கருவை கலைக்க முயற்சி..மிரட்டல்..செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யா மீது செல்லம்மா நடிகர் அர்ணவ் புகார்
வயிற்றில் வளரும் தனது குழந்தையை கலைக்க நடிகை திவ்யா நண்பருடன் சேர்ந்து முயற்சி செய்வதாக ஆவடி காவல் ஆணையரகத்தில் செல்லம்மா சீரியல் நடிகர் அர்ணவ் புகார் அளித்துள்ளார். பல ஆண்டுகாலமாக காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடி சில வாரங்களிலேயே காவல்நிலைய படியேறியுள்ளனர்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற 'கேளடி கண்மணி' தொடரில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர்கள் அர்ணவ் மற்றும் திவ்யா.
இந்த சீரியலில் நடித்த போது, இருவரும் நட்பாக பழகிய நிலையில்... ஒரு நிலையில் காதலிக்க தொடங்கினர். 2017 ஆம் ஆண்டு காதலிக்க தொடங்கிய இந்த ஜோடி, 5 ஆண்டுகளுக்கு பின்னர் திருமண வாழ்க்கையிலும் ஒன்று சேர்த்தனர் தற்போது காவல்நிலைய படியேறி தனது மனைவி மீது புகார் அளித்துள்ளார் நடிகர் அர்ணவ்.

செல்லம்மா சீரியல் நடிகர்
சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் நைனா முகமது என்கின்ற அரணவ். இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் செல்லம்மா தொடரில் நடிகராக நடித்து வருகிறார். இவரது மனைவி திவ்யா இவரும் தனியார் தொலைக்காட்சியில் செவ்வந்தி எனும் தொடரில் நடித்து வருகிறார். சன்டிவியில் ஒளிபரப்பான கேளடி கண்மணி டிவி சீரியல்தான் இவர்களை ஒன்று சேர்த்தது.

சீரியல் நடிகை திவ்யா
பெங்களூரில் பிறந்து வளர்ந்த திவ்யா, 'பல்லக்கி' எனும் கன்னட படத்தின் மூலம் தனது திரை வாழ்க்கையை தொடங்கினார். கன்னடத்தில் அவர் நடித்த அக்ஷதீபா சீரியலில், தீபா என்னும் கேரக்டர் அவருக்கு பெரும் புகழை சேர்த்தது.

காதல் திருமணம்
திவ்யா இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறி,இந்தாண்டு ஜூன் மாதம் இருவரும் வீட்டிற்கு தெரியாமல் சென்னை வடக்கு மாவட்டம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இருவரும் மூன்று மாதமாக ஒரே வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர். இதன் காரணமாக நடிகை திவ்யா கருவுற்றுள்ளார். பலரும் வாழ்த்துக்களையும் கூறி வந்தனர்.

கணவர் தாக்கியதாக புகார்
இந்தநிலையில் கணவர் அரணவ் தன்னை தாக்கியதாக கூறியுள்ளார் நடிகை திவ்யா. கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் திவ்யா. இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் திவ்யாவின் கணவரும் நடிகருமான அரணவ் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

கருவை கலைக்க முயற்சி
அதில் தனது மனைவி திவ்யா, அவரது நண்பர் ஈஸ்வர் என்பவருடன் இணைந்து மூன்று மாத கருவை கலைக்க நாடகம் நடத்துவதாக கூறியுள்ளார். எனவே இது சம்பந்தமாக மனைவி திவ்யா,நண்பர் ஈஸ்வர்,இதற்கு துணை போன மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

விவகாரத்து
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் அரணவ், மனைவி திவ்யாவிற்கும் எனக்கும் திருமணம் நடைபெற்ற அன்றுதான் அவளுக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்று ஒரு குழந்தை பிறந்ததும்,விவாகரத்து ஆகியுள்ளதும் தெரிவந்தது. இதனை கேட்டு தான் அதிர்ச்சி அடைந்ததாகவும் எனினும் காதல் காரணமாக இதனை ஏற்றுக்கொண்டு அவருடன் வாழ்ந்து வந்ததாக தெரிவித்தார்.

மனைவியை தாக்கவில்லை
தொடர்ந்து பேசியவர் தன் மனைவியை தான் தாக்கியதாக கூறும் நேரத்தில் நான் அவருடன் இல்லை எனவும் இதற்கான ஆதாரம் என்னிடம் இருப்பதாக கூறியவர் இதனை காவல்துறை கேட்கும்போது காண்பிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மிரட்டல்
நான் அடித்துதான் அவருக்கு ரத்த போக்கு ஏற்பட்டதா அல்லது எனது குழந்தையை அவரது நண்பர் ஈஸ்வர் என்பவருடன் சேர்ந்து கருவை கலைக்க முயற்சி செய்வதாக சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். ஈஸ்வர் என்பவர் தனக்கு நன்மை செய்வதாக கூறி இதுபோன்று செயலில் ஈடுபடுகிறார். தன்னை அடிக்கடி மிரட்டி வருகிறார் என தெரிவித்தார்.

குழந்தை வேண்டும்
நான் விவாகரத்து செய்துவிடுவேன் என எங்கும் கூறவில்லை மனைவி திவ்யாவுடன் சேர்ந்து வாழ்வே விரும்புவதாகவும்,அவர் கருவில் இருக்கும் குழந்தை எனக்கு பத்திரமாக வேண்டும் எனவும் சீரியல் நடிகர் அர்ணவ் கூறியுள்ளார்.

இரு மனங்களை இணைத்த காதல்
திவ்யாவுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் உள்ளது. அதை அவரே நேர்க்காணல்களில் குறிப்பிட்டுள்ளார். அர்ணவ் முஸ்லீம் என்பதால் இவர்களின் திருமணம், முஸ்லீம் மற்றும் இந்து முறைப்படி நடந்துள்ளது. திருமணம் நடந்த போது, இது குறித்து வெளியே சொல்லாத இந்த ஜோடி, கர்ப்பமான பின்னர் தங்களுடைய திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டனர்.

சீரியல் ஜோடியின் பிரச்சினை
5 வருட ஒற்றுமை, அன்பு, அக்கறை, சண்டைகள், வாக்குவாதங்கள் போன்றவற்றுடன் இருந்தாலும், நாங்கள் நிச்சயமாக அதிர்ஷ்டசாலி ஜோடிகளில் ஒருவர் என்று நினைக்கிறேன். நாங்கள் இரண்டு வெவ்வேறு பாரம்பரியங்களில் (இந்து-முஸ்லிம்) திருமணம் செய்து, பல நல்ல உள்ளங்களால் ஆசீர்வதிக்கப்பட்டோம் எனத் தெரிவித்திருந்தார் திவ்யா. இந்த வீடியோ, படங்கள் வெளியாகி சில நாட்களிலேயே பிரச்சினை ஏற்பட்டு காவல்நிலையத்தில் அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
-
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications