பாண்டியன் ஸ்டோர் சீரியலில் புது முல்லை..வந்த முதல் நாளே இப்படியா? ஆர்ப்பாட்டமாக அல்லவா இருக்கு!
சென்னை: விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர் சீரியலில் புது முல்லை கேரக்டரில் நடிகை லாவண்யா அறிமுகமாகி இருக்கிறார்.
முல்லை கேரக்டரில் மூன்றாவது கதாநாயகி அறிமுகமாகி இருக்கிறார்.
இதுவரைக்கும் முல்லையாக காவியா நடித்து வந்தார். தற்போது அவர் விலகி இன்றைய எபிசோட்டில் இருந்து லாவண்யா நடிக்கிறார்.

முல்லையாக மனதில் பதிந்தவர்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் தற்போது ஆயிரம் எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் ஆரம்பத்தில் இருந்த பல கேரக்டர்கள் மாறிவிட்டனர். அதில் முல்லை கேரக்டரும் ஒன்று. ஆரம்பத்தில் முல்லை கேரக்டராக ரசிகர்கள் மத்தியில் ஆழமாக பதிந்து இருந்த வி ஜே சித்ரா திடீரென இறந்து விட்டதால் அவருக்கு பதிலாக அதே கேரக்டரில் காவியா அறிவுமணி நடித்து வந்தார். இந்த நிலையில் ஒரு சில நாட்களாகவே காவியா இந்த சீரியலில் இருந்து விலகப் போவதாக செய்திகள் பரவி வந்தது.

காவியா கூறிய தகவல்
காவியாவும் ஒரு சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் அக்டோபர் 14ஆம் தேதி வரைக்கும் நடிக்கப் போவதாக பதிவு வெளியிட்டு ஹிண்டு கொடுத்து இருந்தார். இதனால் இவர் இந்த சீரியலை விட்டு விலக இருப்பது கன்ஃபார்ம் ஆகிவிட்டது. ஆனால் காவியாவிற்கு பதிலாக யார் முல்லை கேரக்டரில் நடிக்கப் போகிறார். என்பதுதான் தெரியாத புதிராக இருந்தது. ரசிகர்கள் பலரும் ஒவ்வொரு நடிகையின் பெயராக கெஸ் பண்ணிக் கொண்டிருந்தனர். அந்த வரிசையில் சிப்பிக்குள் முத்து சீரியலில் கதாநாயகியாக நடித்த லாவண்யா இந்த சீரியலில் நடிப்பார் என்று பலர் எதிர்பார்த்து வந்தனர். தற்போது அது நடந்து விட்டது.

புது முல்லை வந்தாச்சி
இன்றைய எபிசோட்டில் இவருக்கு பதில் இவர் என்று காவியாவிற்கு பதிலாக லாவண்யா நடித்த சீன்கள் ஒளிபரப்பாக தொடங்கிவிட்டது. நிகழ்ச்சி தொடங்கும் போது புது முல்லை கேரக்டரின் நடிக்கும் லாவண்யா பணத்தை எண்ணி கொண்டே, கதிரை மாமா சீக்கிரம் வாங்க என்று அழைத்துக் கொண்டிருக்கிறார். குளித்துக் கொண்டிருக்கும் கதிர் அவசர அவசரமாக வெளியே வந்து என்னவென்று கேட்கும் போது நமக்கு இன்றும் அதிகமாக லாபம் கிடைத்துவிட்டது என்று மகிழ்ச்சியாக கூறுகிறார். பார்ப்பதற்கு வி ஜே சித்ரா போலவே அலங்காரங்களை லாவண்யா செய்திருக்கிறார். இனி நமக்கு எப்போதுமே லாபம் கிடைக்கும் என்று கதிர் கூறுகிறார். அது மட்டுமல்லாமல் இவர்கள் எப்படியும் இவர்கள் வாழ்க்கையில் எப்போதும் முன்னேற போவதில்லை என்று கூறி வந்த முல்லையின் அக்காவிடம் தங்களுக்கு லாபம் கிடைத்த விஷயத்தை சென்று சொல்லப் போவதாக முல்லை கூறுகிறார் .

முதல் நாளிலே ரொமான்ஸ்
அப்படியெல்லாம் சொல்லக்கூடாது நமக்கு தோல்வி வரும்போது எப்படி அதை ஏற்றுக் கொள்கிறோமோ. அதே போல வெற்றியையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று முல்லைக்கு கதிர் அறிவுரை கூறிக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் கதிருக்கும் முல்லைக்கும் ரொமான்ஸ் சீன் தொடங்கி இருக்கிறது. முதல் நாளே இவர்களுக்கு டான்ஸ் வைத்து ரொமான்ஸ் கொஞ்சம் தூக்கலாக காட்டி இருக்கின்றனர். இது ஹாட்ஸ்டார் இல் ஒளிபரப்பாகி வருகிறது .ரசிகர்கள் தற்போது அதை பகிர்ந்து முதல் நாளில் இப்படியா? செய்ய வேண்டும் என்று புலம்பி வருகிறார்கள்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications