ஹோட்டலில் நடிகரின் அசிங்கம்.. அவமதிக்கப்பட்ட விஜய் சேதுபதியின் மனைவி.. அவமானம் தந்த வெற்றி: பிரபலம்
சென்னை: விஜய் சேதுபதி கேரியரில் 96" படம் பிளாக்பஸ்டர் வெற்றியை தந்தது.. 96 படத்தின் பார்ட் 2 வாய்ப்பு வந்தபோது, அதை மறுத்து விட்டார் விஜய் சேதுபதி. இதற்கான காரணம் தெரியவில்லை.. இப்படி நடிக்க மறுத்தது, விஜய் சேதுபதி செய்த இன்னொரு தவறு" என்று பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அத்துடன், விஜய் சேதுபதி ஹீரோவாக உயர்ந்தது எப்படி என்றும் அந்த பேட்டியில் விரிவாகவே பேசியிருக்கிறார்.
Public Wing என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "பல வருடங்களாகவே சினிமாவில் பெரிய ஹீரோவாக வரவேண்டும் என்று விஜய் சேதுபதி முயற்சித்தார்.. அதற்கான வாய்ப்புகள் சரியாக அமையவில்லை..

இதனிடையே குடும்ப சூழ்நிலை காரணமாக துபாய்க்கு சென்று வேலை பார்த்தார்.. அப்போதுகூட சினிமா மோகம் அவருக்கு குறையவில்லை. ஒருகட்டத்தில் துபாய் வேலையை உதறி தள்ளிவிட்டு, சினிமா வாய்ப்பு தேடினார்.. தனுஷின் புதுக்கோட்டை உள்ளிட்ட ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக பல படங்களில் நடித்தார்..
விஜய் சேதுபதி மனைவி
ஷூட்டிங்கை நேரில் பார்க்க விஜய் சேதுபதியின் மனைவி ஆசைப்படவும், அவரை அழைத்து சென்றுள்ளார்.. ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் என்பதால் விஜய் சேதுபதியை ஸ்டுடியோவுக்குள் அனுமதித்துள்ளனர். ஆனால், அவரது மனைவியை உள்ளே சேர்க்கவில்லை. "நீங்க என்ன பெரிய ஹீரோவா? மனைவி குடும்பத்தை எல்லாம் ஸ்டுடியோவுக்கு கூட்டி வரக்கூடாது" என்று சொல்லியிருக்கிறார்கள். இதனால் அவமானப்பட்ட விஜய் சேதுபதி, ஒருநாள் சினிமாவில் ஹீரோவாக ஜெயித்து காட்ட வேண்டும் என்று முடிவெடுத்தார்.
அதற்கு பிறகுதான் தென்மேற்கு பருவக்காற்று படத்தில் சீனு ராமசாமி படம் மூலம் அறிமுகமானார்.. அந்த படத்துக்கு அவார்டு கிடைத்தும், யாரோ ஒரு புதுமுகம் நடித்திருக்கிறார் என்று நினைத்து, அவரது நடிப்பையும் அதில் பெரிதாக யாருமே பேசவில்லை.
கிளம்பி வந்த புது குரூப்
இதற்கு பிறகுதான் நாளைய இயக்குனர்கள் என்று ஒரு குரூப் வந்தது.. கார்த்திக் சுப்புராஜ், நளன் குமாரசாமி, பாலாஜி தரணிதரன் போன்றோர் களமிறங்கினார்கள்.. இவர்களது குறும்படங்களில் ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்திருந்ததால், இயக்குனர்களாக இவர்கள் சினிமாவுக்குள் நுழைந்ததுமே, தன்னுடைய முழு ஆதரவை தந்தார்.
அப்படி பீட்சா படம், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும் என வரிசையாக நடித்து அனைவரின் கவனத்தையும் பெற்றார். ஆனால் அடுத்தடுத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை.
5 ஸ்டார் ஓட்டல் கலாட்டா
இதற்கு நடுவில் ஒரு பெரிய தவறு செய்தார்.. ஒரு 5 ஸ்டார் ஓட்டலில் குடித்துவிட்டு, பெரிய நடிகர் என்ற பாணியில், பிரியாணியை ரிசப்ஷனுக்கு கொண்டு வர சொல்லி கலாட்டா செய்தார். இந்த செய்தி அனைத்து பத்திரிகைகளிலும் வந்துவிடவும், தன்னுடைய தவறை உணர்ந்தார்.. இனிமேல் அப்படி செய்ய மாட்டேன் என்று பத்திரிகையாளர்களிடம் வருத்தம் தெரிவித்தார்.
பிறகு வீடு ஒன்றை பிரம்மாண்டமாக கட்டதுவங்கினார். ஆனால், கையில் பணம் இல்லாததால், கேட்கும் படங்களில் எல்லாம் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.. ஆனால், அந்த படங்கள் தோல்வியை தழுவின.. இதனால் மீண்டும் சிக்கலில் விழுந்து, மெல்ல எழ ஆரம்பித்தார்.
தவறு மேல் தவறு
இதற்கு பிறகு படத்தை சொந்தமாக தயாரித்து, மீண்டும் தவறு செய்தார்.. அதிலும் நஷ்டத்தை சந்தித்தார்.. அந்த நேரத்தில் இயக்குனர் ஜனநாதனுடன் சேர்ந்து படம் எடுக்கவும், பாதியிலேயே ஜனநாதன் இறந்துவிட்டார். இதனால் அந்த கடனும் விஜய் சேதுபதி தலையில் விழுந்தது. இந்த நெருக்கடியை சமாளிக்கவே மாஸ்டர் படத்தில் வில்லனாக நடிக்கும் நிலைமை வந்தது. இதற்காக டபுள் மடங்கு சம்பளம் பெற்றார்..
ஆந்திரா, மலையாளம், இந்தி உள்ளிட்ட வெளிமாநில படங்களில் நடிக்க துவங்கினார்.. சிறந்த கேரக்டர் ஆர்டிஸ்ட்டாக உருமாறினார். மீண்டும் தமிழில் மகாராஜன் படம் வெற்றிப்படமாக அமைந்த நிலையில் ஏஸ் என்ற மிகப்பெரிய தோல்வி படத்தை தந்துள்ளார். அவரது கேரியரில் 96 படம் பிளாக்பஸ்டர் வெற்றியை தந்தது.. 96 படத்தின் பார்ட் 2 வாய்ப்பு வந்தபோது, அதை மறுத்து விட்டார் விஜய் சேதுபதி. இதற்கான காரணம் தெரியவில்லை.. இப்படி நடிக்க மறுத்தது, விஜய் சேதுபதி செய்த இன்னொரு தவறு" என்று தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications