ரூ.2000 கோடியில் ஐசரி கணேஷ் பொண்ணு கல்யாணம்? இவர்தான் அந்த மாப்ளை.. மாலத்தீவு மலைக்க போகுது: பிரபலம்
சென்னை: ஐசரி கணேஷ் மகளின் திருமண வரவேற்பு சென்னையில் நடைபெற உள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பாஷ்யம் பிரார்த்தனாவில் இந்த வரவேற்பு நடைபெற உள்ளது. இத்திருமண ஏற்பாடுகள் குறித்த செய்திகள்தான் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது. இந்நிலையில், மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா பேட்டி ஒன்றில் ஐசரி கணேஷ் இல்ல திருமண ஏற்பாடுகள் குறித்து பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
திரைப்பட தயாரிப்பாளர், நடிகர், கல்வியாளர், சென்னை வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் என்ற பன்முகம் கொண்டவர் ஐசரி கணேஷ்.. இவர் மறைந்த நடிகரும் , எம்ஜிஆரின் விசுவாசியுமான ஐசரி வேலனின் மகன் ஆவார். பல வெற்றிப் படங்களை தயாரித்து வருபவர் ஐசரி கணேஷ்..

இவரது மூத்த மகளுக்கு விரைவில் திருமணம் செய்ய போகிறார்.. திருச்சியைப் பூர்விகமாகக் கொண்ட தொழிலதிபர் உமாசங்கர் - சித்திரா தம்பதியரின் மகனான லஷ்வின் குமார் ஐசரி குடும்பத்தின் மருமகனாகப் போகிறார்.
ஐசரி கணேஷ் மகள்
இந்நிலையில், Realone Media என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சேகுவேரா, "ஐசரி கணேஷின் கல்வி நிறுவனத்தில் பணிபுரியும் 800 பேரும், தங்கள் குடும்பத்துடன், ஐசரி கணேஷின் இல்லத் திருமணத்துக்கு செல்ல நேரிடும்.
அதேபோல அவரது பள்ளி மாணவர்கள் , அகில இந்திய அளவில் பல விஐபிகள், சர்வ கட்சி தலைவர்கள்., சினிமா வட்டாரத்தில் பெரும்படையே திருமணத்தில் திரள உள்ளது.. இப்படி அனைவரும் திரண்டு வரும்போது நிச்சயம் 25,000 அல்லது 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திருமணத்தில் பங்கேற்கலாம்.
பலகோடிகளை கொட்டி தன்னுடைய மூத்த மகளுக்கு இந்த திருமணத்தை செய்கிறார். வீட்டின் முதல் திருமணம் என்பதால், பிரம்மாண்டமான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
காதல் திருமணம்
மகளின் விருப்பப்படி இந்த திருமணம் மாலத்தீவில் பிரம்மாண்டமாக நடக்கிறது.. ஏற்கனவே ஜப்பான், சிங்கப்பூரில் பல பிரபலங்கள் திருமணங்களை நடத்தியிருந்தார்கள். ஆனால், அவைகளை எல்லாம் ஐசரி கணேஷ் வீட்டு திருமணம் மிஞ்சிவிடும்.. எப்படியும் 2000 கோடி செலவு செய்வார் என்றே தெரிகிறது.
நடிகர் சங்கம், இயக்குனர் சங்கம், செய்யக்கூடிய பல காரியங்களை செய்ததே ஐசரி கணேஷ்தான்... சினிமா வட்டாரத்தில் ஏழைத் தொழிலாளர்களுக்கு பென்ஷன் தந்து வருகிறார்.. ஏழை குழந்தைகளை என்ஜினியராக்கியிருக்கிறார்.. மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கு உதவி கொண்டிருக்கிறார்.. இதெல்லாம் யாருக்கும் வெளியே தெரியாது.. மற்றவர்களும் இதை சொல்வதில்லை.. எம்ஜிஆர் மடியிலேயே வளர்ந்தவர்.. தயாள குணம் இயல்பிலேயே இவருக்கு உண்டு.. தான் கொடுப்பதை பிறருக்கு காட்டிக் கொள்ள மாட்டார்..
நெப்போலியனுக்கு தனி மனசு
நெப்போலியன் தன்னுடைய மகன் திருமணத்தை, அவரது மனமகிழ்ச்சிக்காக செய்தார்.. பல கோடிகளில் செலவு செய்து திருமணத்தை செய்தாலும், அடுத்தவர்களை உபசரிப்பதற்கும், அவர்களுக்கு செலவு செய்வதற்கும் ஒரு தனி மனசு வேணும். அந்த மனசு நெப்போலியனிடம் உள்ளது..
நெப்போலியனின் மகனுக்கு நடந்தது போலவே இந்த திருமணமும் நடக்கும்.. அதிலும் அம்பானி வீட்டு திருமணம் போலவே, ஐசரி கணேஷ் வீட்டு திருமணமும் நடக்கும். மாற்றுத்திறனாளிகள் பங்கு பெற வேண்டும் என்பதற்காக விசேஷ ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
அதேபோல, நடிகைகளை பொறுத்தவரை, எம்ஜிஆர் காலத்து நடிகைகள், 80கள் காலகட்ட நடிகைகள், இப்போதுள்ள நடிகைகள் என அனைத்து தரப்பு நடிகைகளும் ஐசரி கணேஷ் இல்ல திருமணத்தில் பங்கேற்க உள்ளார்கள்.
2000 கோடி ரூபாய்
இந்த திருமணத்தில் மிகவும் ஆச்சரியப்படக்கூடிய விஷயம் என்னவென்றால், அவர் தன்னுடைய மகளுக்கு தேர்ந்தெடுத்துள்ளது மிடில் கிளாஸ் குடும்பத்து மாப்பிள்ளையைதான்.. இது மகளின் காதல் திருமணம் என தெரிகிறது. அப்படியே இருந்தாலும், அதை ஆமோதித்து, மகளின் மனசுக்கு பிடித்த மாப்பிள்ளையை, அதிலும் மிடில் கிளாஸ் மணமகனாக ஏற்றுக் கொள்வது என்பது மிகப்பெரிய விஷயம்.
இந்த திருமணத்திற்காக சென்னை இசிஆர் சாலையில் ஒரு பிரம்மாண்ட செட் போட்டிருக்கிறாராம். 30 கோடி ரூபாய் செலவழித்து மிக பிரம்மாண்டமாக திருமண வரவேற்பு அரங்கத்தை, சினிமா செட் போல செய்திருக்கிறார்கள்.
20 ஆயிரம், 30 ஆயிரம் பேர் திருமணத்தில் பங்கேற்க உள்ளதால், அவ்வளவு பேரையும் மாலத்தீவு அழைத்து செல்ல முடியாது. எனவே, மாலத்தீவில் திருமணம் நடந்தாலும், ரிசப்ஷன் சென்னையில் வைக்க நிறைய வாய்ப்புள்ளது. 2000 கோடி ரூபாய் இந்த திருமணத்துக்கு செலவாகும் என்றே தெரிகிறது" என்று தெரிவித்துள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications