தொடங்கிய ஃப்ரீஸ் டாஸ்க்...ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்க்கும் பேமிலி யார் தெரியுமா??
சென்னை: இந்த வாரம் தொடங்கிய ஃப்ரீஸ் டாஸ்க் ரசிகர்களிடம் ஆர்வத்தை கூட்டி உள்ளது.
அடிக்கடி சண்டை காட்சிகளை பார்த்துக் கொண்டு வந்த ரசிகர்களுக்கு இந்த வாரம் வித்தியாசமாக இருக்க போகிறது என பலர் கூறி வருகின்றனர்.
பல ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்திருந்த டாஸ்க் இந்த வாரம் தொடங்கியதால் டிஆர்பி அதிகரிக்க வாய்ப்புள்ளது .

மனதை கவர்ந்து விட்டதே..
பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே ரசிகர்கள் பலருக்கும் பரிச்சயமான நிகழ்ச்சிதான். இந்த நிகழ்ச்சி தொடங்கிய முதல் சீசனில் இருந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. அடுத்த வீட்டில் நடப்பதை எப்படி மக்கள் ஆர்வமாக பேசி வருவார்களோ அதுபோலத்தான் பிக்பாஸ் வீட்டிற்குள் நடப்பதை அடுத்தநாள் பேசுவது ரசிகர்கள் பலருக்கும் பிடித்தது. அதனால்தான் இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு சீசனிலும் வெற்றியடைந்து வருகிறது. இந்த நிகழ்ச்சி வந்த பிறகு பல சீரியல்களில் டிஆர்பி குறைந்துவிட்டது என பல சேனல்கள் விஜய் டிவியின் மீது கோபத்தில் இருந்து வருகிறது.

இறங்கிய டிஆர்பி
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்க போகிறது என்று சொன்னாலே பிற சேனல்களின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு டப் கொடுக்கிற மாதிரி தான் நிகழ்ச்சிகளின் வேகத்தை கூட்டி வருவார்கள். ஆனால் இந்த ஐந்தாவது சீசன் இது வரைக்கும் இல்லாத வகையில் ஒரு சில நாட்கள் டிஆர்பி யில் இறங்கிவிட்டது. இது விஜய் டிவிக்கு பெரும் அதிர்ச்சியான விஷயம்தான். ஒவ்வொரு சீசனிலும் போட்டியாளர்களை அதிகமாக கவர்ந்த ஒரு சில டாஸ்க்கள் இருந்து வருகிறது. அது வழக்கமாக தொடர்ந்து வருவது போல இந்த ஐந்தாவது சீசனிலும் எப்போது வரும் என்று ஆர்வத்தோடு ரசிகர்கள் காத்திருந்தனர்.

ரசிகர்களின் கருத்துக்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே ஃப்ரீஸ் டாஸ்க்கை யாரும் மறந்துவிட முடியாது என்று சொல்கின்ற மாதிரி தான் ஒவ்வொரு சீசனிலும் இந்த டாஸ்க் வேற லெவல் வைரலாகி வரும். இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசன் முடிந்தாலும் இந்த ஒரு டாஸ்க் மட்டும் யாராலும் மறக்க முடியாத வகையில் இருந்து வருகிறது. முதல் சீசனில் தொடங்கி இப்ப வரைக்கும் இது தொடர்ந்து கொண்டிருக்கின்றது. ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த டாஸ்க் தற்போது இந்த வாரத்தில் தொடங்கி விட்டது. இதில் போட்டியாளர்களை விட ரசிகர்கள் யாருடைய ஃபேமிலி வந்தால் நன்றாக இருக்கும் என்று தங்களுடைய கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகின்றனர்.

ரசிகர்களை கவர்ந்த ஃபேமிலி
போன சீசனில் ஷிவானியின் அம்மாவின் வருகை பாலாவை தாக்கியது போல இந்த சீசனில் பாவனியின் குடும்பம் வந்தால் அமீர் நிலைமை என்ன ஆகும் என்று பலர் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ஆனால் ஒரு சிலர் ராஜூவின் குடும்பத்தை பார்ப்பதற்காகவும், ராஜு அப்போது என்ன மாதிரி நடந்து கொள்கிறார் என்று தெரிந்து கொள்வதிலும் ஆர்வத்தோடு இருக்கிறார்கள். இன்னும் ஒரு சிலர் சஞ்சீவ் தன்னுடைய மகள் இந்த வீட்டை பார்க்க வேண்டும் என்று சொன்னதற்காக தான் ராஜு அவரைக் காப்பாற்றினார். அதனால் சஞ்சீவ் குடும்பம் வருவதை பார்க்க வேண்டும் என்றும் ஒரு சிலர் கூறி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் ஒருசிலர் பிரியங்காவின் குடும்பம் இந்த நிகழ்ச்சிக்கு வர வேண்டும் என்று ஆர்வத்தோடு இருப்பதாக கூறகிறார்கள். எப்படியோ இந்த வாரம் அனைத்து போட்டியாளர்களின் குடும்பமும் வந்து நிகழ்ச்சிக்கு என்டர்டைமண்ட் கொடுக்க ரெடி ஆகிவிட்டது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications