Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டைட்டில் ஜெயிக்கப் போவது இவர்தான்.. ரகசியங்களை உளறிய தனலட்சுமி..இவர் மட்டும் ஓப்பனாக சொல்லிட்டாரே

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய தனலட்சுமி இந்த சீசனில் டைட்டில் யார் ஜெயிக்க போகிறார் என்று தன்னுடைய கருத்தை கூறி இருக்கிறார்.

இந்த ஆறாவது சீசனில் டைட்டிலை அசீம் தான் ஜெயிக்க வேண்டும் என்று தன்னுடைய ஆசைகளை ஓபன் ஆக பேசியிருக்கிறார்.

வீட்டிற்குள் அதிகமாக சண்டை இட்டு வந்தாலும் வெளியே வந்த பிறகு தன்னுடைய கருத்து மாறி இருக்கிறது என்று காரணத்தையும் கூறியிருக்கிறார்.

லைவ் வராத காரணம்

லைவ் வராத காரணம்

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியை விட்டு கடந்த வாரம் வெளியேறிய தனலட்சுமி இப்போதுதான் லைவில் வந்து இருக்கிறார். இதற்கு முன்பு வெளியேறிய போட்டியாளர்கள் அனைவருமே அடுத்த நாளே விஜய் டிவி மற்றும் ஹாட்ஸ்டாரின் சமூக வலைதள பக்கங்களில் லைவில் வந்து ரசிகரின் கேள்விகளுக்கு பதில் அளித்து விடுவார்கள். ஆனால் தனலட்சுமி மட்டுமே இத்தனை நாட்களாக லைவில் வரவில்லை. அதற்கு காரணம் தன்னுடைய குடும்பத்தின் சூழ்நிலை என்று கூறியிருக்கிறார் .ரசிகர்கள் அதிகமாக தன்னை தேடிக்கொண்டிருப்பது எனக்கு சந்தோஷமாக இருந்தது. அதே நேரத்தில் எனக்கு ஒரு சில விஷயங்கள் வீட்டில் செய்ய வேண்டியது இருந்தது. நார்மலான நிலைக்கு வந்த பிறகு இப்போது வந்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

பிடித்த நபர்

பிடித்த நபர்

லைவில் தனலட்சுமி வந்ததும் அவரிடம் பல்வேறு கேள்விகளை ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வந்தார். வீட்டிற்கு உங்களுக்கு யாரை இப்போது ரொம்பவே பிடித்திருக்கிறது என்று கேட்பதற்கு அசீம் தான் எனக்கு பிடித்திருக்கிறது. அசீம் தான் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தேவையான சரியான விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறார். பிக் பாஸ் வீட்டிற்குள் நான் இருக்கும்போது எனக்கு அசீமுக்கும் சில கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் இந்த நிகழ்ச்சிக்கு வெளியே இருந்து நானும் ஒரு ரசிகராக பார்த்தால் அசீம் விளையாட்டு தான் சரியாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.

டைட்டில் வின்னர்

டைட்டில் வின்னர்

அது மட்டுமல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆறாவது சீசனில் டைட்டில் யார் ஜெயிப்பார்கள் என்ற கேள்விக்கு அசீம் தான் வேற யாருமே இல்லை என்று அடித்து கூறுகிறார். பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும்போது அமுதவாணன் அல்லது ஜனனி தான் ஜெயிப்பார்கள் என்று நினைத்திருந்தேன் ஆனால் வெளியே வந்த பிறகு என்னுடைய நினைப்பு மாறிவிட்டது. இப்போது கண்டிப்பாக அசீம் தான் ஜெயிப்பார் என்று தெரிகிறது. ரசிகர்கள் அவருக்கு கொடுக்கும் ஆதரவு மட்டுமல்லாமல் நிகழ்ச்சியில் சுவாரசியத்திற்கு ஏற்ப அசீம் செய்யும் செயல்கள் நாளுக்கு நாள் நிகழ்ச்சியை நகர்த்திக்கொண்டு செல்கிறது என்று விளக்கத்தை கொடுத்து இருக்கிறார்.

மன்னித்து விடணுமாம்

மன்னித்து விடணுமாம்

அதுமட்டுமல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடைசி நாள் வரைக்கும் நான் உள்ளே இருந்து இந்த டைட்டில் ஜெயித்திருந்தாலோ அல்லது மேடையில் நின்று இருந்தாலும் கூட எனக்கு ரசிகர்கள் இந்த அளவிற்கு வரவேற்பு ஆதரவு தத்து இருப்பார்களா என்பது சந்தேகம்தான். ஆனால் நான் பாதியிலே வெளியேறினாலும் இப்போதும் ரசிகர்கள் என்னை தேடிக் கொண்டிருப்பது எனக்கு மகிழ்ச்சி தான். அதுவும் ரசிகர்கள் பலர் இந்த டிடிஎஃப் டாஸ்க்கில் என்னை அதிகமாக தேடிக்கொண்டிருக்கின்றனர். அது எனக்கு மகிழ்ச்சி தான். நான் என்னுடைய சொந்த காரணத்தினால் தான் இத்தனை நாட்கள் லைவ் வர முடியாமல் ஆகிவிட்டதற்கு அதற்கு ரசிகர்கள் என்னை மன்னித்து விடுங்கள் என்றும் கூறியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+