ஜீ தமிழில் களைகட்டும் கல்யாண வைபோகம்...இது வேற மாதிரி இருக்குதே.. ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
சென்னை: மாற்றம்தான் மாறாதது என்பதை நிரூபித்திருக்கும் ஜீதமிழுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
இது வரைக்கும் இல்லாத வகையில் டிஆர்பியை கூட்டுவதற்காக முதல் முறையாக புது முயற்சியை கையாண்டிருக்கும் ஜீ தமிழுக்கு ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.
பல சேனல்கள் மகாசங்கம் நடத்திக் கொண்டிருப்பதற்கு மாற்றாக கல்யாண வைபவத்தை நடத்தி ஜீ தமிழ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

சேனலுக்கு மதிப்பு கூடி போச்சு
சன் டிவி, விஜய் டிவி க்கு மாற்றாக சின்னத்திரையில் புதுப்புது நிகழ்ச்சிகளை அறிமுகம் செய்து கொண்டிருப்பதில் ஜீ தமிழும் முக்கிய பங்கு வகித்து வருகிறது. ஒரு காலத்தில் சீரியல்கள் என்றாலே சன்டிவி சீரியல்கள் தான் என்று ரசிகர்கள் சொல்லும் அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றிருந்தது. ஆனால் படிப்படியாக அதற்கு போட்டியாக பல சேனல்கள் தொடங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இளைஞர்கள் பலரையும் சின்னத்திரை பக்கம் இழுத்து இருக்கிறது. காரணம் அழுகாச்சி சீன்களை பார்த்துக்கொண்டிருந்த சீரியலில் தற்போது புது காதல் கதைகளையும், காமெடி களையும் சேர்த்திருப்பது மட்டுமல்லாமல் பல ரியாலிட்டி ஷோ களையும் அறிமுகப்படுத்தி சின்னத்திரையை இளைஞர்களின் மத்தியில் பிரபலப்படுத்தி வருகிறது.

இளைஞர்களை கவர்ந்த சின்னத்துர
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீரியலாக இருந்தாலும் சரி, ரியாலிட்டி ஷோ வாக இருந்தாலும் சரி தற்போது ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சேனலுக்காகவே பல ரசிகர்கள் தொடர்ந்து பார்த்து வருகின்றனர். இதில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை தவறாமல் பார்த்து விடுகின்றனர். ஒரு சில நேரங்களில் சேனலில் சீரியலை பார்க்க முடியாவிட்டாலும் ஜி5 ஆப் மூலமாக எப்ப வேணாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற வசதியை ஏற்படுத்தி அனைவரும் அதையும் பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் தங்களுடைய ரசிகர்களின் என்டர்டைன்மென்ட்க்கு வழி செய்யும் வகையில் லேட்டஸ்ட் ப்ரோமோவை ஜீதமிழ் வெளியிட்டிருக்கிறது.

புது நிகழ்ச்சிகளில் கலக்கல்
ஏற்கனவே இந்த சேனலில் சர்வைவர் நிகழ்ச்சி ஒளிபரப்பாக தொடங்கியதிலிருந்து சேனலின் டிஆர்பி வெகுவாக உயர்ந்து இருக்கிறது. இந்த நிலையில் புதியதாக கல்யாண வைபோகம் என்னும் நிகழ்ச்சியை தொடங்கியிருக்கின்றனர். இதில் ஜீ தமிழில் டாப்பில் இருக்கும் சீரியல்கள் ஆன நீதானே எந்தன் பொன்வசந்தம், புதுப்புது அர்த்தங்கள், நினைத்தாலே இனிக்கும், கோகுலத்தில் சீதை போன்ற சீரியல்களில் கதாநாயகனுக்கும் நாயகிக்கும் திருமணத்தை செய்து வைத்து புதிய புரட்சியை ஏற்படுத்தி இருக்கின்றனர். இந்த ப்ரோமோ தான் தற்போது ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அடடா...திடீர் ஏற்பாடு செம
அதுவும் எல்லா சீரியல்களை விடவும் புதுப்புது அர்த்தங்கள் சீரியல் லக்ஷ்மி கேரக்டரில் நடிக்க நடிகை தேவயானி மற்றும் ஹரி இவர்களின் திருமணம் தான் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கதையை பார்க்கும் போதே தெரிகிறது இவர்கள் இருவரும் தான் ஜோடிகள் என்று ஆனாலும், இவர்களுடைய திருமணத்தை எதிர்பார்க்காத ரசிகர்கள் இது அதிர்ச்சியாக இருக்கிறது. ஆனால், இந்த முடிவும் நன்றாகத் தான் இருக்கிறது என்று கூறியிருக்கின்றனர். ப்ரோமோ பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த எபிசோடு எப்போது ஒளிபரப்பாகும் என்று தான் பலர் கேட்டு வருகின்றனர். அவ்வளவு ஆர்வமாக ரசிகர்கள் இந்த எபிசோட்க்கு காத்திருக்கும் நேரத்தில் இந்த ப்ரோமோ கமெண்டுகளை குவிந்து வருகிறது.












Click it and Unblock the Notifications