வெடித்து பேசிய புகழ்.. "இப்படி மைக்கை தூக்கிட்டு வராதீங்க".. மணிமேகலை, பிரியங்கா.. கொப்பளித்த கோபம்
சென்னை: மணிமேகலை - பிரியங்கா விவகாரத்தின் பரபரப்பு இன்னும் முடிவடையாத நிலையில், விஜய் டிவியின் பிரபலங்களும் அதுகுறித்து வெளிப்படையாக கருத்துக்களை கூறுவதை தவிர்த்து வருகிறார்கள். அந்த வகையில், குக் வித் கோமாளி புகழிடமும் செய்தியாளர்கள் கருத்து கேட்டுள்ளனர். அதற்கு புகழ் என்ன சொன்னார் தெரியுமா?
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசனை தொகுத்து வழங்கி வந்த மணிமேகலை, திடீரென அதிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவரின் ஆதிக்கமே தன்னுடைய முடிவுக்கு காரணம் என்று மணிமேகலை மறைமுகமாக கூறியிருந்த நிலையில், அவர் குறிப்பிடுவது பிரியங்காவைதான் என்று நெட்டிசன்கள் பதிவிட்டும், கருத்து தெரிவித்தும் வருகிறார்கள்.

மணிமேலைக்கு ஆதரவாக விஜய் டிவியின் பிரபலங்களே பலர், கமெண்ட் செய்திருந்தனர். ஆனால், திடீரென அந்த கமெண்ட்களை நீக்கி விட்டார்கள்... ஆனாலும், மணிமேகலை - பிரியங்கா விவகாரம் கடந்த ஒரு வார காலமாகவே சோஷியல் மீடியாவில் பற்றிக்கொண்டு எரிகிறது.
மணிமேகலை: இந்நிலையில், நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்துகொண்ட குக் வித் கோமாளி புகழிடம், குக் வித் கோமாளி மணிமேகலை மற்றும் பிரியங்கா விவகாரத்தை எப்படி பார்க்கிறீர்கள், என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்...
இதற்கு புகழ், உங்களை போல நானும் நிகழ்ச்சியை டிவியிலும், சோஷியல் மீடியாவிலும்தான் பார்க்கிறேன்" என்று கிண்டலாக பதிலளித்தார்.
சோஷியல் மீடியா: உடனே செய்தியாளர்கள், தற்போது அவர்களுக்குள் நடந்து வரும் பிரச்சனைகள் குறித்து கேள்வி கேட்டார்கள்.. அதற்கு புகழ், "அது அவர்களுக்குள் உள்ள பிரச்சனை, உங்களுக்கும் எனக்கும் பிரச்சனை என்றால் நாம் பேசலாம் அதனை சோஷியல் மீடியா வரை கொண்டு வரக்கூடாது. உங்கள மாதிரி தான் எங்களுக்கும், அவர்களுக்குள் என்ன பிரச்சனை தெரியாது, சேனலுக்கு வருமா என்றும் தெரியாது.
இந்த பிரச்சனை பொதுவெளிக்கு வந்துள்ளது. ஒரு வீடியோ பார்த்துட்டு 1000 பேர் வீடியோ போடுகிறார்கள், எது பிரச்சனையோ அவர்கள் இருவரிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக வரட்டும், அதன்பின் பார்ப்போம்..
கோபமான பதில்: இந்த விஷயத்தில் நடந்தது என்ன என்பதை தெரிந்துக் கொள்ளாமலேயே கேமராவை தூக்கிட்டு வந்து கருத்துக்கேட்க வேண்டாம்.. 1000 பேர் கிட்ட மைக்கை எடுத்துவந்து வீடியோ போடறாங்க.. இது நடந்தா? அது நடந்ததா? என்றெல்லாம் கேட்கிறார்கள். எது நடந்ததோ அதை அவர்கள் 2 பேரும்தான் சரி செய்து கொள்ளணும். எது நடந்தது என்பது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் பேசிக் கொள்ள வேண்டும்" என்று கோபமாக பதில் சொன்னார் புகழ்.
கடந்த ஒரு வார காலமாகவே, விஜய் டிவி பிரபலங்கள் தங்களது கமெண்ட்களை பதிவிட்டு, பிறகு டெலிட் செய்துவிட்டாலும், இதுவரை மணிமேகலைக்கு மட்டுமே ஆதரவுகளை தந்திருக்கிறார்கள்.
மோதல்கள்: ஆனால், விஜய் டிவியின் மகாபா மட்டும், இதற்கு எந்தவிதமான கருத்தையும் சொல்லவில்லை.. "2 யானை மோதிக்கிட்டா நாம ஏன் உள்ளே நுழையணும் ? ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்க வேண்டும்.. இது அவர்கள் 2 பேரும் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டிய விஷயம்" என்று கூறியிருந்தார்..
அதுமட்டுமல்ல, மகாபா சொல்லும்போது, நான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில்லை.. இதுவரை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெறாத போது, அங்கே என்ன நடக்கிறது என்பது எனக்கு எப்படி தெரியும்? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
சாமர்த்திய பதில்: ஆனால், புகழ் அப்படியில்லை.. ஆரம்ப சீசன் முதல் கடைசி சீசன்வரை அந்நிகழ்ச்சியில் முக்கிய நபராக புகழ் பங்கேற்றுள்ளார்.. அப்படியிருக்கும்போது, அவருக்கே அந்த செட்டில் என்ன நடந்தது என தெரியவில்லை என்பது, ஜகா வாங்கும் போக்கா? அல்லது புத்திசாலித்தனமா? தெரியவில்லை. எனினும், கிண்டலும் + கோபமும் நிறைந்த புகழின் இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
நேற்றைய தினம், மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்திருந்த பேட்டியில், "பிரியங்காவைகூட, பெரியவர் செப் தாமு பட்டும் படாமல்தான் கண்டித்துள்ளார்.. புகழும் அதைதான் செய்துள்ளார்.. புகழ் சொல்வதும்சரி, செப் தாமு சொல்வதும் சரி, பிரியங்காவின் டாமினேஷனை பொறுக்க முடியாமல் சொல்லும் வார்த்தைகள்தான்" என்று பதிவு செய்துள்ளார். அப்படியிருக்கும்போது, தனக்கு எதுவுமே தெரியாது என்று புகழ் தற்போது சொல்லியிருப்பது பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.
ஆனால் ஒரு சேனலுக்கு பிரபல நடிகை ஷகீலா தந்த பேட்டியில், "உங்கள் ஆட்டிடியூடை மாற்றிக் கொள்ள முடியவில்லை என்றால் தயவு செய்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறி விடுங்கள் என மணிமேகலையிட சொல்லி இருக்கிறார்கள். அதனால் தான் மணிமேகலை குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து விலகி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் மணிமேகலை கலந்து கொண்ட நிறைய நிகழ்ச்சிகளில் பிரியங்கா பிரச்சனை செய்வது நடக்கும்" என்று ஷகிலா கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications