Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Rasaathi Serial: அதென்னய்யா மொடக்கு.. மடக்குன்னு ஒரு பேரு.. ராசாத்தியில் கலக்கும் ரசகுல்லா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் ராசாத்தி சீரியல் ரொம்ப பொருட் செலவில் பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது. நடிகர்கள் விஜயகுமார், செந்தில் இருவரும் ராசாத்தி சீரியலின் எதிர்பார்ப்பு நட்சத்திரங்களாக இருந்தனர்.

நகைச்சுவை நடிகர் செந்தில் சின்னத்திரைக்கு முதன் முதலாக வந்த சீரியல் களமும் ராசாத்தி தான். பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்த சமயம், விஜயகுமார் சீரியலில் இல்லை.. செந்திலும் என்ன ஆனார் என்று தெரியவில்லை.

ராசாத்தி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை பாவனி சீரியலில் இருந்து விலகிக் கொண்டார். இவருக்கு பதிலாக கொல்கத்தா ரசகுல்லா மாதிரி கொல்கத்தாவை சேர்ந்த அழகான தேப்ஜானி மொடக் இணைந்து இருக்கார். நல்ல உயரம். அழகாக இருக்கும் இவரின் செல்லப் பெயர் கின்னி.

பெங்காலி படம்

பெங்காலி படம்

கின்னி பெங்காலி படத்தில் நடிகையாக அறிமுகம் ஆனவர். பின்னர் பெங்காலி சானல்களில் சீரியல்களிலும் நடித்து இருக்கார். இவர் பெரும்பாலும் சரித்திரம் தொடர்பான சீரியல்களில் நடித்து வந்திருக்கிறார். பெங்காலி சானல் ஒன்றின் மகாபாரதம் தொடரில் திரௌபதியாக நடித்ததில் கொல்கத்தா மக்களுக்கு இவர் மிகவும் பிடிச்ச நடிகையாகி புகழ் அடைந்து இருக்கார்.

பார்பி டால் கண்ணு

பார்பி டால் கண்ணு

கின்னியின் கண்கள் பார்பி டால் கண்ணு மாதிரி அழகாக உருளும். இது சில கதாபாத்திரங்களுக்கு பிளசாகவும் சில கதாபாத்திரங்களுக்கு மைனஸாகவும் இருந்து இருக்கிறதாம். ஆனால், பார்த்தவுடன் ரசிகர்கள் இவரைப் புகழ்வது உங்க கண் ரொம்ப அழகா இருக்கு எனதுதானாம். சென்னையில் இன்னும் தனியாக எங்கும் வெளியில் செல்லவில்லை என்றும், மொழி தெரியாதது பெரும் பிரச்சனையாக இருப்பதாகவும் சொல்கிறார்.

சென்னை பசங்க எப்படி?

சென்னை பசங்க எப்படி?

என்னை எப்படி இருக்கிறது என்று கேட்டபோது... சென்னை சூப்பர்...பசங்க நல்லா இருக்காங்க.. பசங்க தாடி செம கியூட் என்று சொல்கிறார். பசங்க ரொம்ப சைட் அடிக்காம டீசண்டா பார்க்கறாங்க... சில பசங்க அவங்கவங்க தங்கள் வேலையைப் பார்க்கறாங்க.. நல்ல பசங்க என்றும் சர்டிஃபிகேட் தருகிறார். விருப்பமான உணவு சென்னை மசால் தோசை என்று சொல்கிறார் கின்னி.

பெங்காலி சீரியல் தமிழ் சீரியல்

பெங்காலி சீரியல் தமிழ் சீரியல்

தமிழ் சீரியல், பெங்காலி சீரியல் எது ரொம்ப பிடிச்சு இருக்கு என்று கேட்டால்...தமிழில் ராசாத்திதான் ஆரம்பிச்சு இருக்கேன். இன்னும் நடிச்சால்தான் தெரியும்.. மொழி இன்னும் கத்துக்க முடியலை. பிராம்ப்ட்டிங் கொடுக்கும்போது வாயசைக்க இன்னும் இன்னும் பிராக்டீஸ் பண்றேன். போகப் போகத்தான் தமிழ் சீரியல் எப்படின்னு தெரியும் என்று சிரிக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+