“அவளை சும்மா விட கூடாது” ஏத்திவிட்ட குணசேகரன்..மீண்டும் அந்நியனாக மாறிய சக்தி..ஜனனி எடுக்கும் முடிவு
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஜனனியை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்பதற்காக குணசேகரன் புது பிளான் போட்டு இருக்கிறார்.
சக்தியிடம் ஜனனி பற்றி போட்டு கொடுத்து அவரை உசுப்பேத்தி அனுப்பியிருக்கிறார்.
ஜனனி வேலை செய்யும் ஆபீஸ்க்கு வந்த சக்தி என்ன செய்யப் போகிறார் என்று எதிர்பார்ப்பு ப்ரோமோவில் கூடியிருக்கிறது.

தவணை கேட்ட ஜனனி
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலின் ப்ரோமோ ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சீரியல் நாளுக்கு நாள் டிஆர்பி யில் முன்னேறி வருகிறது. நேற்றைய எபிசோடில் ரேணுகாவின் அம்மா நடு ரோட்டில் அழுது கொண்டிருக்கிறார். அவர் இடம் சீட்டு போட்டு ஏமாந்த பொதுமக்கள் அவரை திட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுத்து கொண்டு போவதற்கு தயாராக இருக்கின்றனர். அந்த நேரத்தில் ஆபீஸிலிருந்து கிளம்பி வந்த ஜனனி அவர்களிடம் மேலும் இரண்டு நாட்கள் தவணை தரும்படி கேட்டு இருக்கிறார். அந்த பொதுமக்களும் ஜனனியின் பேச்சுக்காக ரேணுகாவில் அம்மாவை விட்டு சென்றிருக்கிறார்கள்.

கதறி அழுத ரேணுகா
வீட்டிற்கு வந்த ஜனனி ரேணுகாவின் கணவரிடம் நீங்கள் 10 நாளுக்குள் ரேணுகா அக்கா அம்மாவின் பிரச்சனையை முடித்துவிடுகிறேன் என்று சொன்னீங்களா? அதை பத்தி ஏதாவது செஞ்சீங்களா? அவருக்கு இன்று நடுத்தெருவில் ஏற்பட்ட பிரச்சனையை பற்றி கூறுகிறார். அப்போது அருகில் இருந்த ரேணுகா கதறி அழுது தலையில் அடித்துக் கொண்டு புலம்புகிறார். எங்க அம்மாவுக்கு இப்படி ஒரு நிலைமையா? என்னால் ஒன்றுமே செய்ய முடியாமல் இருக்கிறேனே! என்று அப்போது சக்தியின் மூன்றாவது அண்ணனான கதிர் நக்கலாக அது அவர்களுடைய பிரச்சனை. அதில் நாங்கள் என்ன செய்யணும்? நாங்க பத்து நாள் டைம் மட்டும் தான் வாங்கி கொடுத்தோம் எதுவும் செய்கிறோம் என்று சொல்லலையே என்று கூறுகிறார்.

ஒதுக்கப்படும் ஜனனி
ஜனனி பேசுவதை பார்த்த சத்தி நீ வாயை மூடு என்ன வேணாலும் பேசலாம். யாரும் கேட்க மாட்டாங்க என்று பேசாத. உன் வேலையை மட்டும் பாரு. உன்னை பார்த்தாலே எனக்கு புடிக்கல என்று சக்தி ஜனனியிடம் கத்தி விட்டு சென்று விடுகிறார். அப்போது நந்தினி வந்து ஜனனியிடம் பேசலாம் என்று பார்க்கும்போது கதிர் அவரை முறைத்து நீ ரூமுக்குள் போ. என்ன கொஞ்சி கொலாவலாம் என்று நினைக்கிறீர்களா? என்று நந்தினியை திட்டி அனுப்பி வைத்து விடுகிறார். அங்கே ஜனனி மற்றும் தனியாக நிற்கிறார். ஈஸ்வரியும் அவருடைய மகளும் இருந்தாலும் எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்று கூறி இருக்கிறார்கள்.

ஜனனி எடுக்கும் முடிவு
குணசேகரனை பார்ப்பதற்காக அவருடைய தம்பி தங்கை எல்லோரும் தோட்டத்திற்கு வந்திருக்கிறார்கள். அப்போது ஆதிரா அழுது சீன் போட்டுக் கொண்டிருக்கிறார். ஆதிராவை சமாதானம் செய்ய குணசேகரன் உன்னை வீட்டில் வைத்திருப்பது வீட்டில் இருக்கும் மருமகள்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்பதற்காக தான். எங்களால் எப்போதும் வீட்டில் இருக்க முடியாது. அதனால் நீ தான் இருந்து அவர்களை கண்காணிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அப்போது இரண்டு நாட்களாக அந்த சென்னை காரி அதாவது ஜனனி என்ன செய்கிறாள்? என்று கேட்டவும். அவள் எங்கேயோ வெளியே சென்று வருகிறார் என்று ஆதிரா கூறுகிறார். இந்த நிலையில் ஜனனி வேலைக்கு செல்வது குணசேகரனுக்கு தெரிந்து விடுகிறது. அதனால் அவர் சக்தியிடம் உன் மனைவி என்ன செய்து இருக்கிறாள் என்று உனக்கு தெரியுமா? என்று கேட்கிறார். சக்தி தெரியாது அவளைப் பற்றி என்று சொல்லவும், அண்ணனை கேவலப்படுத்த பார்க்கிறாள். அவளை சும்மா விட கூடாது என்று ஏத்தி விடுகிறார். இதனால் கோபமான சக்தி ஜனனி வேலை செய்யும் ஆபீசுக்கு வருகிறார் .இந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications