Coolie 7th day collection: ஒரு வார சம்பவம்! புதன் கிழமை வசூல் இவ்வளவுதானா? ஆனால், ஆறுதல் இருக்கு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்த 'கூலி' திரைப்படம் வெளியாகி ஒரு வாரம் ஆன நிலையில் படத்தின் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன. முதல் நான்கு நாட்களில் பிரம்மாண்டமாகத் தொடங்கிய வசூல் வார நாட்களில் சற்று சரிவை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வசூலை அதிகரிக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் புதிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

Coolie Rajinikanth

கூலியின் வசூல் நிலவரம்

'கேஜிஎஃப் 2', 'பதான்', 'ஜவான்' போன்ற படங்கள் வார நாட்களிலும் தொடர்ந்து நல்ல வசூலை ஈட்டி ₹1000 கோடி சாதனையை எட்டின. ஆனால் ரஜினிகாந்த், அமீர் கான், நாகார்ஜுனா போன்ற பல நட்சத்திரங்கள் நடித்த 'கூலி' திரைப்படம் முதல் நான்கு நாட்களில் பெரிய வசூலைக் குவித்தாலும் வார நாட்களில் சற்று திணறி வருகிறது.

₹464.5 கோடி வசூல்

Sacnilk இணையதளத்தின் தகவலின்படி 'கூலி' திரைப்படம் 7வது நாளில் இந்தியாவில் ஒட்டுமொத்தமாக வெறும் ₹6.5 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. மொத்தமாக இந்தியாவில் இதன் வசூல் ₹222.5 கோடியாக உள்ளது. ஆனால் உலகளவில் படம் ₹464.5 கோடி வசூல் ஈட்டியிருப்பதாக கூறப்படுகிறது. இது இந்தியாவை விட வெளிநாடுகளில் ரஜினியின் செல்வாக்கு அதிகம் என்பதை காட்டுகிறது.

சன் பிக்சர்ஸின் முயற்சிகள்

'ஏ' சான்றிதழ் சர்ச்சை: 'கூலி' திரைப்படம் அதிகமான வன்முறைக் காட்சிகள் காரணமாக தணிக்கைக் குழுவால் 'ஏ' சான்றிதழ் பெற்றது. இதனால் குடும்பத்துடன் படம் பார்க்க வருபவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் 'யு/ஏ' சான்றிதழ் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

சென்சார் போர்டு பதில்

தணிக்கைக் குழு தயாரிப்பு நிறுவனம் செய்யச் சொன்ன திருத்தங்களை ஏற்க மறுத்ததால் தான் 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டது என்று தெரிவித்துள்ளது.'ஏ' சான்றிதழால் வசூல் பாதிக்கப்பட்டதால் சன் பிக்சர்ஸ் இரண்டாவது வாரத்தில் குழந்தைகளுடன் பெற்றோர்கள் படம் பார்க்க வருவதற்கான வேலைகளை செய்து வருகிறது.

போலி வசூல் குற்றச்சாட்டுகள்

'கூலி' படத்தின் வசூல் போலி என்று சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. சிலர் 'லியோ' படத்தின் வசூலையே போலி என்று கூறி வரும் நிலையில் 'கூலி' வசூல் அதனை விட மோசமாக இருக்கும் என கூறி வருகின்றனர். அதேபோல இந்த ஆண்டு வெளியான 'கேம் சேஞ்சர்' பட வசூலைப் போல 'கூலி' படத்திற்கும் போலி போஸ்டர்கள் வெளியிடப்படுவதாகவும் சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

ரசிகர்கள் 'கூலி' படத்தின் ஒரு வார வசூல் அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று வெளியிடும் என எதிர்பார்க்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+