40 வயது ஹீரோவுக்கு ஜோடியாகும் தெய்வமகள் பட சாரா.. விக்ரமின் ரீல் மகள் இப்போ கதாநாயகி
சென்னை: நடிகர் விக்ரம் நடித்த தெய்வமகள் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சாரா இப்போது கதாநாயகியாக மாறி இருக்கிறார். அதுவும் 40 வயது ஆன ஹீரோவுக்கு தான் அவர் ஜோடியாக நடிக்க இருக்கிறாராம். இது குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகம் ஆகும் சில நடிகைகள் சில வருடங்களிலேயே ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு உருமாறி வருகிறார்கள். அந்த திரைப்படத்தில் பார்த்த குழந்தையா இது? என்று சொல்லும் அளவிற்கு சிலருடைய மாற்றம் இருக்கிறது. குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான பல நடிகைகள் டாப் கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கிறார்கள். அந்த வரிசையில் இப்போது விக்ரம் நடித்த தெய்வமகள் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சாராவும் இணைந்து இருக்கிறார்.

தெய்வமகள் பட நடிகை
தெய்வமகள் படத்தில் மட்டுமல்லாமல் பிளாக் ஃப்ரைடே, காலோ, ரவுடி ரத்தோர் மற்றும் பல படங்களில் நடித்திருக்கிறார். அது மட்டும் அல்லாமல் சாரா 18 மாத குழந்தையாக இருக்கும்போதே விளம்பரங்களில் நடிக்க தொடங்கி விட்டாராம். அதுவும் இவர் நடிகர் ராஜ் அர்ஜுனனின் மகள் தான். ஹிந்தியில் 2011 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன 404 என்கிற திரைப்படத்தில் தான் அறிமுகமாகி இருக்கிறார். அதை அந்த திரைப்படத்தில் இவருடைய நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.
குழந்தை நட்சத்திரம்
அதைத் தொடர்ந்து தெய்வ திருமகள் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சாரா சைவம் திரைப்படத்திலும் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அதற்கு பிறகு தமிழ், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பலமொழிகளிலும் சுமார் 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். இப்போது அவருக்கு 18 வயது ஆகிவிட்டதால் நல்ல கதை அம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிக்க தொடங்கி இருக்கிறார்.

ரன்வீர் சிங்க்கின் ஜோடி
இந்த நிலையில் தான் இவர் இப்போது 40 வயதான நடிகர் ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக துரந்தர் என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். அது குறித்த புகைப்படங்கள் இப்போது வெளியாகி பலரையும் வியக்க வைத்திருக்கிறது. ரன்வீர் சிங்கின் 40வது பிறந்த நாளில் வெளியிடப்பட்ட துரந்தர் படத்தில் டீசரில் இருவரும் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்கள் இடம் பெற்று இருக்கிறது. சாரா இப்போது ஹிந்தியில் கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கிறார். அதுபோல தமிழில் சாரா கடைசியாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முதல் பாகம் மற்றும் இரண்டாவது பாகத்தில் நடித்திருந்தார். அதோடு இன்னொரு திரைப்படத்திலும் நடித்திருந்தார். அந்த திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications