Pandian Stores Serial: வெயிலிலும் முல்லை கதிர் காதல் இப்படி காய்ச்சுதே...!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முல்லைக்கு பிறந்த நாள்.. வாழ்த்து சொல்ல வீட்டுக்கு போனா என்ன கோபமோ என்னவோ முல்லை வெளியில் வரவே இல்லை. .தொங்க போட்ட தலையுடன் வீட்டுக்கு வருகிறான் கதிர்.

வீட்டுக்கு வந்தா வாசலிலேயே உட்கார்ந்து இருந்த முல்லை, கதிரை கண்டதும் சிரிப்பை முகத்தில் மிதக்கவிட்டு... கதிரையே பார்த்துக்கொண்டு இருக்கிறாள். கதிரும், மெய் மறந்து அவள் முகத்தைப் பார்த்துக்கொண்டு இருக்கிறான்.

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் 4 மணிக்கு இந்த லாக்டவுன் நேரத்தில் மறு ஒளிபரப்பாகி வருது. குறிப்பாக முல்லை கதிர் கல்யாண எபிசோடில் இருந்து ஆரம்பித்து மறு ஒளிபரப்பு செய்து வருது விஜய் டிவி.

செட்டான சூப்பர் காதல்

செட்டான சூப்பர் காதல்

மாமாவின் பெண் முல்லை, எதிர்பாராத விதமாத்தான் முல்லையுடன் கதிருக்கு கல்யாணம் ஆகுது. இருவரும் ஏற்கனவே எதிரும் புதிருமாகத்தான் இருப்பார்கள். இருவருக்குள்ளும் செட்டே ஆகாதுன்னு கல்யாணம் ஆகியும் எலியும் பூனையுமாக இருந்த காலம் போச்சு. இவர்களுக்குள் செட்டாகி இருக்கிறது சூப்பர் காதல்.

எங்கெங்கு காணினும்

எங்கெங்கு காணினும்

முல்லை அவள் பிறந்த வீட்டுக்கு போய் விடுகிறாள். அவளுக்கு பிறந்தநாள் என்று வாழ்த்து சொல்லப் போனால் அத்தை திட்டறாங்க. பார்க்காமலே திரும்பி வந்துவிடுகிறான் கதிர். அவள் நினைவிலேயே வீட்டுக்கு வருகிறான். அப்போதுதான் அவள் வாசலில் உடகார்ந்து இருப்பது போல தெரிய காதலால் கசிந்துருகி.. நீ எப்போ இங்கேன்னு கேட்க, காற்றில் மறைந்து விடுகிறாள்.

கட்டில் மேலே கண்டேன்

கட்டில் மேலே கண்டேன்

சலித்துக்கொண்டே உள்ளே வருகிறான்.. கட்டில் மேலே உட்கார்ந்து கொண்டு சிரிக்கிறாள் முல்லை. ஏதாவது ஆசையாக பேசுவான்..நம்மைத் தேடி வீட்டுக்கே வந்தவனாச்சே என்று அவன் முகத்தைப் பார்க்க, அவன் இதுவும் மாயை என்று கம்முன்னு பார்த்துட்டு உம்முன்னு படுக்கப் போறான்.இருந்தாலும் நிஜ உருவமாச்சே.. அவனையே பார்த்துக்கொண்டு இருக்கிறாள் முல்லை.

இவ ஒருத்தி எங்க பார்த்தாலும்

இவ ஒருத்தி எங்க பார்த்தாலும்

அவள் மறையாமல் அப்படியே தெரிய .. இவ ஒருத்தி எங்கே பார்த்தாலும் தெரியறான்னு தனக்குள் பேசிக்கறான். என்னங்க... என்ன சொல்றீங்க என்று அவள் கேட்கும்போதுதான் நிஜமாகவே முல்லை வந்து உட்கார்ந்து இருக்கிறாள் என்று உணர்வு வந்து அவள் முகத்தை பார்க்கிறான். 4 மணி ஆனாலும் வெயிலும் காய்ச்சுது.. இவர்கள் காதலும் காய்ச்சுது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+