கல்யாண விருந்து பாடலை பாடிய சூப்பர் சிங்கர் பாடகிக்கு இப்படி ஒரு பிரச்சனையா? பாவம் நொந்து போயிட்டாரு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கார்த்திக் சுப்புராஜனின் டோரதி படம் வெளியானதில் இருந்து படத்தை பற்றிய பேச்சு ஒரு பக்கம் என்றால் படத்தில் வரும் பாடல்களும் இசையும் இன்னொரு பக்கம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. குறிப்பாக இளையராஜா இசையில் வந்த கல்யாண விருந்து பாடல் வெளியான போது பழைய காலத்து திருமண பாடல் சாயலில் ரசிகர்களை கவர்ந்தது. இந்த பாடலை யுகேந்திரன், அந்தோணி தாசன் மற்றும் பிரியா ஜெர்சன் இணைந்து பாடி இருக்கிறார்கள்.

Super singer Vijay TV Priya Jerison

கல்யாண விருந்து பாடல் பாடிய பாடகி

இப்போது அந்த பாடலை பாடிய பிரியா ஜெர்சனே தனது சோசியல் மீடியா பக்கத்தில் பாடலை பாடி ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் பாடிய விதம் ரசிகர்களுக்கு பிடித்து போக, வழக்கம் போல பாராட்டுகளும் குவிந்து கொண்டிருக்கிறது. அதில் ஒரு ரசிகர்கள் போட்டிருக்கும் கமெண்ட் தான் இப்போது கவனம் இருத்திருக்கிறது. "படத்தில் வரும் பாடலின் பின்னணி குரலை விட, உண்மையிலே உங்க குரல் நன்றாக இருக்கிறது என்று யாராவது சொல்ல வருவார்கள் அதற்குள் இந்த பாடலை நான் தான் பாடினேன் என்று ஒரு போஸ்டர் உங்களுக்கு தயார் பண்ணி வைத்து விட வேண்டியதுதான்" என்று ஜாலியாக கமெண்ட் போட்டு இருக்கிறார்.

வருத்தமான பதில்

இதற்கு பிரியா ஜெர்ஷனும் அதே பணியில் பதில் கொடுத்து இருக்கிறார். "தம்பி நீங்களே ஒன்று தயாரித்துக்கொடுங்கள். என்னால் இதற்கு மேல் நான் தான் பாடினேன் என்று சொல்ல முடியவில்லை" என்று வருத்தத்தோடும் பதில் போட்டு இருக்கிறார். அதாவது ஒரு பாடலை பாடிவிட்டு இந்த பாடலை நான் தான் பாடினேன் என்று மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டிய நிலை வந்து விட்டது என்ற மாதிரி அவர் கமெண்ட்க்கு பிரியா ஜெர்சன் கொடுத்திருக்கும் பதில் ரசிகர்களையும் சிரிக்க வைத்திருக்கிறது.

Super singer Vijay TV Priya Jerison

பிரியா ஜெர்சன் பதிவு

அதுமட்டுமில்லாமல் பதிவில் ஒரு முக்கியமான விஷயத்தையும் சொல்லி இருக்கிறார். கல்யாண விருந்து பாடலில் தான் பாடிய பகுதி படத்தில் சற்று குறைக்கப்பட்டு இருப்பதாகவும், அதே நேரத்தில் உன்னை தொட்டு, எதுவும் இல்லை ஆகிய பாடல்கள் படத்தில் மிகவும் அழகாக பயன்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். குறிப்பாக கார்த்திக் சுப்புராஜ் அந்த பாடல்களை படத்தில் வைத்திருக்கும் விதத்தையும் அவர் பாராட்டி இருக்கிறார்.

Super singer Vijay TV Priya Jerison

சூப்பர் சிங்கர் பிரபலம்

இது ஒரு பக்கம் இருக்க, பிரியா ஜெர்சனுக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருப்பதும் அவருடைய இசை பயணத்தில் முக்கியமான விஷயம் தான். விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இறுதி சுற்று வரை சென்று முதல் ரன்னர் அப் ஆனவர் பிரியா ஜெர்சன். அந்த நிகழ்ச்சியின் மூலம் தனக்கான ரசிகர்களையும் உருவாக்கிக் கொண்டார். அதற்கு பிறகு திரைப்படங்கள் மற்றும் தனி பாடல்களும் பாடி வருகிறார். தற்போது இளையராஜா இசை அமைத்த கல்யாண விருந்து பாடலில் பாடும் வாய்ப்பு கிடைத்திருப்பது அவருடைய பயணத்தில் சொல்லிக் கொள்ளக்கூடிய இன்னொரு விஷயம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+