Kanaka: நடிகை கனகாவா இது! மொத்தமாக மாறி இருக்கிறாரே! அடுத்து திரைப்படங்களில் என்ட்ரியா! கலக்கல் போட்டோஸ்
சென்னை : 90s காலகட்டத்தில் சினிமாவில் முன்னணி நடிகையாக நடித்து வந்த கனகா சமீப காலமாக எங்கே போனார் என்றே தெரியாமல் இருந்த நிலையில் சமீபத்தில் அவர் ஒரு ரசிகையுடன் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை பார்த்ததும் ரசிகர்கள் கனகா சினிமாவிற்கு மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கப் போகிறாரா என்று கேள்வி கேட்டு வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் பலருடைய மனதை கவர்ந்த நடிகை கனகாவை சமீப காலமாக திரைப்படங்களில் காணவில்லையே என்று அவருடைய ரசிகர்கள் தேடி வருகின்றனர். கரகாட்டக்காரன் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான கனகாவிற்கு முதல் படமே ஓஹோ என்று புகழ் கொடுத்தது. அந்த படத்திற்கு பிறகு இந்த பெண்ணுடைய கண்ணில் ஏதோ ஒரு மாயம் இருக்கிறது பார்க்கும்போதே அனைவரையும் காந்தம் போல ஈர்க்கிறது என்று பலர் கூறி வந்தனர்.

முதல் படம் இவருக்கு கொடுத்த பிரபலம் காரணமாகவே தொடர்ந்து இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று விருப்பமே இல்லாமல் இருந்த கனகாவிற்கு அவருடைய அம்மாவின் கனவு நிறைவேறியதால் தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்தார். சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தாலும் கனகாவிற்கு அவருடைய அம்மா தான் எல்லாமாக இருந்திருக்கிறார். அவருடைய அம்மா வேறு யாருமில்லை பழம்பெரும் நடிகை தேவிகா தான்.
வாரிசு மகள்
தேவிகாவின் ஒரே மகளான கனகா சினிமாவில் கொடி கட்டி பறந்த காலகட்டத்தில் தேவிகா காலமாகிவிட்டார். இது கனகாவிற்கு பெரிய ஒரு அடியை கொடுத்து இருக்கிறது. தன்னுடைய அம்மா மட்டும்தான் மொத்த உலகம் என்று நம்பிக் கொண்டிருந்த கனகா அதற்குப் பிறகு சினிமாவை விட்டு விலகி விட்டார். அந்த நேரத்தில் கனகாவின் தந்தையும் சொத்து பிரச்சனை தொடர்பாக வழக்கு தொடர்ந்திருந்தார்.
கனகா மாற்றம்
அப்போது கனகா மற்றும் அவருடைய தந்தை இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டு வைத்த பேட்டிகளும் கூட பரபரப்பை ஏற்படுத்தியது. சமீப காலமாக கனகா சினிமா சார்ந்த எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை. ஒரு சில மாதங்களுக்கு முன்பு ரசிகர் ஒருவர் அவரோடு எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அப்போதான் பார்த்ததும் இது கனகாவா எப்படி மாறிவிட்டார் என்று பலரும் பீல் பண்ணி வந்தனர். அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் எடை கூடி இருந்தார்.
கனகா பேட்டி
ஆனால் தான் இப்படியே இருப்பது தான் எனக்கு நிம்மதியாக இருக்கிறது என்று நடிகை குட்டி பத்மினியிடம் கனகா சொல்லி இருந்தார். குட்டி பத்மினி தன்னுடைய youtube சேனலுக்கு கனகாவிடம் பேட்டி கேட்டதாகவும் அதற்கு அடுத்த நாள் தாரேன் என்று சொன்ன கனகா பிறகு குட்டிமணி அவரை காண்டாக்ட் செய்ய முயற்சி செய்தபோது கனகா தொடர்புகளை துண்டித்து இருக்கிறார்.

மீண்டும் கனகா
அதுமட்டுமில்லாமல் கனகா இப்போதும் சின்ன பட்டன் போன் தான் பயன்படுத்திக் கொண்டிருந்தார். அவரும் நானும் கடைக்கு சென்று ஒரு ஸ்மார்ட் போன் வாங்கி கொடுத்து அவரிடம் whatsapp எல்லாம் இன்ஸ்டால் செய்து கொடுத்துவிட்டு வந்தேன் என்று குட்டி பத்மினி பேசியிருந்தார். இது நடந்து சில வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் சமீபத்தில் ரசிகை ஒருவர் ஷாப்பிங் போன இடத்தில் கனகாவை சந்தித்து புகைப்படங்கள் எடுத்திருக்கிறார். அந்த புகைப்படங்களில் கனகா தான் செல்ஃபி எடுத்திருக்கிறார். இதை பார்க்கும் ரசிகர்கள் இவர் மீண்டும் நடிக்க வர வேண்டும் என்று ஆர்வத்துடன் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications