Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கம்பீர கவர்ச்சி.. கவர்ந்திழுக்கும் குரல்.. அட்டகாச நடிப்பு.. மொத்தமாக வசீகரிக்கும் தேவிப்பிரியா

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Actress Devipriya: சந்திரகுமாரி சீரியலில் வெளுத்து வாங்கும் நடிகை தேவிப்பிரியா- வீடியோ

    சென்னை: அட்டகாசமான குரல்.. தேனிலும் இனிய குரல்.. கூடவே கம்பீரமும் அப்பிக் கொள்ளும்.. அசரடிக்கும் அழகு.. சிரித்தாலும் சரி, அழுதாலும் சரி.. நடிப்பின் நவரசத்தையும் மொத்தமாக பிழிந்து கொடுக்கும் அசாத்தியம்.. அதுதான் தேவிப்பிரியா.

    இவர் நாயகியாக நடித்தாலும் சரி, கேரக்டரில் வந்தாலும் சரி, வில்லியாக வெளுத்து வாங்கினாலும் சரி.. லயித்துப் போய் ரசிக்க வைப்பார்.. அதுதான் தேவிப்பிரியா. இவர் நடித்த சீரியல் எதுவும் சோடை போனதில்லை. சோர்ந்து போனதில்லை. காரணம் தேவிப்பிரியா.

    மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு நச்சென்று ஒரு ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார் சந்திரகுமாரி சீரியல் மூலமாக. கொஞ்சம் உப்பினாற் போல காட்சி தந்தாலும் கன்னமெல்லாம் பன் போல உப்பிக் கிடந்தாலும்.. அதே தேவிப்பிரியாதான்.. அதே கம்பீரம்தான்.. அதே அழகும்தான்.

    கன்னல் தமிழ்

    கன்னல் தமிழ்

    சுத்தமான மதுரைக்காரப் பெண் தேவிப்பிரியா. அதை பெருமையுடன் அவர் பலமுறை சொல்வார். தமிழை அப்படி அழகாக உச்சரிப்பார், தெளிவாகப் பேசுவார். தமிழின் காதலி அவர்.

    கவர்ந்திழுக்கும் கவர்ச்சி

    கவர்ந்திழுக்கும் கவர்ச்சி

    சின்னத்திரைக்கு வருவதற்கு முன்பு பெரிய திரையில் சற்று பயணித்தார். ஆனால் அவரது கவர்ச்சிக்குத்தான் அங்கு முக்கியத்துவம் கொடுத்தார்களே தவிர நடிப்புக்கு யாரும் முக்கியத்துவம் தர வில்லை. இதனால் நல்ல வேடங்கள் கிடைக்கவில்லை. இந்த நிலையில்தான் சின்னத்திரையில் அவருக்குப் பெரிய பிரேக் கிடைத்தது.

    கவர்ச்சி ஆதிக்கம்

    கவர்ச்சி ஆதிக்கம்

    சந்திரகுமாரியில் வழக்கம் போல தேவிப்பிரியாவின் ஆதிக்கம் அடித்து நொறுக்குகிறது. குழைவான பேச்சும், கணீர் குரலும், திமிரைக் காட்ட வேண்டிய இடத்தில் அதைக் காட்டும் காட்டமும் என பின்னிப் பெடலெடுத்துக் கொண்டிருக்கிறார் தேவிப்பிரியா.

    பாச மலர் கோகிலா

    பாச மலர் கோகிலா

    பாச மலர் சீரியலில் இவர் கோகிலா கேரக்டரில் பலரையும் கவர்ந்திழுத்தவர். அதேபோல செல்லமே சீரியல், வந்தாள் ஸ்ரீதேவி, விதி, லட்சுமி வந்தாச்சு என இவர் வசீகரித்த சீரியல்களின் எண்ணிக்கை பெரியது.

    புல்லரிக்கும்

    புல்லரிக்கும்

    ரோமாபுரிப் பாண்டியனில் இவரது கம்பீரம் பலரையும் மிரட்டியது. அதேபோல தெக்கத்திப் பொண்ணு சீரியலிலும் பிரமாதமான நடிப்பையும், அழகான வசன உச்சரிப்பையும் காட்டி புல்லரிக்க வைத்திருப்பார் ரசிகர்களை.

    ஆணித்தரமான வேடங்கள்

    ஆணித்தரமான வேடங்கள்

    ராதிகாவின் சீரியல்களில் இவருக்கென்று தனி இடம் கிடைக்கும். கொடுத்தாலும் வலுவான கேரக்டரைத்தான் கொடுப்பார் ராதிகா. செல்வி, செல்லமே ஆகியவை இதற்கு சரியான உதாரணங்கள்.

    நல்ல தீனிதான்

    நல்ல தீனிதான்

    சினிமாவில் மிகப் பெரிய இடத்திற்குப் போயிருக்க வேண்டியவர். ஆனால் நமக்காக சின்னத்திரைக்கு வந்து சேர்ந்தார். இப்போது சந்திரகுமாரி மூலம் ரசிகர்களுக்கு நல்லதொரு பொழுதுபோக்குத் தீனியைப் போட்டு்க கொண்டிருக்கிறார். என்ஜாய் ரசிகர்களே.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+