சீரியலில் ஏற்கனவே ப்ரீயா பவானி சங்கர் நடித்து வந்த கேரக்டரில் இவர் நடித்திருந்தாலும் இவருக்கு அதிகமான வரவேற்பு கிடைத்தது. முதல் சீரியலில் பாசிட்டிவ் ஆகவே இவர் நடித்திருந்தார்.

யாரடி நீ மோகினி வில்லி
அதைத்தொடர்ந்து சைத்ரா ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியலில் வில்லி ஸ்வேதா கேரக்டரில் நடித்து பிரபலமானார். வில்லத்தனம் செய்யும் நபரையும் பிடிக்கும் என்றால் அது சைத்ராவாகத்தான் இருக்க முடியும். இவர் என்னதான் சீரியலில் வில்லியாக மிரட்டி கொண்டிருந்தாலும் இவரும் அந்த சீரியலில் கதாநாயகி நட்சத்திராவும் நெருங்கிய தோழிகளாக சமூக வலைத்தளத்தை எப்போதுமே பரபரப்பாக வைத்திருந்தனர். ஒரு சில வருடங்களாகவே ஒளிபரப்பாகி வந்த யாரடி நீ மோகினி சீரியல் சமீபத்தில் தான் முடிவடைந்தது. இந்த நிலையில் ஜீ தமிழில் விட்டு தற்போது சன் டிவியில் கதாநாயகியாக சைத்ரா அறிமுகமானார்.

டான்ஸ் வீடியோ
கயல் சீரியலில் சைத்ராவின் தம்பி கேரக்டரில் அவினாஷ் நடித்து வந்தார். ஆனால் சில காரணங்களால் இந்த சீரியலை விட்டு இவர் விலகி இருந்தார். ஆனாலும் இருவரும் நல்ல நண்பர்களாக தான் இப்போது வரைக்கும் இருக்கின்றனர். இந்த சீரியலில் இவர்கள் இருவரும் நடித்துக் கொண்டிருக்கும் போது பல டான்ஸ் ரீல்ஸ் வெளியிட்டு வருவார்கள். சைத்ரா ஏற்கனவே சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருப்பதால் இவருடைய வீடியோக்கள் ரசிகர்களின் மத்தியில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கும் இந்த நிலையில் சமீபத்தில் அபினாஷ்க்கு டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும்போது இரண்டு கால்களும் ஒடிந்து விட்டன. ஆனாலும் போராடி கடைசியில் அந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்று விட்டார். இந்த நிலையில் தனது கால் உடைந்த நண்பன் தன்னால் டான்ஸ் ஆட முடியவில்லையே என்று ஏங்கி விடக்கூடாது என்று நினைத்தாரோ என்னவோ அவினாஷ் வீல்சேரியிலேயே சைத்ராவும் டான்ஸ் ஆடி ரீல்ஸ் வீடியோ எடுத்திருக்கிறார். அதை சமூக வலைதளத்தில் பதிவிட நட்பு என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து பாராட்டி வருகின்றனர்.

கிறிஸ்மஸ் கொண்டாட்டம்
சைத்ராவும் அவினாஷும் வீல் சேரில் இருந்து விளையாண்டய படியே டான்ஸ் ஆடி இருக்கும் வீடியோவை மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்து இருக்கின்றனர். இந்த நிலையில் சைத்ரா முதல்முறையாக தனது வீட்டில் கிறிஸ்மஸ் கொண்டாடி இருக்கிறார். அதில் அவினாஷ் அவரது மனைவி மற்றும் நண்பர்கள் பங்கேற்றுள்ளனர். பின்னர் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் கிப்ட் கொடுத்து கொண்டுள்ளனர். இந்த வீடியோவை சைத்ரா தன்னுடைய youtube பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்..இதை பலரும் பாராட்டி வருகின்றனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications