அறம் எங்கே செல்லுபடியாகும்? கமல் வெளியிட்ட பதிவை கலாய்க்கும் நெட்டிசன்கள்... குவியும் கருத்துக்கள்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்து இருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் கடைசியில் ரசிகர்கள் எதிர்பார்த்தாத வெற்றி அசீமிற்கு கிடைத்துவிட்டது என ரசிகர்கள் விஜய் டிவியையும் கமல்ஹாசனையும் திட்டிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் கமல்ஹாசன் நேதாஜி பற்றி அறம் எங்கே செல்லுபடி ஆகும் என வார்த்தையை சேர்த்து பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
நேர்மையை தவற விட்டுவிட்டு அறத்தை பற்றி கமல் பேசலாமா என நெட்டிசன்கள் அதிகமானோர் சமூக வலைதளத்தில் கமல்ஹாசனை கலாய்த்து ட்விஸ்ட் செய்து கொண்டிருக்கின்றனர்.

ரசிகர்களின் வாத்தியார்
நடிகர் கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். நடிகர் கமல்ஹாசன் உலகநாயகனாக ரசிகர்கள் பலருக்கும் பேவரைட் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஒரு அரசியல் பிரமுகராகவும் பலருக்கு ரோல் மாடலாகவும் இருந்து வருகிறார் .அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை பார்ப்பதற்காகவே அவருடைய ரசிகர்கள் பலர் இந்த நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர். குறிப்பாக வார நாட்களில் பார்க்கும் ரசிகர்களை விடவும் வார இறுதி நாட்களில் கமல் வரும் எபிசோடுகளை பார்க்கும் ரசிகர்கள் அதிகமாக இருக்கின்றனர். காரணம் அந்த வாரம் முழுக்க நடந்த நிகழ்வுகளுக்கு வாத்தியாராக இருந்து நியாயமாக கமல் பேசுவார் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

ரசிகர்களின் கருத்துக்கள்
இந்த நிலையில் பல இடங்களில் கமல்ஹாசன் நடுநிலைத் தன்மை யோடு செயல்பட்டு வருவதாக அவருடைய ரசிகர்கள் அவரை பாராட்டிக் கொண்டு வருகிறார்கள். ஆனால் தற்போது நடந்து முடிந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் கடைசி நேர எதிர்பாராத வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்பட்டதில் கமல்ஹாசன் ஒரு நடுநிலையை தவறவிட்டு விட்டார். அவரால் சுயமாக முடிவெடுக்க முடியாமல் ஆகிவிட்டது. அவர் ஒரு நடிகர் மட்டுமல்லாமல் அரசியல்வாதியாக இருந்தாலும் அவரால் சரியாக ஒரு முடிவை எடுக்க முடியவில்லை என்று அதிகமான ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் கொட்டிக் கொண்டிருக்கின்றனர்.

கமல்ஹாசனின் பதிவு
இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய twitter பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில், "அறம் எங்கே செல்லுபடி ஆகும் என்று யோசித்து இந்திய விடுதலைப் போரில் மறம் என்கிற ஆயுதத்தை ஏந்தி வீரம் காட்டியவர் நேதாஜி என உயர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள். அவரது 126 வது பிறந்த நாளில் அவரது வீரத்தை போற்றுவோம்" என்று பதிவு வெளியிட்டிருக்கிறார். அதை பார்த்த நெட்டிசன்கள் அறம் என்கிற சொல் தயவு செய்து நீங்கள் உபயோகிக்கிறார்கள் தலைவரே என்று பதில் ட்விஸ்ட் அனுப்பி இருக்கிறார்கள்.

நெட்டிசன்களின் விளாசல்கள்
அதுமட்டுமல்லாமல் ஒரு மனிதன் எவ்வளவு தரைகுறைவாக பேசினாலும் வெற்றி பெறலாம் என்று நேற்று நீங்கள் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தெரிந்து கொண்டோம். நீங்களும் அந்த அநீதிக்கு துணை போனதற்கு உங்கள் மேல் உள்ள மரியாதை எங்களுக்கு போய்விட்டது என்று சிலர் வருத்தத்தை தெரிவிக்க, அறம் எங்கே செல்லுபடியாகும் என யோசித்து விஜய் டிவி கிட்ட அறம் எதிர்பார்க்காதீங்கன்னு சொல்றீங்கன்னு புரியுது. அந்த அறம் இல்லாத இடத்துல இருந்த விலகி நீங்களும் உங்க அறத்தை நிலை நாட்டுங்கள் சார். என்று கமல்ஹாசனுக்கு அறிவுரையும் சிலர் கூறியிருக்கின்றனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications