இது எல்லாம் சொந்த பந்தங்களா?? கோபிநாத் கேட்ட நச் கேள்வி..அரண்டு போன அரங்கம்
சென்னை: நீயா நானா நிகழ்ச்சியில் கோபிநாத் சொந்த பந்தங்களை பற்றி கூறியதை கேட்டு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
தோல்வியில எவன் கூட நிக்குறானோ அவன் தான் உண்மையான உறவு என்று கோபிநாத் பேசிய லேட்டஸ்ட் ப்ரோமோ ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
கஷ்டப்படும்போது கண்டுகொள்ளாமல் சென்ற சொந்த பந்தங்கள் எல்லாம் நல்லா இருக்கும்போது வந்து என்ன பிரயோஜனம் என்று ரசிகர்களும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

வரவேற்பு பெற்ற நீயா நானா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா ரியாலிட்டி ஷோ ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக கோபிநாத் நியாயமான தீர்ப்பினை வழங்கி வருவதாக ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது சமூக வலைத்தளத்தில் இந்த நிகழ்ச்சிக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. காரணம், கணவனை விட அதிகமாக சம்பளம் வாங்கும் மனைவி மற்றும் கணவர்களுக்கு இடையே நடக்கும் ஒரு கருத்துகள் தான் தற்போது சமூக வலைத்தளத்தை புரட்டி போட்டுக் கொண்டிருக்கிறது.

பணம்தான் எல்லாம்
தற்போது இந்த வாரம் முழுக்க இந்த நீயா நானா நிகழ்ச்சியை ஒரு குடும்பமே ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது ரசிகர்கள் கருத்துக்களை கூறி வருந்தாலும், நிகழ்ச்சியில் ஒரு படிக்காத சம்பளம் குறைவாக வாங்கும் கணவனுக்கு மனைவி மற்றும் சமுதாயத்தில் இருக்கும் நிலைமையை தோல் உரித்து காட்டியுள்ளது. மனைவியை விட சம்பளம் குறைவாக வாங்கினால் சமுதாயத்திலும் சரி மனைவியும் மதிக்க மாட்டார் என்பதை தற்போதைய நீயா நானா நிகழ்ச்சி பலருக்கும் உணர்த்தி இருக்கிறது என்று பலரும் கூறி வருகிறார்கள்.

சீனி ராஜாவின் மனக்குமுறல்
நீயா நானா நிகழ்ச்சியில் சீனி ராஜா என்பவர் குடும்பத்தோடு கலந்து கொண்டிருக்கிறார். இவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. கடந்த வாரம் தனது குழந்தையின் பிராகிரஸ் கார்டில் இவர் கையெழுத்து போடுவதற்கு ஒரு மணி நேரம் ஆக்குகிறார் என்றும் அதில் ஏபிசிடி படித்துக் கொண்டிருக்கிறார் என்றும் மனைவி கணவனை நக்கல் அடித்ததை சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. கணவனின் பாசத்தை பார்த்த கோபிநாத் நிகழ்ச்சியின் நடுவே சீனி ராஜாவுக்கு சிறந்த அப்பா எனும் பட்டத்தை கொடுத்து விட்டார். தற்போது மேலும் சீனி ராஜா தான் சரியாக வேலை இல்லாததால் குடும்ப த்தில் இருக்கும் சொந்த பந்தங்கள் யாரும் சரியாக பேசுவதில்லை என்று மனக்குமுறலை கொட்டி இருக்கிறார்.

உண்மையான உறவு
ஆரம்பத்தில் இதே நபர் தான் தனக்கு மச்சானாக வரவேண்டும் என்று ஆசைப்பட்ட சீனி ராஜாவின் மனைவியின் தம்பி கூட இவருக்கு சரியான வேலை இல்லாததால் இவரிடம் பேசுவதே இல்லையாம். இவரோடு 7 மணி நேரம் பஸ்ஸில் பயணம் செய்த போது கூட இவரிடம் ஒரு வார்த்தை பேசவில்லை என்று ஏக்கமாக கூறியிருக்கிறார். அதை குறித்து அவருடைய மனைவி, நான் இப்போது என்னுடைய தம்பியிடம் இதைப் பற்றி பேச முடியாது. ஏனென்றால் ஸ்டேட்டஸ் ப்ராப்ளம். நாங்க கொஞ்சம் அவன் ரேஞ்சுக்கு இல்லை என்று சம்பந்தமே இல்லாமல் பேசி இருக்கிறார். இதை பார்த்த கோபிநாத் உங்கள் கணவர் முன்னாடி இருந்த மாதிரி மீண்டும் நல்லா இருந்தா எல்லா சொந்தங்களும் வந்துருவாங்களா?? என்று கேட்டிருக்கிறார். அதற்கு சீனி ராஜாவின் மனைவி ஆமாம் என்று சொல்லவும், அப்படி ஒரு சொந்தங்கள் தேவையே இல்லை. தோல்வியில எவன் கூட நிற்கிறானோ அவன் தான் உண்மையான உறவு என்று கூறியிருக்கிறார். இதைப் பார்த்த சக போட்டியாளர்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களும் கோபிநாத்தை பாராட்டி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications