மீண்டும் அண்ணன் பேச்சைக் கேட்க தொடங்கிய சக்தி... எதிர்நீச்சல் சீரியலில் மாற போகும் கதைக்களம்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் சக்தி மீண்டும் தன்னுடைய அண்ணன் பேச்சை கேட்க தொடங்கி விட்டார்.
இனி ஜனனி என்னுடைய மனைவியே இல்லை என்று சக்தி பேசி இருக்கிறார்.
எதிர்நீச்சல் சீரியலில் இனிதான் அடுத்தடுத்த ட்விஸ்ட்டுகள் வரப்போகிறது என்று இயக்குனர் சொன்னது போலவே தற்போது நடக்க தொடங்கிவிட்டது.

சீரியலின் கதை
எதிர்நீச்சல் சீரியல் சன் டிவியில் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் மதுரையை மையமாகக் கொண்ட குணசேகரன் குடும்பத்தை பற்றியதாக இருக்கிறது. இதில் அண்ணன் தம்பிகள் அனைவரும் ஒற்றுமையாக இருந்தாலும் தன்னுடைய தம்பிகள் தன்னை விட்டு போய்விடக்கூடாது என்றும், தன்னுடைய குடும்பத்தின் கவுரவம் காக்கப்பட வேண்டும் என்று குணசேகரன் செய்யும் செயல்கள் வில்லத்தனமாக இருந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் தன் வீட்டிற்கு வரும் மருமகள்களை அவர் மட்டமாகவும், அடிமைத்தனமாகவும் நடத்தி வருகிறார். அவர் மட்டுமல்லாமல் அவருடைய தம்பிகளும் அப்படியே செய்ய வேண்டும் என்று குணசேகரன் வழி நடத்தி இருக்கிறார்.

எழுதப்படாத சட்டங்கள்
குடும்பத்தின் கவுரவத்தை காட்ட வேண்டும் என்றால் தன்னுடைய தம்பிகள் படிக்கவில்லை என்றாலும் தம்பிக்கு வர போகும் மனைவிகள் படித்து இருக்க வேண்டும் என்று இவர் பார்த்து பார்த்து அனைவருக்கும் திருமணம் முடித்து வைத்திருக்கிறார். ஆனால் வீட்டிற்கு வந்த மருமகள் அனைவரும சமையல் செய்வதற்கும் வீட்டு வேலைகளை செய்வதற்கு மட்டும்தான் என்று இவர் எழுதப்படாத சட்டத்தை வீட்டிற்குள் நடைமுறைப்படுத்தி வருகிறார். இந்த நிலையில் தான் வீட்டின் கடைசி மருமகளாக ஜனனி வீட்டிற்குள் வந்து இந்த சட்டங்களை எல்லாம் உடைத்து எரிந்து வருகிறார்.

அம்பியாகவும் அந்நியனாகவும் மாறும் சக்தி
தற்போது குணசேகரனின் மகளுக்கு சடங்கு பங்க்ஷன் நடந்து கொண்டு இருக்கிறது. தன்னுடைய மகள் வயதுக்கு வந்ததும் அவருக்கு மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்துவிட்டார். இதை பார்த்து ஆரம்பம் முதலேயே ஜனனி தடுத்து வந்தார். இந்த நிலையில் தற்போது சடங்கு நடக்கும் மண்டபத்தில் நடந்த பிரச்சனையில் அங்கே வந்த சப் கலெக்டரால் இவர்கள் மீது குழந்தை திருமணம் செய்ய பார்க்கிறார்கள் என்று ஜனனியே கம்ப்ளைன்ட் செய்து விடுகிறார். இதனால் குணசேகரன் மட்டுமல்லாமல் குணசேகரன் தம்பிகளும் கோபத்தில் இருக்கின்றனர். ஜனனியின் கணவர் சக்தி ஆரம்பம் முதலே அண்ணன் மீது அதிகமான பாசமாக இருந்தாலும் ஜனனி மீது இருக்கும் பாசத்தால் சில நேரம் அந்நியனாகவும் சில நேரம் அம்பியாகவும் நடந்து கொண்டிருக்கிறார்.

சபதத்தில் ஜெயித்த குணசேகரன்
இனி தன்னுடைய கணவர் தான் சொல்வதை தான் கேட்பார் என்று ஜனனி குணசேகரிடம் சபதம் போட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது குணசேகரன் சக்தியிடம், "நீ பிறக்கும்போது ஜனனிக்கு புருஷனாகவும், என் குழந்தைக்கு சித்தப்பாகவும் பிறக்கவில்லை. என்னுடைய தம்பியாகத்தான் நீ பிறந்தா" என்று சென்டிமென்ட் அட்டாக் பண்ணுகிறார்.இதை கேட்ட சக்தி இனி ஜனனி என் பொண்டாட்டியே கிடையாது என்று கூறியிருக்கிறார். இந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது .ஆனால் இனி வரும் எபிசோடுகளில் குணசேகரன் தான் போட்ட சபதத்தில் ஜெயித்து விட்டதால், ஜனனி இனி வீட்டை விட்டு வெளியேற போகிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications