Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நந்தினி பெயருக்கும் எனக்கும் இப்படி ஒரு பிணைப்பு... முதல்முறையாக மனம் திறந்த எதிர்நீச்சல் ஹரிப்ரியா

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நந்தினியாக நடிக்கும் ஹரிப்பிரியா அந்த பெயருக்கும் தனக்கும் நிஜ வாழ்க்கையில் இருக்கும் தொடர்பு பற்றி முதல் முறையாக மனம் திறந்து பேசி இருக்கிறார்.

இந்த சீரியலில் கதை கேட்கும் போது முதலில் இவருடைய பெயர் நந்தினி என்று சொன்னதுமே இவரை அறியாமலும் இந்த கதைக்கு ஓகே சொல்லி விட்டாராம்.

ரசிகர்களை கவர்ந்த நந்தினி

ரசிகர்களை கவர்ந்த நந்தினி

எதிர்நீச்சல் சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் அனைவரும் ரசிகர்களின் மத்தியில் நன்கு பிரபலம் அடைந்து விட்டனர். இந்த சீரியல் தொடங்கி ஒரு சில மாதங்களிலே அதிக அளவில் ரசிகர்களை கவர்ந்து டி ஆர் பி யில் யாரும் எதிர்பார்க்காத அளவில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் ஒவ்வொரு கேரக்டர்களுக்கும் தனித்தனியாக அதிகமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அதிலும் நந்தினி கேரக்டருக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலதரப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். நந்தினி என்ற பெயரை சொன்ன உடனே பலர் தங்களை அறியாமல் சிரித்து விடுவதாக கூறியிருக்கின்றனர்.

ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவு

ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவு

என்னதான் குணசேகரன் மிரட்டி கொண்டிருந்தாலும் குணசேகரனுக்கு அதிக நேரங்களில் டப் கொடுக்கும் விதமாக பேசிக் கொண்டிருப்பவர் நந்தினி தான். நந்தினியின் மாமியார் பல நேரங்களில் மருமகள்களை அகட்டி உருட்டி கொண்டு இருக்கும்போது கிச்சனிலிருந்து டைமிங் வாய்ஸ் கொடுத்துக் கொண்டு தனக்கே உரிய நக்கல் தனத்தோடு முகபாவணையில் எந்த ஒரு எக்ஸ்பிரஷனை காட்டாவிட்டாலும் பேச்சிலே அனைவரையும் சிரிக்க வைத்து விடுகிறார் .இதனாலே இவருக்கு என்று ரசிகர்கள் பலர் சமூக வலைத்தளத்தில் ஃபேன்ஸ் பேஜ்களை தொடங்கி ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

நிஜ வாழ்க்கையிலும் நந்தினி

நிஜ வாழ்க்கையிலும் நந்தினி

இந்த நிலையில் இந்த சீரியலில் நந்தினி கேரக்டரில் நடிக்கும் ஹரிப்பிரியா இதற்கு முன்பு தென்றல் சீரியலில் இவருக்கு இசையாக கிடைத்த வரவேற்பு இந்த சீரியலின் மூலமாக நந்தினியாக கிடைத்து வருகிறது. தென்றல் சீரியலுக்கு பிறகு பல சீரியல்களில் நடித்திருந்தாலும் அதில் எல்லாம் கிடைக்காத பெயர் தற்போது நந்தினியாக தனக்கு கிடைத்திருக்கிறதை மகிழ்ச்சியோடு ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார். இந்த சீரியலின் கதை இவரிடம் சொல்லப்படும் போது இவர் முதலில் பாசிட்டிவ் கேரக்டரா அல்லது நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கணுமா என்று தான் கேட்டாராம் .அப்போது பாசிட்டிவ் கேரக்டர்தான் இந்த கேரக்டரின் பெயர் நந்தினி என்று சொன்னதும் இவருடைய மனதிற்குள் ஒரு பிணைப்பு ஏற்பட்டு விட்டதாம்.

நிஜ பெயரும் அதுதான்

நிஜ பெயரும் அதுதான்

ஹரிப்பிரியாவின் இன்னொரு பெயர் நந்தினி தானாம். அதே பெயரை இந்த சீரியலில் இவருக்கு வைத்திருப்பது மேலும் எனக்கு கிடைத்த ஒரு வரம் என்று கூறி இருக்கிறார். நந்தினி என்ற பெயரை இவருடைய பாட்டி ஆசையாக இவரை கூப்பிடுவாராம். அதையே குறித்து தற்போது ரசிகர்களும் நந்தினி என சொல்லிக் கூப்பிடும் போது ரொம்பவே பிடித்திருக்கிறது என்று கூறியிருக்கிறார். இதற்கு முன்பு இவர் நடித்த சீரியல்களை குறித்து வெளியே செல்லும்போது பலர் நீங்க அந்த சீரியலில் அப்படி கேரக்டரில் நடித்திருக்கிறீர்களா? என்று கேட்பார்களாம். ஆனால் இப்போது நந்தினி என்றுதான் இவரை எங்கே சென்றாலும் அழைக்கிறார்களாம். அது இவருடைய நடிப்புக்கு கிடைத்த பரிசாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார். தனக்கு பெரியவர்களை விடவும் குழந்தைகள் இவருடைய நடிப்பை பாராட்டி நந்தினி அக்கா என்று கூப்பிடுவது தான் ரொம்பவே பிடித்திருக்கிறது என்று குழந்தையாகவே மாறி சந்தோஷப்படுகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+