Maaman Box Office Collection Day 2: மாமன் திரைப்படம் 2வது நாளில் இத்தனை கோடி வசூலா? சூரி சூப்பர்தான்
சென்னை: மாமன் திரைப்படம் கடந்த இரு நாட்களில் எத்தனை கோடி வசூலானது என்பதை தெரிந்து கொள்ளலாம். மிகவும் எமோஷனலான திரைப்படமாக இது உள்ளது.
மதுரையைச் சேர்ந்தவர் சூரி. இவர் திருமதி செல்வம் எனும் சீரியலில் சஞ்சீவின் மெக்கானிக் ஷெட்டில் பணியாற்றுபவராக நடித்திருந்தார்.

இதையடுத்து சூரி, வெண்ணிலா கபடி குழு எனும் திரைப்படத்தில் பரோட்டா சாப்பிடும் போட்டியில் நடித்து புகழ் பெற்றதால் அவர் பரோட்டா சூரி என அழைக்கப்படுகிறார். இவர் நிறைய படங்களில் காமெடியனாக நடித்திருந்தார். இவரும் சிவகார்த்திகேயனும் நடித்தால் அந்த காம்பினேஷன் நன்றாக இருக்கும்.
இவர் வெற்றி மாறனின் விடுதலை பார்ட் 1 படத்தில் நடித்துள்ளார். பின்னர் கருடன், கொட்டுக்காளி, ஏழு கடல் ஏழு மலை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் மதுரையில் அம்மன் உணவகம் என்ற ஹோட்டலை வைத்து நடத்தி வருகிறார்.
இவர் தனது 6 உடன்பிறப்புகளுடன் ஒரே வீட்டில் தனது தாயுடன் வசித்து வருகிறார். தற்போது அவர் நடிப்பில் மாமன் எனும் படம் வெளியாகியுள்ளது. இந்த படம் வெற்றியடைய ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டனர். இதற்கு சூரி கடுமையாக கோபப்பட்டார். உங்களை எல்லாம் என் தம்பிகள் என சொல்வதற்கே வெட்கமாக இருக்கிறது. இதென்ன முட்டாள்தனம் என கடுமையாக சாடியிருந்தார்.
இந்த மாமன் படத்தில் ராஜ்கிரண், ஐஸ்வர்யா லட்சுமி, ஸ்வாசிகா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் கதையை சூரி தனது சொந்த வாழ்க்கையில் இருந்து எழுதியதாக தெரிவித்தார்.
இந்த திரைப்படத்தை பார்த்து தனது மாமாவை நினைத்து அழுத சிறுமிக்கு நடிகர் சூரி வீடியோ காலில் வந்து ஆறுதல் கூறினார். குடும்ப உறவுகள் குறித்து பேசும் படமாக எமோஷனலாக எடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த படம் வெளியான முதல் நாளில் ரூ 1.75 கோடி வசூலை குவித்தது. அது போல் இரண்டாவது நாளில் 2.38 கோடியை வசூலித்தது. ஆக மொத்தம் இரு நாட்களில் ரூ 4.13 கோடி வசூலானது. மாமன் படம் தமிழகத்தில் 34,73 சதவீத தியேட்டர்களில் வெளியாகியுள்ளது.
சென்னையில் 49 சதவீதமும் பெங்களூர் 12 சதவீதமும் மதுரையில் 52 சதவீதமும் கோவையில் 36.50 சதவீதமும் பாண்டிச்சேரியில் 34.50 சதவீதமும் சேலத்தில் 26.50 சதவீதமும் தியேட்டர்களில் வந்துள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications