Kaal Kattu 2.O: இது மகளிர் தினத்துக்கான வெப் சீரிஸ்... சன் டிவி ஐஸ்வர்யா நடிப்பில்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிளாக் பசங்க என்று ஒரு யூடியூப் சானல்... அதில் கால்கட்டு முதல் சீசன் முடிந்து இப்போது இரண்டாவது சீசன் கால்கட்டு 2. ஓ என்று வெளியாகி வருகிறது. சன் டிவியின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஐஸ்வர்யா இந்த சீரிஸில் நடிச்சு இருக்கார்.

யூடியூப் சானல் வெப் சீரிஸில், சன் டிவி, விஜய் டிவி போன்ற தொலைக்கட்சி சீரியல் நட்சத்திரங்கள், நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் நடிப்பது என்பது ஒரு ஹாபி மாதிரி ஆகிவிட்டது,. நட்சத்திரா, செந்தில், ஸ்ரீஜா, ஐஸ்வர்யா என்று பட்டியல் நீள்கிறது.

கால்கட்டு வெப் சீரிஸின் 2.ஓ வெர்ஷனில் ஐஸ்வர்யா ஹீரோயினாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக சிவா என்கிற இளைஞர் நடிக்கிறார்.இருவரும் காதலிச்சு கல்யாணம் செய்துக்கொண்டவர்கள்.

ஆங்கிலம் ஹிந்தி வெப் சீரிஸ்

ஆங்கிலம் ஹிந்தி வெப் சீரிஸ்

அமேசான், நெட்ஃபிளிக்ஸ் போன்ற இணைய தளங்கள் நிறைய வெப் சீரீஸ் தயாரித்து வருகின்றன. இவை ஹிந்தி, ஆங்கிலம் என்கிற மொழிகளில்தான் அதிகம் வெப்சீரிஸ் வெளியிடுகின்றன. என்றாலும், இதில் மொழியாக்கம், சப் டைட்டிலுடன் வெப் சீரிஸ் என்று ஒரு சில சீரிஸ் தமிழிலும் இப்போது பார்க்கக் கிடைக்கின்றன.

யூடியூப் சானல்களில் வெப்சீரிஸ்

யூடியூப் சானல்களில் வெப்சீரிஸ்

நிறைய யூடியூப் வெப் சீரிஸ் தமிழில் ஷூட் செய்யப்பட்டு, ரொம்ப குறைந்த செலவில் வெப் சீரிஸாக உருவாகி, பலரும் இதை பார்த்து மகிழ்ந்து வருகின்றனர். இது இளைஞர்களை சென்றடைய யாராவது ஒரு பிரபலம் தேவைப்படுகின்றனர். அப்படி இவர்களின் பட்ஜெட்டுக்குத் தகுந்த மாதிரி தொலைக் காட்சிகளின் சீரியல் நட்சத்திரங்கள் இவர்களுக்கு கைக்கொடுத்து வருகின்றனர்.

பிரபலங்கள் வெப் சீரிஸ்

பிரபலங்கள் வெப் சீரிஸ்

சின்னத்திரை பிரபலங்கள் வெப் சீரிஸில் நடிப்பதை ஒரு தொழிலாகவே செய்து வருகின்றனர். தொலைக்காட்சி சீரியல்களில் எல்லா நாளும் அவர்களுக்கு வேலை இருப்பதில்லை. அதைவிட வெப் சீரிஸ் என்று வரும்போது அதிக நேரம் எடுத்து காட்சிகளை ஷூட் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. பெரும்பாலும் கதாநாயகன், கதாநாயகி தவிர ஓரிரு நட்சத்திரங்கள் மட்டுமே எதாவது காட்சியில் வருவார்கள். எனவே, இவர்களுக்கு அதிக நாட்கள் கால்ஷீட் கொடுக்க வேண்டும் என்கிற அவசியமும் இல்லை.

என்னை மாற்றும் காதலே

என்னை மாற்றும் காதலே

பிளாக் பசங்க யூடியூப் சானலில், கால்கட்டு 2.ஓ வெப்சீரிஸ் ஒவ்வொரு எபிஸோடிலும் ஒரு குட்டி கதையுடன் முடிவடைகிறது. மகளிர் தின ஸ்பெஷலாக வெளிவந்த என்னை மாற்றும் காதலே என்கிற டைட்டிலில் ஒரு குட்டி கதை. கணவன் மனைவி ஐஸ்வர்யா சிவாவுக்குள் ஒரு சின்ன ஈகோ கிளாஷ் ஆகிறது. அதாவது என்னோட ஹெல்ப் இல்லாம உன்னால ஒரு நாள் இருக்க முடியாதுன்னு ஐஸ்வர்யா சொல்லும் அளவுக்கு போகிறது.

பசி நேரத்தில்

பசி நேரத்தில்

இவனும் உன் ஹெல்ப் இல்லாம என்னால காலம் பூரா கூட் இருக்க முடியும்டின்னு சொல்லிட்டு வீம்பு காண்பிக்கிறான். ஒரு காபி போட்டுக் குடிக்க கூட தெரியலை. பாத்ரூமில் தன்னோட பிரஷ் எதுன்னு கூட தெரியாமல் இங்கி பிங்கி பாங்கி போட்டு கடைசியில் ஐஸ்வர்யா பிரஷால் பல் தேய்க்கிறான். மதியம் சப்பாடு ஆர்டர் பண்ணைக் கூட தெரியாமல் உட்கார்ந்து இருக்க, உணவு நேரத்துக்கு ஐஸ்வர்யா ஆர்டர் செய்து அனுப்பி வைக்கிறாள்.

சாப்பாடு மட்டும்

சாப்பாடு மட்டும்

போனில் சார்ஜ் தீர்ந்து .போச்சு. அச்சசோ... சார்ஜர் கூட எடுத்து வைக்கலியேன்னு எதுக்கும் பேக்கை பார்க்கலாம்னு பார்த்தால், ஐஸ்வர்யா சார்ஜர் எடுத்து வச்சு இருக்கா. பேசவில்லை என்றாலும், செய்ய வேண்டிய கடமைகளை ஐஸ்வர்யா சரியாக செய்துவிடுகிறாள். சாப்பாடு மட்டும் அவளிடம் கேட்டு சாப்பிட இன்னும் மனசு வரலை சிவாவுக்கு.

ஐ லவ் யூ

ஐ லவ் யூ

அந்த நேரம் பார்த்து அம்மா போன் பண்றாங்க. அம்மா இங்கே வந்து என் கூட சரி எங்க கூட தங்கிட்டு போன்னு சொல்ல, டேய் அப்பா என்னை விட்டுட்டு இருக்க மாட்டாருடா.. அவர் இருந்தாலும் என்னால அவரை விட்டுட்டு இருக்க முடியாது. எல்லாத்தையும் நான்தான் அவருக்கு பார்த்து பார்த்து செய்யறேன். எப்படிடான்னு அம்மா இழுக்க... போனை வச்சுட்டு ஐஸ்வர்யாவை பார்க்கிறான். உடனே ஐ லவ் யூ சொல்லி சரண்டர் ஆகிறான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+