ஜனநாயகன் எப்படி இருக்கு? பார்க்க முடியல கொடுமை! ரஜினியையும் இழுத்து ப்ளூ சட்டை மாறன் அசிங்கப்படுத்திட்டாரே!
சென்னை: பெரிய எதிர்பார்ப்புக்கு பிறகு ஜனநாயகன் திரைப்படம் நேற்று (ஜூலை 23) பிரமாண்டமாக தியேட்டரில் ரிலீஸ் ஆனது. திருவிழா போல கொண்டாடிய ரசிகர்கள் இன்றும் படத்திற்கு அமோக ஆதரவு கொடுத்து வருகிறார்கள். ஆனால் இந்த படத்தை பார்த்த ப்ளூ சட்டை மாறன் கொடுத்த ரிவியூ தான் சோசியல் மீடியாவில் விமர்சனத்தை சந்தித்திருக்கிறது. எந்த படத்தையும் அதில் சொத்தை இதில் சொத்தை என்று குறை சொல்ற ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய பாணியில் இந்த படத்தையும் விளாசி இருக்கிறார்.
அதாவது ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய youtube பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், பாலையா நடித்த பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் தான் ஜனநாயகன் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் இந்த படத்தை அப்படியே எடுத்து வைக்கல. தமிழுக்கு ஏத்த மாதிரி கொஞ்சம் பிரியாணி மசாலா, வத்தல் பொடி, உப்பு எல்லாம் போட்டு கிண்டி வைத்திருக்கிறார்கள்.

ஜனநாயகன் ப்ளூ சட்டை மாறன் ரிவ்யூ
இந்த படம் 3 மணி நேரம் 3 நிமிடம் ஓடுது. அதில் ரெண்டரை மணி நேரம் பல்லை கடிச்சுட்டு பார்த்தா கூட கடைசி அரை மணி நேரம் எல்லாம் ரோபோட் சண்டை, போர் என்று கொலையா கொன்று விட்டார்கள். இந்த படத்தில் எத்தனை பிரச்சனைகள் என்று சொல்லவே முடியாது. ஹீரோ விஜய்க்கு ஜெயிலில் பிரச்சனை, ஜெய்லர் வீட்டு பிரச்சனை, கள்ளச்சாராய பிரச்சனை, மலைவாசி பிரச்சனை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு, மத கலவரம் இடையிடையே கட்சி பிரச்சாரம் என பல பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கிறது.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிற நமக்கு அய்யோ போதுமடா சாமி என்று தோன்றலாம். தெலுங்கு படத்தை தமிழில் எடுத்து இருந்தால் கூட ஓகே சொல்லலாம். ஆனால் தெலுங்கு படத்தை தெலுங்கு படமாகவே எடுத்து வைத்திருக்கிறார்கள். அதையும் தெலுங்குல வேற டப்பிங் பண்ணி இருக்காங்க. அதை பார்த்த தெலுங்கு ரசிகர்கள் ஏன்டா எங்க வீட்டு கேசரியை எடுத்துட்டு போய் அதுல கொஞ்சம் முந்திரிப்பருப்பை போட்டு எங்க தலையிலேயே கெட்ட பாக்குறீங்களான்னு மீம்ஸ் போட்டு கலாய்க்கிறாங்க.
ப்ளூ சட்டை மாறன் கேள்வி
இந்த படத்தின் கதையை எடுத்துக்கிட்டா இதெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லைன்னு சொல்லுற மாதிரி தான் கதையை எடுத்து வைத்திருக்கிறார்கள். அதுபோல இன்னொரு கேள்வியையும் நாம இந்த ஹீரோ கிட்ட கேக்கணும். அது நான் பிகில் படத்திலேயே கேட்டதுதான். இந்த ஹீரோ சாப்பாட்டுக்கு என்னதான் பண்ணுவாரு? அவங்க அம்மா வேற சாப்பாடு இல்லாமல் இருக்கிறாங்க. ஹீரோ கூட சுத்துறவங்க எல்லாம் முழு யானையையே தின்பாங்க போல, அந்த அளவுக்கு இருக்காங்க.
ஜனநாயகன் படத்தின் முக்கிய கதை
அவங்களுக்கு எல்லாம் ஹீரோ எப்படி சாப்பாடு போடுறாரு? என்று எல்லாருக்கும் கேள்வி வரும். அதுபோல பாடல்களும் படத்துல சரியா இல்ல என்று சொல்லி இருக்கிறார். மேலும் கடைசியாக இந்த படம் முழுக்க விஜய் ரசிகர்களுக்காக எடுக்கப்பட்டது, கட்சியின் பிரச்சாரத்துக்காக தான் எடுக்கப்பட்டது.. அந்த எண்ணம் நிறைவேறியதா என்றால் 100% நிறைவேறிவிட்டது.

ரஜினியை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்
ஆனால் பொதுவான ரசிகனாக முக்கால் மணி நேரம் பல்லை கடிச்சுட்டு பார்த்து விடலாம் கடைசி அரை மணி நேரம் ரொம்ப கஷ்டம். இதுதான் கடைசி படம் என்பது விஜய் ரசிகர்களுக்கு வருத்தமாக இருக்கும். அவருடைய லாஸ்ட் டான்ஸ் பார்த்தால் பலருக்கு ஃபீலிங் வரலாம். பொதுவான ரசிகர்கள் விஜயை மிஸ் பண்ணுவார்கள். ஆனால் அவர் பீல்டை விட்டு போறது தலீவருக்கு (ரஜினி) தான் மகிழ்ச்சியாக இருக்கும். போயும் போயும் என் பட்டத்தை புடுங்க பார்த்திங்களே என்று புலம்பிட்டு இருக்கிறாரு... என்று போகிற போக்கில் ரஜினியையும் ப்ளூ சட்டை மாறன் கலாய்த்து இருக்கிறார்.


Click it and Unblock the Notifications
