கூலி வசூல்.. விஜய்யை பார்த்து ஏன் கதறுறீங்க? ரஜினி ரசிகர்கள் பற்றி ப்ளூ சட்டை மாறன் ட்வீட்! குவியும் கமெண்ட்ஸ்
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இது ஒருபுறம் இருக்க 'கூலி' படம் 'லியோ' படத்தின் வசூல் சாதனையை முறியடித்துவிட்டதா? என்பது பற்றிய விவாதம் சமூக வலைத்தளங்களில் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் "கூலி' படத்தின் வசூல் மற்றும் ரஜினி - விஜய் ரசிகர்கள் பற்றிய ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

கூலி படத்திற்கு விமர்சனம்
ரஜினியின் படம் என்றாலே ரசிகர்களுக்கு ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அதுவும் 'மாஸ்டர்', 'விக்ரம்', 'லியோ' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் ரஜினியுடன் இணைந்து 'கூலி'யை இயக்கியதால் ரசிகர்களின் நம்பிக்கை உச்சத்தில் இருந்தது. ஆனால் கடந்த 14 ஆம் தேதி வெளியான 'கூலி' திரைப்படம் ரசிகர்களுக்கு ஒரு பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. அரத பழசான கதை மற்றும் எந்த சுவாரஸ்யமும் இல்லாத திரைக்கதை என படம் விமர்சகர்களால் விமர்சிக்கப்பட்டது. ஆனால் ரஜினியின் ரசிகர்கள் இந்த படத்தை பாராட்டி வருகிறார்கள்.
வசூல் சாதனை
படம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தாலும் வசூலில் தொடர்ந்து ஏறுமுகமாகத்தான் இருக்கின்றன. 'கூலி' முதல் நாளில் ₹151 கோடி வசூலித்து 'லியோ'வின் ₹148 கோடி வசூல் சாதனையை முறியடித்தது. இதுவரை இப்படம் மொத்தம் ₹400 கோடி உலகம் முழுவதும் வசூலித்திருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
ப்ளூ சட்டை மாறனின் ட்வீட்
'கூலி' படம் வெளியானதில் இருந்து ரஜினி மற்றும் விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மோதி வருகின்றனர். இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் "உங்க தலைவரை இந்திய சூப்பர் ஸ்டார்னு சொல்றீங்க. அப்படிப் பாத்தா அமிதாப் பச்சன், ஷாருக் கான், சல்மான் கான் கூடத்தான மோதனும்? உங்க தலைவரை விட வயசுலயும் சினிமா அனுபவத்துலயும் பல வருசம் சின்னவரா இருக்கற விஜய்யை பாத்து ஏன் ஓயாம கதறிட்டு இருக்கீங்க?" என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
சர்ச்சை
'கூலி' படத்தின் வசூல் ஒருபுறம் இருக்க ப்ளூ சட்டை மாறனின் இந்த ட்வீட் ரஜினி மற்றும் விஜய் ரசிகர்களுக்கு இடையே ஒரு பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது. சமூக வலைத்தளங்களில் இது ஒரு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கூலி கதை மற்றும் நடிகர்கள்
ரஜினிகாந்த் தனது 171வது படமான 'கூலி'யில் 'தேவா' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சென்னையில் மேன்சன் நடத்தி வரும் தேவா தனது நண்பர் ராஜசேகரின் மர்ம மரணத்தை விசாரிக்கிறார். ராஜசேகர் நாகார்ஜூனா நடத்தும் ஹார்பரில் வேலை செய்து வருகிறார். இந்த விசாரணையில் தேவா பல சிக்கல்களை சந்திக்கிறார். இந்தப் படத்தில் தேவாவின் இளம் வாழ்க்கை மற்றும் சைமனுக்கும் தேவாவுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதைப் பற்றியதுதான் கதை.
நடிகர்கள்: ரஜினிகாந்துடன் நாகார்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், உப்பேந்திரா, சௌபின் ஷாகீர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். பாலிவுட் நடிகர் அமீர் கான் ஒரு கேமியோ வேடத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications