இப்படி போஸ்ட் போட்டா நாங்க என்ன பண்ணுவோம்.. ஓடி வந்து உச்சுக் கொட்டும் ரசிகர்கள்!
சென்னை: நீல நிறப் புடவையில் நிலவாக ஜொலிக்கும் காவியாவை பார்த்ததும் பரவசமாகி ரசிகர்கள் கொண்டாட்டத்தை தொடங்கி விட்டனர்
என்னதான் சீரியலில் முல்லையாக இருந்தாலும் நிஜத்தில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு மொத்தப் பூக்களின் வாசமாக மலர்கிறாராம்.
அழகே பொறாமைப்படும் பேரழகு எங்க தலைவி தான் என்று முழக்கம் போடும் ரசிகர்களின் அலும்புதான் தாங்க முடியலை.

பாண்டியன் ஸ்டோர் முல்லையாக
வெள்ளித்திரை நடிகைகளுக்கு போட்டி போடும் வகையில் சின்னத்திரையிலும் புதுசு புதுசாக நடிகைகள் களமிறங்கி கொண்டிருந்தாலும் நாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்று அழகாலும் திறமையாலும் நிருபித்து கொண்டிருக்கின்றனர். புது முகம் தானே என்று யாரையும் குறைத்து மதிப்பிட முடியாத வகையில் தான் ஒவ்வொருவரும் பட்டை தீட்டி வருகின்றனர் .அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலின் புது முல்லையை சொல்லவே வேண்டாம். இவர் இந்த சீரியலில் அறிமுகமாவதற்கு முன்பே சமூக வலைத்தளத்திலும் பாப்புலராகி விட்டார்.

அந்த இடத்திற்கு பொருத்தமானவர்
அதனால் தான் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இதற்கு முன்பு நடித்து வந்த விஜே சித்ராவின் மரணத்திற்குப் பிறகு அவருடைய இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்றிருந்த நேரத்தில் இவர்தான் இதற்குப் பொருத்தமானவர் என்று ரசிகர்களே கூறியிருக்கின்றனர். அந்த அளவிற்கு ரசிகர்களின் மனதை கவர்ந்ததால் தான் இவரை முல்லையின் இடத்தில் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளவும் முடிகிறது. தற்போது இந்த சீரியல் பரபரப்பான திருப்பத்தில் சென்று கொண்டிருப்பதில் இவருடைய நடிப்பும் அழகாகத்தான் இருக்கிறது.

குழந்தை போல கொஞ்சுறாரே
தான் நடிப்பில் மட்டும் அழகு அல்ல நிஜத்திலும் பேரழகிதான் என புடவையில் கண்ணாலே கவிதை பாடி இருக்கிறார். சிலருக்குத்தான் புடவை அழகாக இருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு மார்டன் உடை அழகாக இருக்கும் ஆனால் எந்த உடை போட்டாலும் எவர்கிரீன் அழகியாக குறிப்பிட்ட ஒருசிலரால் தான் இருக்க முடியும். அந்த வரிசையில் காவியாவும் இருக்கிறார். இப்போது இவர் இன்ஸ்டாகிராமில் ஒரு சில போட்டோவை பதிவிட்டிருக்கிறார். அதைப்பார்த்ததும் அவருடைய ரசிகர்கள் தங்களுடைய வால்பேப்பராக மாற்றிவிட்டனர். அதுவும் கையை தூக்கி கண்ணை மூடி தேவலோகத்தை காணும் குழந்தையைப்போல முகத்தில் வர்ண ஜாலத்தை காட்டியிருக்கிறார்.

வெட்கத்தால் வேர்த்துப் போச்சு
அதுமட்டுமல்லாமல் இன்னொரு போட்டோவில் கையை தூக்கி நெற்றியில் கைவைத்தபடி சைடாக பார்த்து ஏங்க வைத்திருக்கிறார். இப்படி பார்த்தால் நயன்தாராவுக்கு தங்கச்சி மாதிரி இருக்கீங்களே என்று இவருடைய அழகில் உருகிப் போன ரசிகர்கள் ரொம்பவே பீல் பண்ணுகின்றனர். இவர் அடுத்த போட்டோவில் கையை தூக்கி தலையில் வைத்தபடி முகத்தை குனிந்து புருவத்தை தூக்கி லேசான புன்னகையோடு பார்த்திருக்கிறார். இந்தப் பார்வையை பார்த்ததும் பலரால் போனை ஆப் செய்யவே மனம் வரவில்லையாம். அந்த அளவிற்கு பார்வையாலே கிறங்க அடித்திருக்கிறார்.

கலக்கும் போட்டோஷூட்
இன்று இவர் போட்ட எல்லா போட்டோவிலும் ஒரே காஸ்ட்யூம் இருந்தாலும் பார்க்கும் பார்வையால் மட்டுமே வித்தியாசத்தை காட்டிபசைபோல ஒட்டிக் கொண்டார். அவர் கண்களில் இருப்பது கருவிழியா இல்லை காந்தமாய் என்று தெரியவில்லை என சிலர் புலம்புகின்றனர். அந்த அளவிற்கு பார்த்ததும் பார்வையை மாற்ற முடியவில்லையாம். இப்படியே இவர் செய்து கொண்டிருந்தால் பார்க்கிறவர்களின் நிலைமை என்னாகும் கொஞ்சம் யோசிங்க தலைவி என்று ஜொள்ளு வடிக்கின்றனர். ஒரு சில நாட்களாக இவர் பிரைடல் போட்டோ ஷூட் எடுத்து அந்த போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பரவ விட்டிருந்தார். இப்போ மேக்கப் எதுவுமில்லாமல் மயக்கி இருக்கிறார்.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications