Kanmani Serial: சின்ன மாமா.. பெரிய மாமா...நான் கண்ணன் மாமா கூட போறேன்!
சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியலில் ரஷ்யாவில் படித்துவிட்டு வரும் சவுந்தர்யா, தன்னை அழைத்துப் போக காத்திருந்த கதிரேசன், குமரேசன் இருவரையும் பார்த்து, சின்ன மாமா.. பெரிய மாமா, நான் கண்ணன் மாமா கூட போறேன் பை...ன்னு சொல்லிட்டு கண்ணன் மாமா கூட கிளம்பிட்டா.
மச்சினி சவுந்தர்யா வெளிநாட்டில் படிப்பு முடித்து வருகிறாள் என்றவுடன், அவளை அழைத்து வர அக்காக்களின் புருஷன்கள் குமரேசன், கதிரேசன் இருவரும் தனித்தனி காரை எடுத்துக்கொண்டு வந்து காத்து இருக்கும்போதுதான் இப்படி டாடா காண்பித்து விட்டாள் சவுந்தர்யா.
திங்கள் முதல் வியாழன் வரை தினமும் 9 மணிக்கு கண்மணி சீரியல் ஆரம்பத்தில் இருந்து மறு ஒளிபரப்பாகி வருகிறது. சஞ்சீவ் கண்ணனாகவும், நடிகை லிசா சவுந்தர்யாவாகவும் நடித்து இருக்கிறார்கள்.

கண்ணன் மாமா
ரஷ்யாவில் மேற்படிப்பு முடிந்து வருகிறாள் சவுந்தர்யா. சவுந்தர்யாவை சவுண்டு சவுண்டு என்று செல்லமாக அழைக்கும் தாய்மாமன் கண்ணன், சவுந்தர்யாவை அழைத்து வர டிராக்டர் எடுத்துக்கொண்டு கிளம்புகிறான். உள்ளூர் மேள தாளம் குழுவினர் வேறு சவுந்தர்யாவை அழைத்து வர கண்ணன் கூடவே வருகின்றனர்.

படகில் சவுந்தர்யா
கிராமத்துக்கு படகில் வரும் சவுந்தர்யாவை அழைத்து வர, சவுந்தர்யாவின் அக்காக்கள் கணவன்கள் கதிரேசன், குமரேசன் இருவரும் தனித் தனி காரில் வந்து இருவரும் ஒரு ஒப்பந்தம் போட்டுக்கொள்கிறார்கள். அதாவது, நம்ம ரெண்டு பேரும் நம்ம காருக்கு அருகில் நிற்போம். சவுந்தர்யா வந்து எந்த காரில் ஏறுகிறாளோ அவங்க சவுந்தர்யாவை வீட்டுக்கு அழைச்சுட்டு கிளம்பலாம் என்று.

ஹாய் மாமா
படகில் இருந்து கரைக்கு இறங்கி வரும் சவுந்தர்யாவை பார்த்து இருவரும் எக்ஸைட் ஆகி நிற்க, ஹாய் மாமா என்று சின்ன மாமா கார் அருகில் போகிறாள். அப்போது இன்னொரு மாமவைப் பார்த்து ஹாய் பெரிய மாமா என்று நடுவுக்கு வந்துவிட்டாள். இருவரும் யார் காரில் ஏறப்போகிறாளோ என்று எதிர்பார்த்து நிற்கிறார்கள்.

மேள தாளம்
அப்போது திடீரென்று மேள சத்தம் கேட்கிறது. இரு மாமாக்கள் திரும்பிப் பார்க்க மேளம் வாசிப்பவருக்கு நடுவில் வந்து நின்று என்ட்ரி கொடுக்கிறான் கண்ணன். ஹாய் கண்ணன் மாமா என்று ஓடி வருகிறாள் சவுந்தர்யா. சவுண்டு உனக்கு டிராக்டரில் போறது பிடிக்குமே...வா போலாம் என்று கூப்பிடுகிறான்...சரி மாமா என்று சொல்லிவிட்டு.. சின்ன மாமா.. பெரிய மாமா.. லக்கேஜை எடுத்துட்டு வந்துருங்க.. நான் கண்ணன் மாமா கூட போறேன்னு சொல்லிட்டு கிளம்பிட்டா.

சிந்தாமணி பொன்னுமணி
சிறு வயதில் சிந்தாமணியை பொன்னுமணி உப்பு மூட்டை தூக்கிக்கொண்டு நடப்பதை போல சவுண்டை உப்பு மூட்டைத் தூக்கிக்கொண்டு நடந்த கண்ணன்.. இப்போதும் அப்படி தூக்கிக்கொண்டு நடந்துட்டு, பிறகு கரும்பு தோட்டத்தில் கரும்பு சாப்பிட்டுவிட்டு, குச்சி ஐஸும் சாப்பிட்டுவிட்டு ..மெதுவா டிராக்ட்ரில் வீட்டுக்கு போறாங்க.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications