ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை.. பாட்டுப் போட்டியில் பட்டையைக்கிளப்பும் இசைவாணி மற்றும் ராஜலட்சுமி
சென்னை: பாட்டுப்பாடி பஞ்சாயத்தை தொடங்கியிருக்கும் இசைவாணி மற்றும் ராஜலட்சுமியின் லேட்டஸ்ட் வீடியோ ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.
Recommended Video
யார் பெரியவர் என்று தற்போது பாட்டு பாடி இசை வாணியும் ராஜலட்சுமியும் சமூக வலைத்தளத்தை கலக்கி இருக்கின்றனர்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியால் பிரபலம்
விஜய் டிவியின் பிரபலமான மற்றும் நாட்டுப்புற பாடகியான ராஜலட்சுமி கானா பாடகி இசைவாணியுடன் சேர்ந்து கலக்கலாக தனது திறமையை வெளிக்காட்டி இருக்கிறார். யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்று இவர்கள் இருவரின் பாடல்கள் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஏற்கனவே கிராமப்புறங்களில் பாட்டு பாடிக் கொண்டிருந்த ராஜலட்சுமி விஜய் டிவியின் மூலமாக பலருக்கும் பரிச்சயமான ஒரு பாடகியாக மாறியிருக்கிறார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் இவரும் இவருடைய கணவரும் சேர்ந்து தங்களுடைய நாட்டுப்புற பாடலை உலகமெங்கும் பிரபலப் படுத்தி இருக்கின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகம்
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பிறகு ராஜலட்சுமி தன்னுடைய கணவருடன் சேர்ந்து பல்வேறு யூடியூப் பாடல்களை மட்டும் இல்லாமல் திரைப்பட பாடல்களையும் பாடி வருகிறார். இவர் பாடிய புஷ்பா திரைப்படத்தின் சாமி பாடல் பெரிய அளவில் ஹிட்டாகி இருக்கும் நிலையில் கானா பாடகியான இசை வாணியை சந்தித்துள்ளார். கானா பாடகியாக மட்டுமல்லாமல் திரைப்பட பாடல்களை பாடிக் கொண்டிருக்கும் ஒரு பிரபலமாக இருந்து வரும் நிலையில் இவரும் தன்னுடைய திறமையை வெளிக்காட்டும் விதமாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கலந்து கொண்டு அந்த நிகழ்ச்சியின் மூலம் அதிக அளவில் பிரபலமடைந்து இருக்கிறார்.

சந்திப்புக்கான காரணம்
இசைவாணி பிக்பாஸ் நிகழ்ச்சி விட்டு வெளியேறிய பிறகு பல மேடை நிகழ்ச்சிகளில் பாட்டு பாடிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது ராஜலட்சுமி மற்றும் இசை வாணியின் திடீர் சந்திப்புக்கான காரணம் என்னவாக இருக்கும் இருவரும் சேர்ந்து ஏதேனும் புதிய திரைப்படங்களில் பாட்டு பாட போகிறார்களா?? என்று ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வரும் நிலையில் இவர்கள் இருவருடைய பாடல்களும் அழகாக இருக்கிறது என்றும் பலர் கூறி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் வழக்கம்போல இவர்களை கலாய்த்து வருபவர்கள் நெகட்டிவ் கருத்துக்களையும் அனுப்ப தவறவில்லை.

ரசிகர்களால் பகிரப்படும் வீடியோ
சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இசை வாணி மற்றும் ராஜலட்சுமி இருவருமே தற்போது ஜோடியாக சேர்ந்து பாட்டுபாடி இருக்கும் வீடியோவை இசை வாணியின் ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர். இசைவாணி மற்றும் ராஜலட்சுமி இருவரும் பாட்டு பாடிக் கொண்டிருக்கும் போது அருகில் இருக்கும் ராஜலட்சுமியின் கணவர் செந்தில் தானும் இதில் கலந்து கொள்ளலாமா? ? கலந்து கொள்ள வேண்டாமா??என்ற குழப்பத்திலேயே பாட்டு பாடி வருகிறார். இந்த வேடிக்கையான வீடியோஸ் இவர்களுடைய ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications