எப்படி இருந்த செம்பருத்தி இப்படி மாறி போச்சு...குழப்பத்தில் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: செம்பருத்தி சீரியல் நாளுக்குநாள் ரசிகர்களின் மத்தியில் விறுவிறுப்பை கூட்டி கொண்டிருந்த நிலையில் தற்போது கதை மீண்டும் வேகம் எடுக்க ஆரம்பித்திருக்கிறது.

என்ன பழைய படியும் முதலில் இருந்தா என்று பலர் இந்த சீரியலை பார்த்து பீல் பண்ணி வருகின்றனர்.

சீரியல் எப்போது முடியப்போகிறது என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு புதிய முடிச்சை அவிழ்த்து ரசிகர்களை எந்தப் பக்கமும் போக விடாமல் செம்பருத்தி சிலிர்க்க வைத்திருக்கிறது.

டக்கு டக்குனு மாத்திட்டாங்களே

டக்கு டக்குனு மாத்திட்டாங்களே

ஜீ தமிழில் ஒளிபரப்பாகிவரும் செம்பருத்தி சீரியல்தான் பல வருடங்களாக நம்பர் ஒன் இடத்தில் இருந்து கொண்டிருக்கிறது. இந்த சீரியல் தான் இதுவரைக்கும் இல்லாத அளவில் ஜீ தமிழை டீஆர்பியில் முதலிடத்தில் கொண்டு வர வைத்தது. ஆரம்பத்தில் இருந்தே இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்துகொண்டிருக்கிறது. ரசிகர்களின் ஆதரவினால் தொடர்ந்து பல வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் ஆரம்பித்த நாட்களில் இருந்து இதுவரைக்கும் கதாநாயகன் முதல் துணை நடிகர்கள் வரை பல நடிகர்கள் மாறிவிட்டார்கள். இது ரசிகர்கள் மத்தியில் இந்த சீரியலுக்கு மதிப்பை குறைத்து விட்டது. அதுவும் சீரியலின் கதாநாயகன் கார்த்திக் இந்த சீரியலை விட்டு விலகியதும் அதிகமான ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதை விட்டு விட்டார்கள். ஆனாலும் தொடர்ந்து இந்த சீரியலை ஒளிபரப்பாகி வருகிறது.

மீண்டும் முதலில் இருந்தா

மீண்டும் முதலில் இருந்தா

சீரியலின் கதைக்களம் ஆரம்பத்தில் மிகவும் பிரம்மாண்டமாகவும் ரசிகர்களுக்கு பிடித்ததாகவும் இருந்தாலும் போகப்போக சலிப்பு தட்டி விட்டது என்று பலர் கூறி வருகின்றனர். அதுவும் பார்வதியை அகிலாண்டேஸ்வரி இன்னமும் மருமகளாக ஏற்றுக் கொள்ளாதது ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எவ்வளவோ பிரச்சனைகளை இந்த வீட்டில் பார்வதி சரி செய்து கொண்டு இருந்தாலும் அகிலாண்டேஸ்வரி மீண்டும் மீண்டும் அவரை வேலைக்காரியாக தான் பார்க்கிறேன் உன்னை மருமகளாக பார்க்க முடியாது என்று கூறிக் கொண்டிருப்பது பிறருக்குக் காண்டாக இருக்கிறது. அதுவும் அவரை வெளிக்கொண்டு வருவதற்காக பல முயற்சிகளை எடுத்து வெளியே கொண்டு வந்திருக்கிறார். ஆனால் வெளியே வந்த பிறகு மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறியது போல
விட்ட இடத்திலேயே அகிலாண்டேஸ்வரி தொடர்கிறார்.

ஐஸ்வர்யா திருந்திட்டாரே

ஐஸ்வர்யா திருந்திட்டாரே

ஐஸ்வர்யா திருந்தியதும் இந்த சீரியல் முடிந்து விடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் ஆனால் இந்த சீரியலின் புது ப்ரோமோவை பார்த்ததும் ரசிகர்கள் அகிலாண்டேஸ்வரியின் அண்ணன் மகள் தான் பார்வதி என்பது நன்றாக புரிந்து விட்டனர். பார்வதி தனக்கு மருமகளாக தகுதி ஆக மாட்டார் என்று ஒவ்வொரு முறையும் அகிலாண்டேஸ்வரி கூறிக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் தன்னுடைய வாரிசாக ஐஸ்வர்யாவை முறைப்படி பதவி கொடுப்பதை பார்த்ததும் ரசிகர்கள் என்ன இந்த சீரியல் இந்த மாதிரி போய்க் கொண்டு இருக்கிறது என்று புலம்பி வருகிறார்கள். ஆரம்பத்தில் பணக்கார திமரோடு இருந்த ஐஸ்வர்யா பின்பு பார்வதியை புரிந்து கொண்டு அக்கா தங்கச்சி என்றால் நாங்கதான் என்று சொல்லும் அளவில் இருவரும் இருந்தனர். பின்பு மீண்டும் பதவிக்காகவும் மரியாதைக்காகவும் பார்வதியை பழிவாங்க நெகட்டிவ் கேரக்டராக மாறிவிட்டார்.

செம ட்விஸ்ட் இருக்கு

செம ட்விஸ்ட் இருக்கு

இந்தநிலையில் பார்வதிக்கும் ஐஸ்வர்யாவுக்கும் கரண்ட் ஷாக் அடித்த பிறகு பார்வதியை பற்றி நன்றாக புரிந்து கொண்டு தன்னுடைய அம்மாவை உன்னால்தான் நான் என் குடும்பத்தோடு வாழாமல் இருக்கிறேன் என்று திட்டி அனுப்பி விட்டதை பார்த்ததும் ரசிகர்கள் ஓகே ஒரு வழியா கதையை சுவாரஸ்யத்தை கூட்ட ஆரம்பித்துவிட்டார்கள். இந்த சீரியலை இப்படியே முடித்து விட்டால் நல்லது என்று கூறிவந்தனர். இந்த நிலையில் மீண்டும் பார்வதி பிறப்பு பற்றி பெரிய ட்விஸ்ட் வைத்து இன்னும் ஒரு வருடத்திற்கு இந்த சீரியலை கொண்டுபோய் விடுவார்கள் போல என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். எப்படியோ இருந்த செம்பருத்தி சீரியல் இன்று எப்படியோ மாறிப் போய்க் கொண்டிருக்கிறது என இந்த சீரியலின் தீவிரமான ரசிகர்கள் கூட அலுத்து கொண்டு இருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+