கோபி, ராதிகாவுக்கு பாடம் புகட்ட ராமமூர்த்தி எடுத்த முடிவு... கடைசியில் இந்த முடிவை எதிர்பார்க்கலையே
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா வீட்டில் இருந்து கோபியின் அப்பாவாகிய ராமமூர்த்தியும் கோபியோடு சேர்ந்து விட்டார்.
என்னுடைய பேத்தி இருக்கும் இடத்தில் நான் இருப்பேன் என்று வீட்டை விட்டு கிளம்பிய ராமமூர்த்தியால் இனி கோபியின் வீட்டில் பிரச்சனைகள் பூதாகரமாக வெடிக்க இருக்கிறது.

மனம் மாறிய இனியா
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி திருமணம் முடிந்து ராதிகாவோடு சென்ற பிறகு ராதிகாவின் வீட்டில் சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் நேரத்தில், பாக்யாவின் வீட்டிற்கு வந்து வீராப்பாக பேசிக்கொண்டு தன்னுடைய ரேஷன் கார்டை சண்டை போட்டு வாங்கிக்கொண்டு சென்று விட்டார். ஆரம்பத்தில் இனியாவின் ஸ்கூலில் பேரன்ஸ் மீட்டிங்கில் கலந்து கொள்ளும்போது இனியா கோபியை அப்பா என்று சொல்லக்கூட விரும்பாமல் பாக்யாவோடு டீச்சரை பார்த்துவிட்டு வந்துவிட்டார். ஆனால் தற்போது இனியா பள்ளியில் பிரச்சனை என்றதும் கோபியை தேடி அவருக்கு போன் செய்திருக்கிறார்.

ராதிகாவே எதிர்பார்த்து இருக்க மாட்டார்
கோபி இனியாவுக்காக சென்று பள்ளியில் ஹெட் மாஸ்டர் இடம் பேசியதால் பாக்கியா இனியாவை அடித்ததால் வீட்டை விட்டு இனியா கிளம்பி கோபியோடு சென்றுவிட்டார். ஏற்கனவே ராதிகாவிடம் இனியா என்னோடு வந்தால் நீ ஏற்றுக் கொள்வாயா? என்று கோபி கேட்டுக் கொண்டிருந்தார். அப்போதைக்கு ஆமாம், என் நான் மயூவை போல பார்த்துக் கொள்வேன் என்று ராதிகா கூறி வச்சிருந்தார். ஆனால் இவ்வளவு சீக்கிரத்தில் இனியா அந்த வீட்டிற்கு வருவார் என்று எதிர்பார்த்து இருக்க மாட்டார். அதனால் தான் இனியாவின் எதிர்பாராத வருகையால் ராதிகா ஒரு நிமிடம் திகைத்துப் போய் இருக்கிறார்

இனியா பாடு கஷ்டம் தான்
பாக்கியாவும் வீட்டில் உள்ளவர்களும் திட்டியதால் கோபியோடு இனியா சென்று விட்டதால் வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் கஷ்டத்தில் இருக்கும்போது இனியா இனி ராதிகா வீட்டில் என்ன பாடுபட போகிறாரோ? என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே மையூ தன்னை அக்கா என்று அழைத்தது ஏற்றுக்கொள்ள முடியாமலும் அதே நேரத்தில் கோபியின் காரில் மயூ தான் இருக்கும் இடத்தில் அமர்ந்து செல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று கூறி வந்த இனியா, இனி ஒரே வீட்டில் இருக்கும்போது மயூக்கும் இவருக்கும் பிரச்சனை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இரண்டு தினங்களுக்கு முன்புதான் மயூவை கீழே தள்ளி விட்டிருந்தார். இதனால் இனி ராதிகா அதற்கு ரிவெச் எடுக்க இருக்கிறாராம்.

தாத்தாவின் சேட்டை ஆரம்பம்
இந்த நிலையில் தையில் பேக்கோடு ராமமூர்த்தியும் பாக்யாவின் வீட்டில் இருந்து வெளியே கிளம்பி விட்டார். அனைவரும் எங்கே செல்கிறீர்கள் என்று கேட்டதற்கு, என் பேத்தி இருக்கும் இடத்தில் தான் இனி நானும் இருப்பேன் என்று கோபி வீட்டிற்கு வந்திருக்கிறார். கோபி ராமமூர்த்தியை பார்த்ததும் இனியாவை கூட்டி செல்வதற்கு வந்தீங்களா? என்று கோபத்தோடு கேட்க, இல்லை இனி நானும் இங்கே தான் இருக்க போகிறேன் என்று சொன்னதும், கோபி மட்டுமல்லாமல் ராதிகாவும் செமையாக கோபப்பட்டு இருக்கிறார். இதுவரைக்கும் கோபியை வீட்டிற்கு வெளியே இருந்து திட்டி பிரச்சினை பண்ணிக் கொண்டிருந்த ராமமூர்த்தி இப்போது கோபியின் வீட்டிற்குள்ளே சென்று விட்டார். இனி பிரச்சனைகளுக்கும் கலகலப்புக்கும் பஞ்சமில்லாமல் எதிர்பாராத மாற்றத்தோடு பாக்கியலட்சுமி சீரியல் வர இருக்கிறது.












Click it and Unblock the Notifications