வலியோடு சிரிக்கும் மகளை பார்த்து லட்சுமி ராமகிருஷ்ணன் உருக்கம்.. மன வலிமை பெருசு தான்
சென்னை: தன் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து தன் மகளைப் பற்றி கூறியுள்ள லட்சுமி ராமகிருஷ்ணனின் ட்விட்டர் பதிவுகள் பலரது வாழ்த்துகளையும் பாராட்டையும் பெற்று வருகிறது.
லட்சுமி ராமகிருஷ்ணனை போலவே அவரது மகளும் உறுதியான பெண்மணி என்று கூறி வருகின்றனர்.
ஒவ்வொருவரும் லட்சுமி ராமகிருஷ்ணனை போலத்தான் தன் பிள்ளைகளை வளர்க்க வேண்டும் என்று கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

இரு மாநிலங்களிலும் ரத்த பந்தம்
மஸ்கட்டில் பிசினஸ் செய்து கொண்டிருந்த லட்சுமி ராமகிருஷ்ணன் எல்லாத்தையும் மூடி விட்டு ஓய்வுக்காக தமிழ்நாட்டிற்கு வந்து செட்டில் ஆனார்.லட்சுமி ராமகிருஷ்ணனின் பூர்வீகம் தஞ்சாவூர் ஆக இருந்தாலும் அவர் பிறந்தது வளர்ந்தது எல்லாம் கேரளாவில். லட்சுமி ராமகிருஷ்ணன் கணவர் கோயம்புத்தூர் சேர்ந்தவர்.இப்படி இரண்டு மாநிலங்களிலும் அவருக்கு இரத்த சம்பந்தம் இருந்ததால் தமிழ்,மலையாளம் மொழிகளை சரளமாக பேச தெரிந்திருந்தார்.

சினிமாவே ஒரு விபத்து
எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல் திடீரென சினிமாவுக்குள் நுழைந்தது ஒரு விபத்து போன்றது என்று லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். தமிழில் லட்சுமி ராமகிருஷ்ணனின் முதல் படம் பிரிவோம் சந்திப்போம் என்றாலும் அவர் அறிமுகமானது மலையாள படத்தில் தான்.தமிழில் ஓரளவுக்கு சினிமாவில் நடிப்பதற்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் வந்தாலும் தனக்குள் ஒரு இயக்குனர் இருப்பதை உணர்ந்த லட்சுமி ராமகிருஷ்ணன் அதற்கும் உயிர் கொடுத்தார்.ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, போன்று சில சமூக கருத்துக்கள் பேசும் படமாக இயக்கினார்.

நடிப்பை விட்டு விலகிய காரணம்
நடிப்பு, இயக்கம்,சமூக பிரச்சனை என்று பிசியாக சென்று கொண்டிருந்த லட்சுமி ராமகிருஷ்ணன் வாழ்க்கையில் நடிப்பிலிருந்து விலகும் அளவிற்கு நடிகை வனிதாவுடன் ஒரு மனக்கசப்பு ஏற்பட்டது. நடிப்பிலிருந்து விலகினாலும் ஒரு இயக்குனராக தன்னுடைய பணியை தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கிறார். இளையராஜா இசையமைப்பில் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் சமுத்திரகனி மிஸ்கின் என்று மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது.

தாயைப் போல பிள்ளை
சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி தொகுத்து வழங்கியதன் மூலம் தனக்குள் இருந்த இரும்பு பெண்மணியை இந்த உலகிற்கு காட்டிய லட்சுமி ராமகிருஷ்ணன், அந்த நிகழ்ச்சியில் மட்டுமல்ல தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஒரு உறுதியாக பெண்ணாகவே இருந்து வருகிறார். சிறிது நாட்களுக்கு முன்பு தனது மகளின் உடல்நிலை குறித்து பதிவிட்டு இருந்த லட்சுமி ராமகிருஷ்ணனின் பதிவை பார்த்தவர்கள்,ஆறு மாதமாக இதைப்பற்றி எந்த ரியாக்ஷனும் வெளியே தெரியாமல் வேறொரு முகத்தை காட்டி வந்த லட்சுமி ராமகிருஷ்ணனின் உறுதியை பாராட்டி தள்ளினார். லட்சுமி ராமகிருஷ்ணனின் மகள் அவருக்கு சற்றும் சளைத்தவர் இல்லை போல, தற்பொழுது லட்சுமி ராமகிருஷ்ணன் தனது ட்விட்டர் பதிவில் கூட இவ்வளவு வலியிலும் சிரிக்கும் தங்களது மகளின் வலிமை மிகப்பெரியது, இவள் தான் எங்கள் மகள் என்று பெருமையாக பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications
