சத்தம் இல்லாமல் சாதித்து காட்டிய எதிர்நீச்சல் சீரியல்..குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் பிரபலங்கள் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
எதிர்நீச்சல் சீரியல் ஒளிபரப்பாக தொடங்கி இன்றோடு 200 எபிசோடு ஒளிபரப்பாக இருப்பதால் தற்போது அதனை கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.
இந்த குறிப்பிட்ட நாளுக்குள் சன் டிவியில் டிஆர்பியில் பிற சீரியல்களை விட முன்னணியில் வந்த சீரியலுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

அண்ணன் தம்பி கதை
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் மதுரையை மையமாக கொண்ட அண்ணன் தம்பி கதையை பற்றியதாக இருந்து வருகிறது. அதுவும் அண்ணனாக குணசேகரன் வீட்டை கட்டிக்காத்து தன்னுடைய குடும்பத்தை நிர்வகித்து வருகிறார். ஆனால் அவருடைய ஆண் ஆதிக்கத்தால் அந்த வீட்டிற்கு வந்த பெண்கள் படும் பாடு பற்றி எதிர்நீச்சல் சீரியல் எடுத்துரைத்து வருகிறது. இந்த மாதிரி தான் தற்போது கூட பல பெண்கள் வீட்டின் கவுரவம் மரியாதை என்கிற பெயரில் திறமைகளை ஒழித்து வைத்துக்கொண்டு வீட்டுக்குள்ளே முடங்கி விடுகிறார்கள் என்று இந்த சீரியலுக்கு ரசிகர்கள் அதிகமானார் ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

எழுதப்படாத சட்டம்
நான்கு அண்ணன், தம்பிகள் இருக்கும் நிலையில் நான்கு பேரும் படித்த பெண்களை திருமணம் செய்து கொண்டால் தான் வீட்டின் கவுரவம் இருக்கிறது என்ற என்று இந்த சீரியலில் இருக்கும் அனைவருக்கும் படித்த பெண்களை திருமணம் செய்து இருக்கிறார்கள். ஆனால் படுத்திருந்தாலும் வீட்டு வேலைகளையும், சமையல் வேலைகளையும் செய்து முடிக்க வேண்டும் என்பது இவர்களுக்கு எழுதப்படாத சட்டமாக இருந்து வருகிறது. இதற்கு முன்பு முதல் மூன்று மருமகள்களும் வீட்டின் வேலைகளை செய்து கொண்டு சலிப்பாக வாழ்ந்து வருகிறார்கள்.

இனி வரும் ஆட்டம்
கடைசி மருமகளாக இந்த சீரியலில் அடியெடுத்து வைத்திருக்கும் ஜனனி இனி எடுக்கும் முயற்சியினால் பெண்கள் தங்களுடைய சுய கவுரவத்தை நிலை நாட்டப் போகிறார்கள் என்று கதை நகர்ந்து வருகிறது. இந்த நிலையில் இந்த சீரியலுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்து வருகிறார்கள். ஒரு சில ரசிகர்கள் இந்த சீரியல் திரைப்படங்களின் சாயல் என்று கூறி வந்தாலும் இதுவும் நல்லாக தான் இருக்கிறது பிற சீரியலோடு ஒப்பிடும்போது இதற்கு விறுவிறுப்பு அதிகரிப்பாக இருக்கிறது என்று கூறி வருகிறார்கள்.

கொண்டாட்டம்
தற்போது ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே எதிர்நீச்சலின் கதைக்களம் நகர்ந்து வருகிறது. இந்த சீரியலில் சண்டை சச்சரவுகளுக்கும் மிரட்டல்களுக்கும் பஞ்சமில்லாமல் இருந்து வந்தாலும் தற்போது இந்த சீரியலில் 200 எபிசோடுகளை கடந்துள்ளது. அதன் வெற்றியை சீரியல் அணியினர் கொண்டாடி மகிழ்ந்திருக்கின்றனர். அந்த புகைப்படங்களை தங்களுடைய சமூக வலைத்தளங்களில் பதிவிடவும் அதை பார்த்த ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து புகைப்படங்களை தங்கள் பங்குக்கு பகிர்ந்து வருகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications