Divyabharathi: பிரபல இயக்குநர் மீது நடிகை திவ்யபாரதி குற்றச்சாட்டு! சோசியல் மீடியாவில் வெளிப்படையான பதிவு
சென்னை: நடிகை திவ்யபாரதியை சோசியல் மீடியா பயன்படுத்தும் பலருக்கும் தெரிந்திருக்கும். இவர் சோசியல் மீடியாவில் பயங்கர ஆக்டிவாக இருந்து வருகிறார். அதேபோல தமிழில் பேச்சிலர், மகாராஜா, கிங்ஸ்டன் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். இந்த நிலையில் இவர் தான் இவர் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் இயக்குநர் ஒருவர் பெண்களை கேலி செய்வது போல பேசியதாக பரபரப்பான போஸ்ட் போட்டு இருக்கிறார். அதற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்
சில வாரங்களுக்கு முன்பு செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகை கௌரி கிஷன் தன்னுடைய உடல் எடை பற்றி பேசிய யூடியுபரை எதிர்த்து தைரியமாக பேசி இருந்தார். அது அந்த நேரத்தில் பெரியதாக பேசப்பட்டது. இப்போது அதை தொடர்ந்து திவ்யபாரதி செய்த செயலும் சோசியல் மீடியாவில் பேசப்படுகிறது. திவ்யபாரதி தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். தெலுங்கில் உருவாகி வரும் கோட் படத்தில் அவர் நடித்து வருகிறார். அந்த படத்தை நரேஷ் குப்பி என்பவர் இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் திவ்யபாரதி நரேஷ் குப்பி பகிர்ந்ததாக ஒரு ஸ்கிரீன் ஷாட்டை தன்னுடைய x பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதில் பெண்களை "சிலகா" ( Chilaka ) போன்ற வார்த்தைகளால் அழைப்பது நகைச்சுவை அல்ல அது பெண்களை இழிவாக பார்ப்பதாகத்தான் தெளிவாக தெரிகிறது. இதுபோல ஒரு தடவை மட்டும் நடக்கவில்லை. சூட்டிங் நடந்த இடத்திலும் அந்த இயக்குநர் பெண்களை அவமதிக்கும் வார்த்தைகளை பயன்படுத்தி வந்தார்.
மேலும் அவர் தான் நேர்மையான சினிமாவை உருவாக்குகிறேன் என்று கூறிக் கொண்டிருக்கிறார். ஆனால் அவர் அந்த கலைக்கு துரோகம் செய்கிறார். அவருடைய நடவடிக்கைகளை நேரில் பார்த்துக் கொண்டிருக்கும் அந்த படத்தின் ஹீரோ எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்தது.

பெண்களை அவமதிக்காத, மரியாதை குறையாத இடங்களில் மட்டும் நான் பணியாற்ற விரும்புகிறேன். ஒரு கலைஞராகவும் ஒரு பெண்ணாகவும் என்னுடைய நிலைப்பாடு இதுதான் என்று அவர் அந்த பதிவில் தெரிவித்திருக்கிறார். திவ்யபாரதியின் இந்த பதிவுக்கு ரசிகர்கள் பலர் அவருக்கு கமெண்ட் கொடுத்து வருகின்றனர். அதேபோல பல பிரபலங்களிலும் அவருக்கு ஆதரவாக கமெண்ட் கொடுத்து சப்போர்ட் பண்ணி வருகிறார்கள். இதுகுறித்து அந்த இயக்குநர் என்ன பதில் கொடுக்கப் போகிறார் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.
-
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
ஒவ்வொன்றும் ஒரு வெடி குண்டுக்கு சமம்.. சங்கீதா கையில் அந்த வீடியோ ஆதாரம்.. வசமாக சிக்கும் விஜய்! -
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை ஸ்தம்பித்தது.. என்ன காரணம்.. தாம்பரம் போலீசாருக்கு பறந்த கோரிக்கை -
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
பெங்களூரில் மருமகளை சமையல் செய்ய வேண்டாம் என்ற மாமியார்.. அதுக்கு இப்படியா செய்வாங்க -
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா! சிறுவயது ஆசைக்காக ராஜ்யசபா எம்பியாகிறார்.. அவரே தந்த விளக்கம் -
"இந்தியாவின் எதிரி".. அஜர்பைஜானை குறிவைத்து அடித்த ஈரான்.. தீப்பற்றி எரியும் நாடு - அதிரடி -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி












Click it and Unblock the Notifications