அக்ஷரா இப்படித்தான்..நேரடியாகவே கூறி விட்டேன்.. உண்மையை உடைத்து பேசிய சிபி
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகும் சிபியிடம் ரசிகர்கள் பல்வேறு கேள்விகளை கேட்டு வருகின்றனர்.
அக்ஷராவை பற்றி கேள்வி கேட்ட ரசிகர்களுக்கு சிபி கூறிய பதில் பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

ரசிகர்களை கவர்ந்த கேரக்டர்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி தற்போது முடிவடைந்த பிக் பாஸ் 5 வது சீசனில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்ட சிபிசக்கரவர்த்தி அந்த நிகழ்ச்சியில் மூலமாக அதிக அளவில் ரசிகர்களை பெற்றுவிட்டார். இதற்கு முன்பு இவர் வெள்ளித்திரையில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் அதில் எல்லாம் கிடைக்காத பெயரையும், புகழையும் இந்த நிகழ்ச்சியில் மூலம் இவர் பெற்று விட்டார். இவர் ஆரம்பத்தில் இருந்தே தன்னுடைய தனி திறமையை காட்டி ரசிகர்களின் மத்தியில் தனித்துவத்தை உணர்த்திவிட்டார். நட்பாகவும், சில நேரங்களில் கோபமாகவும், சில நேரங்களில் ஜாலியாகவும் இவர் செயல்பட்ட விதம் ரசிகர்களை அதிகமாக கவர்ந்துவிட்டது.

பணப்பெட்டி யோடு வெளியேற காரணம்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் கடைசி வாரத்தில் வெளியேறி இருந்தாலும் ரசிகர்களின் மனதை வெற்றி பெற்று விட்டு தான் வெளியே வந்துள்ளார். இவர் கடைசி 5 போட்டியாளர்களில் ஒருவராக இருப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் அவர் கடைசி நேரத்தில் தன்னுடைய விளையாட்டை மாற்றி அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கும் விதமாக புது விளையாட்டை தொடங்கிவிட்டார். இவர் பணப்பெட்டி டாஸ்க் வந்தபோது கூட அதை எடுத்துக் கொள்ளாமல் கடைசி வரைக்கும் தான் இருப்பேன் என்று பிடிவாதமாக இருந்தார். ஆனால் திடீரென்று இவருடைய மனதில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக பணப் பெட்டியை தூக்கிக்கொண்டு வெளியே கிளம்பி விட்டார்.

அக்ஷராவை பற்றிய கேள்வி
இவர் 12 லட்சத்தோடு வெளியேறி இருந்தாலும் அடுத்தடுத்த திரைப்படங்களில் பிசியாக இருந்து வருகிறார். இவருடைய வெற்றிக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கும் போது, பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிறகு தன்னுடைய ரசிகர்களிடம் லைவில் பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது ரசிகர்கள் இவர்களிடம் அதிகமான கேள்விகள் கேட்டு இருக்கின்றனர். ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துக் கொண்டிருக்கும் இவர் அக்ஷராவைப் பற்றி ஒரு ரசிகர் கேள்வி கேட்டிருக்கிறார் அதற்கும் பதில் அளித்துள்ளார்.

சிபியின் சிலிர்க்க வைக்கும் கருத்து
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும்போது அக்ஷராவுக்கும் சிபிக்கும் தான் அதிகமாக சண்டைகள் வந்து கொண்டிருந்தது. ஆரம்பத்திலிருந்தே இவர்கள் இருவரும் எலியும், பூனையுமாக தான் இருந்து வந்தனர். ஆனால் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு அக்ஷராவைப் பற்றி அவர் தெளிவாக கூறியுள்ளார். அக்ஷரா ரொம்ப உண்மையாக இருந்தார். ஏற்கனவே அவரிடம் இதை டைனிங் டேபிளில் நான் கூறியிருக்கிறேன். எல்லா இடத்திலும் அவருக்கு அவர் உண்மையாக எல்லாவற்றையும் பண்ணினார். நமக்கு நாம உண்மையா இருக்கிறது தான் முக்கியம். அப்படி அக்ஷரா இருக்கிறார் என்று கூறியிருக்கிறார். இந்த வீடியோக்களை அக்ஷராவின் ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications