வாய்ப்பில்லை ராஜா அதுக்கு உனக்கு வாய்ப்பே இல்லை..அசீம் பற்றி அதிரடியாய் பதிவு வெளியிட்ட காஜல் பசுபதி
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் அசீம் ஜெயிக்க வாய்ப்பே இல்லை என்று காஜல் பசுபதி தன்னுடைய பதிவை வெளியிட்டு இருக்கிறார்.
அசீமுக்கு எதிராக பல சின்னத்திரை நடிகர் நடிகைகள் கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது காஜல் பதிவு சமூக வலைத்தளத்திலும் பெரும் அதிர்வை ஏற்படுத்தி இருக்கிறது.
அசீமுக்கு ஆதரவாக காஜல் பசுபதி போஸ்ட்டை கலாய்த்தவருக்கு காஜல் பதிலடி கொடுத்திருக்கிறார்.

அசீமின் செயல்பாடு
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் சின்னத்திரை நடிகராக இருக்கும் அசீம் சீரியலில் கதாநாயகனாக நடித்து பெயர் வாங்கியதை விடவும் இந்த நிகழ்ச்சியின் முலமாக அதிகமாக பரபரப்பை ஏற்படுத்தி பிரபலமாக இருக்கிறார். நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்து இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற வேண்டும் என்றால் சண்டை மட்டும் தான் தீர்வு என்று நினைத்தபடியே இவர் செயல்பட்டு வருவதாக ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனாலும் இவருக்கு ஆதரவு ஒவ்வொரு வாரமும் குவிந்து வருகிறது.

மாறாத கேரக்டர்
முதல் வாரத்தில் இருந்து தொடர்ந்து அசீம் பல வாரங்களாகவே எலிமினேஷன் லிஸ்டில் வந்துகொண்டே இருக்கிறார். ஆனாலும் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு இருப்பதன் காரணமாகவே இவர் ஒவ்வொரு வாரமும் அதிகளவில் வாக்குகளை பெற்றுக் கொண்டிருக்கிறார். கமல் என்னதான் இவரை வார இறுதி நாட்களில் திட்டி தீர்த்து அறிவுரை கூறி கண்டிப்பு கொடுத்தாலும் இவர் வழக்கமாக செயல்படும் முறையிலேயே இவர் செய்து கொண்டிருக்கிறார். ஞாயிற்றுக்கிழமை இரவு இவர் கமல் பேசியதை நினைத்து வருத்துவதும் திங்கக்கிழமை காலையில் மீண்டும் பழைய செயலுக்கே மாறுவதும் ஒவ்வொரு வாரமும் நடந்து கொண்டிருக்கிறது என்று இவரை குறித்து கலாய்த்து கொண்டிருக்கின்றனர்.

சக நடிகர்களின் குற்றசாட்டு
இந்த நிலையில் ரசிகர்கள் தான் இவருக்கு அதிகமாக ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கிறனர். ஆனால் பிரபலங்கள் குறிப்பாக இவரோடு சீரியல்களில் பணிபுரிந்த நடிகர் இவரை குறித்து பல நெகட்டிவ் கருத்துக்களையே கூறி வருகிறார்கள். இவர் சூட்டிங் ஸ்பாட்டில் சக நடிகைகளை தரக்குறைவாக பேசி வருவதால் அசீம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வெளியேயும் இப்படித்தான் இருக்கிறார் என்று இவரைக் குறித்து பலரும் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது வெள்ளி திரை சின்னத்திரையில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை காஜல் பசுபதியும் தன்னுடைய கருத்தை வெளியிட்டு இருக்கிறார்.

காஜலின் பதிலடி
அதில் உனக்கு எல்லாம் ஜெயிக்க வாய்ப்பு இல்லை தம்பி என்று கேப்ஷன் கொடுத்து அதற்கு கீழே அசீம் ஏன் ஏன் எனக் கேட்பது போன்றும், ஏன்னா நீ எல்லாம் ஜெயித்தால் தவறான உதாரணமாகிவிடும் டா சைக்கோ என்கிற வார்த்தையை கேப்ஷன் ஆக கொடுத்து இருக்கிறார். ஓபன் ஆக இவர் வெளியிட்ட இந்த கருத்து சமூக வலைத்தளத்தில் பலருடைய பாராட்டலையும், வெறுப்பு எதிர்ப்பையும் பெற்று வருகிறது. அதில் ரசிகர் ஒருத்தர் நீங்களும் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஜெயிக்க முடியாமல் தானே வெளியே வந்து விட்டீங்க என கேட்க அண்ணா எவ்ளோ வேணா சீப்பா செஞ்சு ஜெயிக்க, யோசிக்க நான் உங்க அசீம் இல்லையே என்று பதில் கூறியிருக்கிறார்.
-
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
சிவகார்த்திகேயனால் 120 கோடி கடன்? தயாரிப்பாளர் கண்ணீர்... "இன்னும் 2 படம் பாக்கி இருக்கு" என உருக்கம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications