நன்றி மறந்துவிட்டாரே நடிகர் அஜித்.. தேனிசை தென்றல் தேவாவிற்கு இரங்கல் கூட இல்லை!
சென்னை: தேனிசை தென்றல் தேவா கொடுத்த பல ஆல்பங்கள் நடிகர் அஜித்குமாரை வேறு லெவலுக்கு உயர்த்தியது. காதல் கோட்டை, வாலி போன்ற அஜித்தை அடுத்த லெவலுக்கு உயர்த்திய படங்களுக்கு இசை சாட்சாத், ராகதேவன், தேவாதான். ஆனால், தேவா மறைந்து 3 நாட்களாகிவிட்ட நிலையிலும் கார் பந்தையத்திற்கு ரெடியாகிவரும் அஜித் சென்னை சென்று அஞ்சலி செலுத்தவில்லை, அவ்வளவு ஏன், ஒரு இரங்கல் வீடியோ கூட வெளியிடவில்லை. கார் ரேசுக்கு ஆதரவு கேட்டு வீடியோ வெளியிட்ட அஜித்தால் தேவாவுக்காக சில நிமிடங்களை ஒதுக்கமுடியவில்லை.

பேஸ்புக்கில் கார்த்திகேயன் ராமதாஸ் என்ற தனியார் நிறுவன ஊழியர் இதுகுறித்து தனது ஆதங்கத்தை இவ்வாறு வெளிப்படுத்தியிருக்கிறார். இதோ அவரது வரிகளில்.. எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு நடிகர் அஜித்குமார் ஒரு உதாரணம். தன்னுடைய ஆரம்ப காலகட்டத்தில் அஜித்குமார் வெற்றி அடைய முக்கிய காரணமாக இருந்தது தேனிசைத் தென்றல் தேவா. அவர் இல்லை என்றால் அஜித் குமாரை பெரும்பாலும் யாரும் விரும்பி இருக்க மாட்டார்கள். அவரை ஒரு Heroic Standard மற்றும் காதல் மன்னன் என்று மக்களின் மனதில் இடம்பெற இசையமைப்பாளர் தேவாவிற்கு முழு பங்கு உண்டு. பின்பு தான் அனைத்தும் இசையமைப்பாளரும் அஜித்துக்கு விதவிதமான இசைகளை அமைத்து திரை உலகத்தின் உச்சத்துக்கு கொண்டு சென்றார்கள்.
ஆனால் அவருடைய மறைவுக்கு அஜித் வராமல் இருந்தது மிகவும் வருத்தத்துக்குரியது இது ஒரு மோசமான எடுத்துக்காட்டு. தேவா மறைவு என்றவுடன் எனக்கு ஞாபகம் வந்தது அஜித்குமார் தான் பின்பு நடிகர் பிரசாந்த். ஏனென்றால் அந்த அளவுக்கு அஜித் குமார்கள் பாடல்கள் வெற்றி அடைந்தன. உதாரணத்துக்கு சில பாடல்களை வரிசை கட்டுகிறேன்:
1. மீனாட்சி மீனாட்சி அண்ணன் காதல் என்னாச்சு
2. கொஞ்ச நாள் பொறு தலைவா
3. ஏப்ரல் மாதத்தில் ஓர் அர்த்த ஜாமத்தில்
4. ஓ நெஞ்சே நெஞ்சே
5. ஒல்லிக்குச்சி உடம்பு காரி
6. குன்றத்துல கோவிலை கட்டி
7. போறாளே போறாளே
8. நலம் நலம் அறிய ஆவல்
9. மேற்கே விதைத்த சூரியனை
10. கண்ணை கசக்கும் சூரியனோ
இந்தப் பாடல்கள் எல்லாம் அஜித்தை ஒரு தகுதியான இடத்துக்கு கூட்டி சென்றன. ஆனால் அதை எல்லாம் அஜித்குமார் மறந்துவிட்டு தன் உச்சத்தை அடைந்த பிறகு எனக்கு யாரும் வேண்டாம் நான் தனியாக போகிறேன் என்று அவர் உண்டு அவர் வேலை உண்டு என்று இருக்கிறார்.
நம் வாழ்க்கையில் நாம் யாரை வேண்டுமானாலும் மறக்கலாம் ஆனால் தாய் தந்தையரையும் நம் வாழ்வில் உயர்வதற்கு ஏணியாக இருந்தவர்களையும் என்றும் மறக்கக்கூடாது ஆனால் அஜித் குமார் அதை செய்து வருகிறார்.
சமூகத்தை மறந்து வருகிறார். தன் சுயநல வாழ்க்கையை விரும்புகிறார். இது நல்லதல்ல. சமூகம் இல்லாமல் நீங்கள் இல்லை. சமூகம் தான் உங்களுக்கு சோறு போட்டது, சமூகம் தான் உங்களுக்கு வாழ்வு கொடுத்தது, அதனால் சமூகத்தில் நடக்கும் துக்க, நல்ல நிகழ்ச்சிகளுக்கு நீங்கள் கலந்து கொள்ள வேண்டும். இல்லை அதில் எனக்கு விருப்பம் இல்லை என்றால் அனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு நடிக்க வராமல் ரசிகர்களிடம் ஆதரவு கேட்காமல் நீங்கள் சேர்த்து வைத்த சொத்தோடு எங்கேயாவது போய் தனியாக வாழ வேண்டும். எங்கள் தமிழ் சமூகத்தை நீங்கள் மறந்து விடுங்கள்.



Click it and Unblock the Notifications
