காதலுக்காக காவ்யா அழகம்மையை ஏமாத்துறாளே...இந்த பொண்ணுக்கு புத்தி கெட்டு போச்சா...
சென்னை: சன் டிவியின் அழகு சீரியல் ரொம்ப நல்லாருக்கு. டக்கு டக்குன்னு காட்சிகள் நகருது.இழுத்தடிக்கற வேலை எல்லாம் இந்த சீரியலில் இல்லவே இல்லை.
கோர்ட்டு சீனே ஒரு எபிசோடுல பாதிக்குள்ள முடிஞ்சுருதுன்னா பாருங்களேன்...பாப்புலர் லாயர் சகுந்தலா தேவி மகன், அவங்களை கேஸில் தோற்கடிச்ச சுதாவோட நாத்தனாரை காதலிக்கறான்.
சகுந்தலா தேவிக்கு இது தெரிஞ்சு, கோட்டீஸ்வரன் பையனை உங்க பொண்ணு வளைச்சு போடப் பார்க்கறா..ஜாக்கிரதைன்னு மிரட்டிட்டு போறாங்க. இதனால, காவ்யா காதலனிடம் பேச மறுக்கறா.

சுவர் தாண்டி
காவ்யா போனை எடுக்காமல் போக, அவனுக்கு சகுந்தலா தேவி வேற பொண்ணை ஃபிக்ஸ் பண்ணிட்டதை காவ்யாகிட்ட சொல்ல முடியாம தவிக்கறான் காதலன். ஒரு வழியா ராத்திரியோட ராத்திரியா காவ்யாவை பார்க்க சுவரேறி மாடிக்கு போயிட்டு, காவ்யாவை வெளியில் வர சொல்றான்.

கோயிலில்
நாளைக்கு கோயிலில் கண்டிப்பா மீட் பண்ணனும்னு.. ரெண்டு பேர் குடும்ப சம்மதத்தோடு கல்யாணம் செய்யணும்னா அந்த சாமியாரை பார்த்து, அம்மாகிட்ட குறி சொல்ல சொல்லணும். வந்துருன்னு சொல்றான்.

ஓகே
காவ்யாவும் ஓகே சொல்றா.. அடடா இந்த பொண்ணுக்கு என்னாச்சு அழகம்மையை ஏமாத்துதேன்னு சீரியல் பார்க்கறவங்களுக்கு மனசு சரியில்லைங்க. பாவம் அழகம்மை... அவ நல்ல மனசுக்கு நல்லதாவே நடக்கட்டும்னு வேற பேசிக்கறாங்க.

அனுமதி
மறுநாள் வெளியில் செல்ல காவ்யாவுக்கு சின்ன மருமக அனுமதி மறுக்க.. அழகம்மை பொண்ணுக்கு சப்போர்ட் செய்து, காவ்யாவை வெளியே அனுப்பறாங்க. காவ்யா கோச்சிங் சென்டர் போறேன்னு சொல்லிட்டு, காதலனை பார்க்க போறாளே.. என்ன நடக்கப் போவுதோன்னு சீரியல் பார்க்கறவங்க அங்கலாய்க்கறாங்க..
காதல் சந்தோஷத்தையும் தருது, அதே சமயம் வேதனையையும் தருதேன்னு காவ்யா புலம்பறா..
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications