தொலைக்காட்சிகளில் மக்களின் சாய்ஸ் படங்கள்.. படங்கள் தான்!
சென்னை: கோவிட் 19 தொற்று லாக்டவுனுக்கு மக்கள் பழகிவிட்டார்கள். அதே போல தொலைக்கட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் படங்களுக்கும் பழகிவிட்டார்கள். தொலைக்காட்சிகளில் மக்களின் முதல் சாய்ஸ் திரைப்படங்களாகத்தான் இருக்கின்றன.
சன் நெட்வொர்க் சானல்களில் சன் டிவி, கே டிவி, சன் லைப் சானல் என்று மூன்று சானல்களில் எப்போதும் படங்கள் ஒளிபரப்புத்தான். சன் டிவி இப்போது கே டிவிக்கு இணையாக வெறும் படங்கள் என்கிற கான்செப்டுக்கு வந்து...எப்போதும் படங்கள் படங்கள் என்று ஒளிபரப்பு செய்து வருகிறது.
நடு நடுவில் மறு ஒளிபரப்பில் ஸ்பெஷல் நிகழ்ச்சிகள், சீரியல்கள் என்று சன் டிவியில் இடம்பெறுகின்றன. அனால், இவைகள் மக்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

திரைப்படங்கள் புது படங்கள்
எப்போதும் திரைப்படங்கள் என்று ஒளிபரப்பு செய்து வரும் கே டிவி, லாக்டவுன் காலத்தில் தினம் ஒரு கான்செப்ட் என்று வைத்து வரிசையாக படங்களை ஒளிபரப்பு செய்து வருகிறது. இதனால், கே டிவி பார்க்கும் வியூவர்ஸ் அதிகமாகி இருக்கின்றனர்.சன் நெட்வொர்க் சன் டிவி, கே டிவி என்று இரு சானல்களுக்கும் மொத்தமாக விளம்பரதாரர்கள் பிடித்து வைத்துக்கொண்டு படங்களை ஒளிபரப்பு செய்து வருகிறது.

விஜய் டிவி ஜீ தமிழ் டிவி
சன் டிவி, கே டிவி இவைகளை பார்த்த விஜய் டிவி நாள் முழுக்க மூன்று படங்கள் என்று அறிவித்து ஒளிபரப்பு செய்து வருகிறது,.என்றாலும், நிறைய படங்களை சன் நெட் வொர்க் நிறுவனமே கைவசம் வைத்து இருக்கிறது. இதனால், கே டிவியுடன் விஜய் டிவியில் போட்டி போடமுடியவில்லை. போட்டி களத்தில் ஜீ தமிழ் டிவியாலும் ஈடு கொடுக்க முடியவில்லை.

ஒன்மேன் ஷோ
இப்போது போட்டி களத்தில் ஒன்மேன் ஷோவாக ஆட்டத்தில் இருக்கும் கே டிவி படங்களை ஒளிபரப்பித் தள்ளுகிறது. இடையில் சன் டிவியும் சேர்த்துக்கொள்ள வீடுகளில் ஒரே சினிமா தியேட்டர் மயம்தான். கிளாசிக் மேட்னி என்று திங்கள் கிழமை ஒரு பெயர், செவ்வாய் கிழமை காமெடி செவ்வாய் இப்படி ஏதோதோ கான்செப்டில் வரிசையாக படங்கள் ஒளிபரப்பு செய்கிறது கே டிவி.

ஓரளவுக்கு விளம்பரங்கள்
லாக்டவுன் ஆரம்ப காலத்தில் எந்த விளம்பரமும் இல்லாமல் இருந்த கே டிவிக்கு இப்போது சற்றே குறைந்தாலும் விளம்பரங்கள் வர ஆரம்பித்து உள்ளன.எனவே, இப்போதைக்கு படங்கள் படங்கள் என்று மக்களுக்கு திகட்ட திகட்ட படங்களை ஒளிபரப்ப கே டிவி திட்டமிட்டு அதன் வழியில் பயணித்து வருகிறது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications