கதையை சொல்லி கலங்கடிக்கும் சர்வைவர்- 5..கடைசில வச்சாங்க பாருங்க ஆப்பு
சென்னை : முதல் வாரத்திலேயே இவர்கள் சொல்லும் கதையைக் கேட்டு கண்ணீர் குளமாக தேங்கி நிற்கிறது என்று ரசிகர்களை பீல் பண்ண வைத்துவிட்டார்கள் போட்டியாளர்கள்.
எவ்வளவுதான் பிரபலமாக இருந்தாலும் அவர்களின் வாழ்க்கையிலும் பல சோகங்களும் இருக்கத்தான் செய்யும் என்பதை பலரும் கூறிய பிறகு ரசிகர்கள் புரிந்து கொண்டனர்.
இன்று இந்த நிலைக்கு வருவதற்கு தாங்கள் பட்ட கஷ்டங்களையும் ஆரம்பகால துயரங்களையும் சொல்லி பலருக்கும் மோட்டிவேஷனலும் போட்டியாளர்கள் கொடுத்துவிட்டார்கள்.

வாழ்க்கையின் கதைகள்
நான்காவது நாள் எபிசோடில் உடலுக்கும் மனதுக்கும் போட்டியை வைத்து அடிப்படை பொருளுக்காக அல்லல்பட வைத்த சர்வைவர் ஐந்தாவது நாள் டாஸ்கில் தங்களுடைய வாழ்க்கையில் நடந்த சந்தோஷம், துக்கம், சோகம் சிரிப்பு எல்லாவற்றையும் சொல்லலாம் என்று கூறி வாய்ப்பு கொடுத்திருக்கிறது. வாய்ப்பு கிடைத்ததும் அதை விட்டு விடக்கூடாது என்று வரிசை கட்டிக் கொண்டு அனைவரும் தங்களுடைய கதைகளை திறந்து விட்டார்கள். முதல் முதலில் ஆரம்பித்தவர் விஜி தான். இவர் தன்னுடைய இயக்குனரான தந்தை அகத்தியனை பற்றி முதலில் பேசி அதற்குப் பிறகு தன்னுடைய கணவர் மகன் அவர்களின் பாசங்களையும் அழகாக சொல்லி இருந்தார். இவர் சொல்வதை விடவும் இவருக்கு பேக்ரவுண்டில் இவருடைய ஃபேமிலி போட்டோஸ் வந்தது பார்ப்பதற்கு அழகாகத் தான் இருந்தது.

அடையாளத்திற்காக போராட்டம்
அடுத்ததாக ரோபோ சங்கரின் மகளும் பிகில் பட பாண்டியம்மாவான இந்திரஜா சங்கர் தன்னுடைய பீலிங்கை கொட்ட ஆரம்பித்து விட்டார். 19 வருடங்களாக தன் தாய் தந்தையின் அரவணைப்பில் இருந்த இவர் இந்த நிகழ்ச்சியின் அழைப்பு வந்ததும் முதலில் என்னால் போக முடியாது என்றுதான் கூறியிருக்கிறாராம். அவருடைய அம்மா தான் அவருக்கு ஆறுதல் சொல்லி உன்னால் முடியும் என்று முதலில் பேசியிருக்கிறார். அதற்குப் பிறகு அவருடைய அப்பா வான ரோபோ சங்கர் உனக்கான அங்கீகாரம் கண்டிப்பாக கிடைக்க வேண்டுமென்றும் உன் மீது நம்பிக்கை இருக்கிறது என்று நம்பிக்கையோடு வழி அனுப்பி வைத்திருக்கிறார். இந்திரஜா என்றால் யார் என்கிற அடையாளத்திற்காக இங்கே வந்திருக்கிறேன் என்று கதையை முடித்துக் கொண்டார்.

பாசம் கண்களில் தெரிகிறது
அடுத்ததாக காயத்ரி இவர்தான் இந்த டீமின் தலைவராக இருந்தாலும் இன்று ஒரு பிரளயத்தை ஏற்படுத்தி விட்டார். ஒரு சின்ன பிரச்சினைக்கு இவர் நேரடியாக பேசாமல் கோபப்பட்டு கொண்டு சென்று கொண்டது, அனைவருக்கும் சிறு வருத்தமாக இருந்தாலும் ஒருவழியாக அனைவரும் சேர்ந்து இவரை சமாதானப் படுத்தி விட்டார்கள். கோபம் குறைந்து விட்டது என்று இவர் கூறி இருந்தாலும் அவருடைய முகத்தில் அதற்கான எந்த ஒரு அறிகுறியும் தென்படவில்லை. ஆனால் டாஸ்க் என்று வந்ததால் தன்னுடைய கதையை கூற அவரும் ரெடியாகிவிட்டார். எங்க அப்பா எங்களை விட்டு பிரிந்து பதினைந்து வருஷம் ஆச்சு. அம்மாதான் எல்லாம் மாடலிங் பக்கம் போனேன் ஏராளமான கிண்டல்களை சந்தித்திருக்கிறேன். அங்கே சிறிய உடைகளை அணிவதை பார்த்து பலரும் தப்பாக பேசியிருக்கிறார்கள். எனக்கு என் தம்பி மகன் மாதிரி. அவனுக்காக நான் பல விஷயங்களை தியாகம் செய்திருக்கிறேன். ஆனால் அவன் பல சமயங்களில் என்னை காயப்படுத்தி விடுவான் என்று இவர் கூறும் போது ஒரு அக்காவின் பாசம் அவருடைய கண்களில் தெரிகிறது. அனிமல் ஃபார்ம் வைக்கிறது தான் என்னோட ஆசை என்று கூறியிருக்கிறார்.

தூங்குவதும் சுகம்தான்
சகா, வடசென்னை படங்களில் நடித்த சரண் அடுத்ததாக தன்னுடைய கதையை ஆரம்பித்தார். இவர் பெரம்பூர் ஏரியாவை சேர்ந்தவராம். இவருடைய அப்பாவுக்கு தான் நடிக்க வேண்டுமென்று ரொம்ப ஆசையாம் அவர் காதல் திருமணம் செய்து வாழ்க்கையில் செட்டில் ஆனதும் அதற்கான வாய்ப்புகள் அவருக்கு கிடைக்காமல் போய்விட்டதாம். அதனால் தன்னுடைய ஆசையை தன்னுடைய மகன் நிறைவேற்ற வேண்டுமென்று இவருக்கே தெரியாமல் இவருடைய போட்டோ வை பல ஏஜெண்டுகளிடம் கொடுத்திருக்கிறார். ஆனால் ஆரம்பத்தில் இவருக்கு நடிப்பது அந்த அளவுக்கு பிடிக்காதாம். தூங்குவதுதான் ரொம்பவே பிடிக்கும். சூட்டிங் போகணும் என்றால் சீக்கிரமாக எந்திரிக்கணும் அதனால் அதனை விருப்பமில்லாமல் இருக்கிறார். பிறகு நாட்கள் செல்லச் செல்ல தான் இந்த சினிமாவோட மதிப்பு என்னன்னு தெரிந்திருக்கிறது என்று தனக்கே உரிய அந்த க்யூட்டான சிரிப்போடு முடித்துவிட்டார்.

பக்கா 90ஸ் கிட்ஸ்
இவர்கள் அனைவரும் கண்ணீர் கலந்த கதைகளை கூறிக் கொண்டிருப்பதை சிரித்த முகமாக பார்த்துக்கண்டிருந்த ராம் உங்க கண்ணீர் கதைய எல்லாம் கேட்கும் போது எனக்கு கிடைத்திருக்கிறது நல்ல ஆப்பர்சூனிட்டி தான். சென்னை வந்து மாடலிங் பண்ணினேன் மெட்ராஸ்ல வாய்ப்பு கிடைச்சது என்னுடைய திறமைக்கு பெரிய விஷயம்தான். இனியும் நல்ல வாய்ப்புகள் வரும்னு நம்புறேன் என்று சிரிப்பு மாறாமல் கூறிவிட்டார். அடுத்ததாக பேசிய உமாபதி எல்லோரும் அழுகாச்சி சீன்களில் பேசிக்கொண்டிருந்தால் சூழ்நிலை மாறிவிடும் என்று நினைத்து விட்டார் போல, சின்ன வயசுல நல்லா படிப்பேன். ஓவர் தன்னம்பிக்கை காரணமாக பத்தாவதுல படிப்பு போச்சு, அப்படியே ஆர்வமும் போச்சு 90ஸ் கிட்ஸ் செய்கிற எல்லா சேட்டையும் செய்வேன். பக்கத்து வீட்டு காலிங் பெல்லை அடித்து விட்டு ஓடுவது,வாடகை சைக்கிளை எடுத்துக் கொண்டு ஊர் ஊராக சுற்றுவது என ஜாலியான தன்னுடைய அனுபவங்களை கூறிக்கொண்டிருந்தார். கடைசியாக நான்தான் கோளாறு பிடித்த ஆசாமி என்று பார்த்தால் இங்கு வந்து பாத்தா மொத்த டீமும் அப்படித்தான் இருக்கு. இப்பதான் எனக்கு ஆறுதலாக இருக்கு என்று உமாபதி சொல்ல அதற்கு இந்திரஜா அப்படி பெருமையா சொல்லாதீங்க ப்ரோ என்று ஜாலியாக கலாய்த்துக் கொண்டு இருக்கிறார்.

எங்க பக்கமும் எல்லாம் இருக்கு
காடர்கள் டீம் ஒருவழியாக தங்கள் கதையை முடித்துவிட வேடர்கள் டீம் நாங்களும் இருக்கிறோம் என்று அவர்கள் கதையை தொடங்கிவிட்டார்கள். வேடர்கள் அணியில் முதலாவதாக ஐஸ்வர்யா தன்னுடைய ஸ்போர்ட்ஸ் திறமைகளையும், அழகாக அவருடைய பெற்றோர்கள் இவரை ஒவ்வொரு கிளாசில் சேர்த்து விட்டதை கூறிக்கொண்டிருந்தார். அவருக்கு பேக்ரவுண்டில் இவர் செய்த சாகசங்களையும் பரிசு வாங்கிய சில போட்டோக்களும் வந்து கொண்டிருந்தது. அடுத்ததாக ஆரம்பித்த நாராயணன் இனிது இனிது திரைப்படத்தில் தான் நடித்த அனுபவங்களையும் தன்னுடைய தாயின் உடல் நிலையைக் குறித்தும் தழுதழுத்த குரலில் ஃபீலாக பேசி பீல் பண்ண வைத்துவிட்டார்.

வைராக்கியம் பெருசுதான்
மைகே இல்லாவிட்டாலும் நம்முடைய குரல் கணீர் தான் என்று மதுரை நாயகி பார்வதி தன்னுடைய அப்பாவின் மறைவு பற்றியும் அதற்குப் பிறகு நான் அழுகவே இல்லை. சாதித்து தான் காட்டுவேன் என்று தன்னுடைய தன்னம்பிக்கையையும் வெளிப்படுத்தினார். அவரைத் தொடர்ந்து பெசன்ட் ரவி மீனவ குடும்பத்தில் பிறந்து படிப்பு வராததால் அண்ணனோட மெக்கானிக் ஷெட்டில் வேலைக்கு சேர்ந்து, அதற்குப் பிறகு சினிமாவில் நுழைந்த கதையை கூறிக்கொண்டிருந்தார். கடைசியாக தன்னுடைய மகள் காலேஜில் புரொஃபேசராக இருக்கிறார் என்று கூறி அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார். இவரை தொடர்ந்து பாசத்தை பிழிந்த அஜ்மத் என் அண்ணனை அப்பான்னு சொல்லலாம். அந்த அளவுக்கு என்ன நல்லா படிக்க வைத்தார் என்று அண்ணனின் பாசத்தையும் அதற்குப்பிறகு வல்லினம் திரைப்படத்தில் நடிப்பதற்கு கிடைத்த வாய்ப்பையும், திருமணத்திற்கு முன்பு இவருடைய மனைவியின் முதல்முறையாக குரலை கேட்ட தருனத்தையும் கூறியிருந்தார். தன்னுடைய மகளின் மீது இவர் வைத்திருக்கும் அளவுகடந்த பாசத்தை இவர் ஃபீலிங்கை வைத்து அனைவரும் புரிந்து கொள்ள முடிந்தாலும் இவரும் வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார்.

எலிமினேஷன் இருக்கா
ஒருவழியாக கதைகளைச் சொல்லி அனைவரையும் கண்கலங்க வைத்து கொண்டிருந்தவர்களுக்கு கதிகலங்க வைக்கும் டாஸ்கை கடைசியாக சர்வைவர் கொடுத்திருக்கிறது. இந்த வார எலிமினேஷன் லிஸ்ட் ரெடி பண்ண சொல்லி விட்டார்கள். யார் எலிமினேஷன் என்று நீங்களே முடிவு எடுத்து சொல்லுங்கள் என்று கூறவும் அனைவருக்கும் ஒரு பீதி ஏற்பட்டிருக்கிறது. முதல் வாரத்திலேயே எப்படி ஒருவருடைய கேரக்டரில் முடிவு செய்யமுடியும் என்று சிலர் கூறிக் கொண்டிருந்தாலும் எப்படியும் நான் இந்த வார எலிமினேஷனில் இருக்கிறேன் என்று விஜே பார்வதி வம்படியாக வந்து கூறிக் கொண்டிருக்கிறார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications