அண்ணாச்சியை பார்த்து பயப்பட்ட ஆண்டவர்...இதுல ஏதோ உள்குத்து இருக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐந்தாவது சீசனின் முதல் பஞ்சாயத்தில் தரமான சம்பவம் காத்திருக்கிறது என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

இந்த வார பஞ்சாயத்தில் யாருடைய கதை பிரச்சனையை கிளப்பப் போகிறதோ என ரசிகர்கள்
ஆர்வத்தில் இருக்கின்றனர்.

ப்ரோமோவில் அண்ணாச்சியை வம்பிழுக்கும் கமல்ஹாசனை பார்த்ததும் அப்போ இந்த வாரம் கலகலப்புக்கு பஞ்சம் இல்லையே என்று நெட்டிசன்கள் தங்கள் குறும்புகளை தொடங்கிவிட்டனர்.

 ஐந்தாவது சீசன் தொடக்கம்

ஐந்தாவது சீசன் தொடக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு சீசனுக்கும் தொடங்குவதற்கு முன்பு வரைக்கும் பெரும் எதிர்ப்புகளையும் எதிர்பார்ப்புகளையும் பெற்றிருந்தாலும் நிகழ்ச்சி தொடங்கியது. பட்டி தொட்டி எல்லாம் இதைப் பற்றி தான் பேசி வருகின்றனர். அதேபோல தற்போது இந்த சீசனிலும் இருந்து வருகிறது. தொடர்ந்து ஐந்தாவது சீசனில் காலடி எடுத்து வைத்திருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தீவிரமான ரசிகர்கள் இந்த நிகழ்ச்சி எப்போது தொடங்குவார்கள் என ஆர்வத்துடன் காத்திருந்தனர். அவர்களின் ஆசைக்கு ஏற்ப நிகழ்ச்சி தொடங்கியதும் தொடர்ந்து தங்களுடைய ஆதரவை அளித்து வருகின்றனர்.

 பல புதுமுகங்கள்

பல புதுமுகங்கள்

இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் 18 பேர் அறிமுகமாகி இருந்தாலும் அதில் பலர் புதுமுகங்கள் ஆகவும் அதிகம் பரிச்சயம் இல்லாதவர்களாகவும் இருந்து வருகின்றனர். தமிழ் நாட்டிற்குள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் போட்டியாளர்கள் அறிமுகமாகி இருக்கின்றனர். இலங்கை, ஜெர்மனி போன்ற நாடுகளில் இருந்து போட்டியாளர்கள் வந்து இருந்தாலும் அவர்களும் தற்போது ஒரு வாரங்களுக்குள் ரசிகர்களின் மனதில் பதிய தொடங்கிவிட்டனர். அதில் பல போட்டியாளர்களின் பெயர்கள் ரசிகர்களின் வாய்க்குள் நுழைவதில்லை என்று பலர் பீல் பண்ணி வருகின்றனர்.

பஞ்சாயத்துக்கு ரெடி

பஞ்சாயத்துக்கு ரெடி

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே வாரம் முழுக்க சண்டை சச்சரவுகளை போட்டுக்கொண்டிருக்கும் போட்டியாளர்கள் சனிக்கிழமை என்றால் மேக்கப் போட்டுக்கொண்டு அழகாக ரெடி ஆகிவிடுவார்கள். அன்றிரவு எப்படியும் பஞ்சாயத்து இருக்கும் என்பதற்காக பலர் நல்ல பிள்ளையாக அமைதியாக மாறுவார்கள். ஆனால், வழக்கம்போல திங்கள்கிழமை ஆனால் மீண்டும் முதலில் இருந்து தொடங்கி விடுவார்கள். இது எப்போதும் போல நடப்பது தான். ஆனால், அதே போல தற்போது இந்த முறையில் இந்த சீசனில் முதல் பஞ்சாயத்து இன்று தொடங்குகிறது.

கலக்கலாக கமல்ஹாசன் என்ட்ரி

கலக்கலாக கமல்ஹாசன் என்ட்ரி

பஞ்சாயத்து தொடங்கும்போது கமல்ஹாசன் எப்போதுமே வித்தியாசமான கெட்டப்பில் வருவார். அது போல தான் தற்போது கோட்டு சூட்டு போட்டுக் கொண்டு சும்மா கலக்கலாக வந்திருக்கிறார். போட்டியாளர்களும் நாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்று விமர்சனமாக உடை அணிந்து ஒய்யாரமாக உட்கார்ந்து இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் பயமும் முகத்தில் ஒட்டிக்கொண்டது. இதுவரைக்கும் கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்த இந்த சீசனில் யார் எலிமினேட் ஆக போகிறார்களோ என போட்டியாளர்கள் ஒரு பதட்டம் தெரிந்து கொண்டுதான் இருக்கிறது.

மொழி மறக்குமா

மொழி மறக்குமா

போட்டியாளர்கள் பலருக்கும் ரசிகர்கள் பட்டாளம் தொடங்க ஆரம்பித்துவிட்டனர். அதுபோல ஒரு சிலருக்கு எப்போதுமே நெகட்டிவ் கமெண்டுகள் அதிகமாக வந்து விடும், அது எல்லா சீசனுக்கும் என்று ஒரு சிலர் ரசிகர்களுக்கு அமைந்து விடுகிறார்கள். அது தற்போது அபிஷேக் தான் நெட்டிசன்களின் கண்டன்ட் ராஜாவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவரை வைத்து பலர் ட்ரோல்களை செய்து கொண்டிருந்தாலும், நெகட்டிவ் கமெண்ட்டுகளையும் அதிகமாக அனுப்பி வருகின்றனர். தற்போது ப்ரொமோ வில் ஒருசிலரை மட்டும் பெயரை குறிப்பிட்டு வம்பிழுக்கும் கமல்ஹாசன் அதில் இமான் அண்ணாச்சியை பார்த்தாலே பயமாக இருக்கிறது. இங்கிலீஷ் கற்றுக்கிறேன் என்று அவருடைய வட்டார மொழியை மறந்து விடுவார் போல என கூறியது அவருடைய ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+