மறைந்தாலும் மணக்கும் முல்லைக்கு பிறந்தநாள்...வாழ்த்தும் ரசிகர்கள்
சென்னை: விஜே சித்ரா மறைந்த பிறகும் அவருடைய ரசிகர்கள் அவருக்கு வருத்தத்தோடு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
கடைசியாக அவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் போட்டோவுக்கு ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை கண்ணீரோடு அனுப்பி வருகின்றனர்.
ஒவ்வொரு வருடமும் அவருடைய ரசிகர்கள் சிறப்பாக பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் இந்த வருடம் இப்படி ஆகிவிட்டதே என்று பலர் பீல் பண்ணி வருகின்றனர்.

கண்ணீரோடு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
தொகுப்பாளராக அறிமுகமாகி சின்னத்திரை நடிகையாக கலக்கி கொண்டிருந்த விஜே சித்ராவின் பிறந்தநாளை தற்போது அவருடைய ரசிகர்கள் விமர்சனமாக கொண்டாடி வருகின்றனர். அவர் தற்போது உயிரோடு இல்லாமல் இருந்தாலும் அவருக்கு வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் அவருடைய பிறந்தநாளை ரசிகர்களோடு விஜே சித்ரா கொண்டாடி வந்த நிலையில் இன்று அவருடைய போட்டோவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

ரசிகர்களை கவர்ந்த சித்ரா
விஜே சித்ரா திடீரென்று தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சியில் மூழ்கியிருந்தனர். இப்ப வரைக்கும் அந்த அதிர்ச்சியிலிருந்து அவருடைய தீவிரமான ரசிகர்கள் பலர் வெளியே வர முடியாமல் தான் இருந்து வருகின்றனர். ஒரு உறவினர்களை போலத்தான் விஜே சித்ரா அவருடைய ரசிகர்களிடம் பழகி வந்தார் என்று அவருடைய நெருக்கமான பல ரசிகர்கள் கூறிவருகின்றனர். சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்தாலும் சமூக வலைத்தளத்தின் மூலமாக ரசிகர்களிடம் நேரடியாக தொடர்பில் இருந்தவர்.

பதில் வரவில்லையே! !??
தனக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறும் ரசிகர்களுக்கு பதில் கமெண்ட் அனுப்பி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்ப்பை ஒவ்வொரு பிறந்தநாளிலும் பெற்று வந்த அவர் இந்த பிறந்தநாளில் தனக்கு வாழ்த்து சொல்லும் ரசிகர்களுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை என்று பலர் ஏங்கி போயிருக்கின்றனர். ஒவ்வொரு பிறந்த நாளிலும் அவருக்காக பல ரசிகர்கள் பரிசுப் பொருள்களை அனுப்பி வருவர். அவர்களுக்கு நன்றி கூறி விஜே சித்ராவும் பதில்களை அனுப்பிக்கொண்டிருந்தார். ஆனால் அப்படி ஒரு நிகழ்வு இனி நடக்கப் போவதில்லை என்று தெரிந்ததும் வருத்தத்தோடு ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் அவருக்கு வாழ்த்து கூறி அவருடைய போட்டோக்களை வைரலாகி வருகின்றனர்.

மனம் உருகிய ரசிகர்கள்
விஜே சித்ரா எப்போதுமே தான் ஒரு செலிபிரிட்டி என்ற ஒரு கெத்து காட்டாமல் ரசிகர்களுடன் சகஜமாக பழகி வந்துள்ளார். ரசிகர்களுடைய பிறந்தநாளுக்கு சென்று இன்ப அதிர்ச்சியும் கொடுத்துள்ளார். அதனால்தான் அவர் சின்னத்திரையில் நடிகையாக இருந்தாலும் வெள்ளித்திரை நடிகர்களுக்கு இணையாக ரசிகர்களை பெற்றிருந்தார். அவர் கடைசியாக நடித்து வந்த முல்லை கேரக்டரை யாராலும் மறக்க முடியவில்லை. அதனால் தான் தற்போதும் கூட அவருடைய நினைவாக பல ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் முல்லை என்று மனம் உருகி கூறிவருகின்றனர்.












Click it and Unblock the Notifications