பாரதிகண்ணம்மா கிளைமாக்ஸ் பற்றி பதிவிட்ட வெண்பா.. ஆனாலும் கடைசியில் இதை எதிர்பார்க்கலையே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் இறுதி அத்தியாயத்தில் என்ற ப்ரோமோ சமீபத்தில் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் இந்த சீரியலில் வெண்பாவாக நடிக்கும் ஃபரீனா ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

வெண்பாவின் அம்மாவாக நடிக்கும் ரேகாவுடன் அந்த வீடியோவை எடுத்து இருக்கிறார்.

இந்த வீடியோவிற்கு கேப்ஷன் ஆக கிளைமாக்ஸ் ஆக இருக்குமோ என்று பதிவிட்டு இருக்கிறார்.

நெட்டிசன்களுக்கு பிடித்த சீரியல்

நெட்டிசன்களுக்கு பிடித்த சீரியல்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் ஆயிரம் எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் எப்போது முடிவடையும் என்று ஒரு சிலர் ஆண்டுகளாகவே ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் . நித்திஷ்ன்களின் ஃபேவரைட் சீரியல் என்று சொல்லும் வகையில் இந்த சீரியல் இருந்து வருகிறது. ஆரம்பத்தில் இருந்தே இந்த சீரியலை ரசிகர்கள் அதிகமாக கலாய்த்து இந்த சீரியலை ட்ரண்ட் செய்து இருந்தனர். மீம்ஸ்களில் முன்னணியில் ட்ரெண்டிங்கில் வந்த சீரியல் என்றால் அது பாரதி கண்ணம்மா சீரியல் ஆகத்தான் இருக்க முடியும்.

டிஎன்ஏ பிரச்சனை

டிஎன்ஏ பிரச்சனை

ஒருமுறை இரண்டு முறை அல்லாமல் பல முறை இந்த சீரியல் நெட்டிசன்களின் மத்தியில் கலாய்க்கப்பட்டு வருகிறது. ஆனாலும் இந்த சீரியல் மட்டும் முடிந்த பாடு இல்லை. இந்த நிலையில் ஒரு சில மாதங்களுக்கு முன்பு இந்த சீரியலில் முதல் பாகம் முடிவடைய இருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகி இருந்தது. அதைத் தொடர்ந்து ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டு வந்தனர். ஆனால் வழக்கம் போல நெட்டிசன்கள் அப்போதும் இந்த சீரியலை கலாய்த்து தான் வந்தனர். காரணம் பல வருடங்களாக ரசிகர்கள் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் எப்போது என்று எதிர்பார்த்து கேள்வி எழுப்பி வந்த நிலையில் அந்த ரிசல்ட் ஒரு வழியாக முடிவுக்கு கொண்டு வந்தனர்.

திடீர் ட்விஸ்ட்

திடீர் ட்விஸ்ட்

பிறகு சீரியல் முடிவடைந்து விடும் என்று எதிர்பார்த்து இருந்த நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத விதமாக கதையில் ட்விஸ்ட் ஏற்பட்டு கண்ணம்மா பாரதியை ஏற்றுக் கொள்ளாமல் தனியாக சென்று விட, தற்போது கதை நீண்டு கொண்டே வருகிறது. இந்த நிலையில் பாரதி தன்னுடைய சுயநினவை இழந்து யாரையுமே தெரியாமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று ஒரு பிரமோ வெளியாகி இருக்கிறது. அதில் இறுதி அத்தியாயத்தில் பாரதிகண்ணம்மா சீரியல் என்று கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த சீரியலில் ரசிகர்கள் பீல் பண்ணி கருத்து தெரிவித்து வருகின்றனர். நெட்டிசன்கள் வழக்கம்போல இப்பவாவது இந்த சீரியலில் இருந்து எங்களுக்கு விடுதலை தந்தீர்களே என்று கலாய்த்து வருகிறார்கள்.

ஒருவேளை இருக்குமோ

ஒருவேளை இருக்குமோ

இந்த நிலையில் இந்த சீரியலில் வெண்பாவாக நடிக்கும் ஃபரீனா வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அது வெண்பாவின் அம்மாவாக நடிக்கும் ரேகா உடன் எடுத்த ரீல்ஸ் வீடியோ தான். ஆனால் அதில் கீழே அவர் கொடுத்திருந்த கேப்ஷன் தான் அனைவரையும் யோசிக்க வைத்திருக்கிறது. அந்த கேப்ஷனில் அவர் "கிளைமாக்ஸாக இருக்குமோ" என்று குறிப்பிட்டிருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் அப்போ உண்மையில் இந்த சீரியலின் கடைசி கிளைமாக்ஸ் வந்து விட்டதா? கிளைமேக்ஸில் வெண்பாவும் அவருடைய அம்மாவோடு வருகிறாரா? ஆனால் வெண்பா ஏற்கனவே மனநல காப்பகத்தில் இருந்து வருகிறார் .இந்த நிலையில் பாரதிக்கும் பழசு எல்லாம் மறந்து விட்ட நிலையில் பாரதி வெண்பாவை ஏற்றுக் கொள்வாரோ என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+