கனவு நிறைவேறியது! திருமணத்திற்கு பிறகு மகிழ்ச்சி செய்தி பகிர்ந்த ஹன்சிகா.. குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: நடிகை ஹன்சிகா மோத்வானி தன்னுடைய பல நாள் கனவு நிறைவேறியது என்று ஒரு நெகிழ்ச்சியான பதிவு ஒன்று வெளியிட்டு இருக்கிறார். தான் புதியதாக கட்டிய வீட்டில் தன்னுடைய கணவரோடு கிரகப்பிரவேசத்தில் கலந்து கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். இதற்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
நடிகை ஹன்சிகா மோத்வானி தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருகிறார். தமிழில் மட்டும் அல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்ற பலமொழிகளிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். கடந்த 2011 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான எங்கேயும் காதல் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழில் ஹன்சிகா அறிமுகமானார்.

அந்த திரைப்படத்தில் இவருடைய க்யூட்டான நடிப்பு, புசுபுசு என்ற இவருடைய உடல் அமைப்பை பார்த்ததும் ரசிகர்களுக்கு பிடித்து போய்விட்டது. இவரை அடுத்த குஷ்பூ என்று பலரும் அழைத்து வந்தனர். அந்த திரைப்படத்திற்கு பிறகு தனுஷ் உடன் மாப்பிள்ளை, விஜயுடன் வேலாயுதம், சூர்யாவுடன் சிங்கம் 2 என்று பல வெற்றி படங்களில் நடித்திருந்தார்.
அதோடு பிரியாணி, மான் கராத்தே, வாலு, அரண்மனை 2 என்று அடுத்தடுத்த ஹிட் படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் தான் திடீரென்று உடல் எடை குறைந்து ஆளே மாறி போயிருந்தார். அதற்குப் பிறகு அவர் நடித்த படங்கள் சறுக்கலை அடைந்தது. ஆனாலும் தன்னுடைய ஐம்பதாவது படமான மகா படத்தை அதிக அளவில் நம்பி இருந்தார். அந்த படமும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

இதைத்தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு சோஹே கட்டாரியா என்ற தன்னுடைய நண்பரையே திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். ஹன்சிகாவின் திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பிறக்கும் தொடர்ச்சியாக ஹன்சிகா நடித்துக் கொண்டிருக்கிறார். சினிமாவில் மட்டுமல்லாமல் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் கெஸ்ட் ஆக கலந்து கொண்டு இருக்கிறார்.

இந்த நிலையில் தன்னுடைய கணவரோடு சேர்ந்து ரசிகர்களிடம் தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து இருக்கிறார். அதாவது ஹன்சிகா தான் புதியதாக கட்டிய வீட்டில் குடியேறியிருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார்.

அந்த பதிவில் தன்னுடைய புது வீட்டிற்குள் கணவரோடு நுழையும் புகைப்படம் மற்றும் யாகம் செய்த புகைப்படங்கள் அதற்குப் பிறகு வீட்டிற்குள் விதவிதமாக எடுத்த புகைப்படங்கள் என பலவற்றையும் ஹன்சிகா பகிர்ந்து இருக்கும் நிலையில் இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மற்றும் பல பிரபலங்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications