பாரதி நினைத்தது ஒன்று ஆனால் நடந்தது வேறு.. கடைசியில் எதிர்பாராததால் கண்கலங்க வைத்து விட்டார்களே!
சென்னை: பாரதி கண்ணம்மா சீரியலில் இதுவரைக்கும் பாரதி ஹேமா தான் தனக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அது பொய் என்று கடைசியில் தெரிந்திருக்கிறது.
பாரதியின் பாசத்திற்காக வெளியே வெறுப்பை காட்டிக்கொண்டு இருக்கும் லட்சுமி எவ்வளவு ஏங்குகிறார் என்ற ஏக்கத்தை காட்டி அனைவரையும் ஃபீல் பண்ண வைத்திருக்கின்றனர்.

கண்ணீர் வர வைக்கும் பிரமோ
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் தொடர்ந்து நான்கு வருடங்களாக ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த நிலையில் இந்த சீரியல் எப்போது முடியும் என்று ரசிகர்கள் அதிகமானோர் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கும் நிலையில் சீரியல் யாரும் எதிர்பார்க்காத வகையில் பல்வேறு திருப்பங்களோடு ஒளிபரப்பாகி வருகிறத. இந்த நிலையில் இன்றைய பிரமோ ரசிகர்களை அதிகமாக கவர்ந்திருப்பதாக கருத்துக் கூறி வருகிறார்கள். இதுவரைக்கும் இந்த சீரியல் எப்போது முடியும் என்று கேட்ட ரசிகர்கள் கூட இந்த பிரமோவை பார்க்கும் போது தங்களை அறியாமல் கண்ணீர் வருவதாக கருத்து பதிவிட்டு இருக்கிறார்கள்.

பாரதிக்கு கிடைத்த முதல் க்ளூ
பாரதி டி.என்.ஏ டெஸ்ட் எடுத்து தன்னுடைய குழந்தைகள்தான் ஹேமாவும், லட்சுமியும் என்று தெரிந்து பிறகு கண்ணம்மாவோடு சேர்ந்து வாழலாம் என்று தனது விருப்பத்தை தெரிவித்தாலும், கண்ணம்மா இனி நான் உன்னோடு சேர்ந்து வாழ முடியாது என்று தன்னுடைய குழந்தைகளை அழைத்துக்கொண்டு தன்னுடைய சொந்த கிராமத்திற்கு வந்துவிட்டார். சொந்த ஊரில் கண்ணம்மாவுக்கு ஆதரவாக கிராமத்தினர் அனைவரும் இருக்கும்போது பாரதி, கண்ணம்மாவை தேடி ஒவ்வொரு ஊராக அலைந்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில் பாரதிக்கு தெரியாத ஒரு நம்பரில் இருந்து லைவ் லொகேஷன் வரவே பாரதி இது ஹேமா தான் தனக்கு அனுப்பி இருப்பார் என்று அந்த ஊருக்கு சென்றடைந்தார்.

குழந்தைகளின் கோபம்
கிராமத்திற்கு வந்த பிறகு லட்சுமி டாக்டர் நம்மளை தேடி இங்கே வர மாட்டார்லாமா? என்று கண்ணம்மாவிடம் கேட்டிருந்தார். அதுபோல பாரதி அந்த ஊருக்கு வந்த பிறகு ஹேமாவும் லட்சுமியும் விளையாடிக் கொண்டிருக்கும்போது பாரதி இருவரின் முன்பும் வந்து நின்று இருவரும் நன்றாக இருக்கிறீர்களா புது ஸ்கூலில் சேர்ந்திருக்கிறீர்களா? புது ஸ்கூல் பிடித்திருக்கிறதா என்று கேள்வி கேட்க, உங்க தொந்தரவு வேண்டாம் என்று தானே நாங்கள் இங்கு வந்தோம் எதற்காக மீண்டும் எங்களை தொந்தரவு செய்கிறீர்கள் என்று ஹேமா மற்றும் லட்சுமி இருவரும் பாரதியை திட்டி இருந்தனர். அது மட்டும் இல்லாமல் ஹேமா எனக்கு ஒரு உதவி செய்வீங்களா? ,நீங்க நாங்க நிம்மதியா இருக்கணும்னா இந்த ஊரை விட்டு வெளியே போயிருங்க என்று கூறியிருந்தனர்.

அப்பாவின் பாசத்திற்காக ஏக்கம்
ஆனாலும் ஹேமாவும் லட்சுமியும் வீட்டிற்குள் சென்ற பிறகு வீட்டிற்குள் இருந்து இரு லெட்டரில் ஐ லவ் யூ அப்பா, நீங்க தைரியமாக இருங்கள் என்று எழுதி பாரதி மீது தூக்கி எறிந்திருந்தனர். இதை பார்த்த பாரதி இதுவும் ஹேமா தான் தனக்காக இப்படி செய்கிறார். என் மீது அதிகமான பாசம் என்று கூறிக் கொண்டிருந்தார். ஆனால் இன்றைய ப்ரோமோவில் ஹேமாவை தேடி பாரதி பள்ளிக்கு சென்று ஹேமாவிடம் தேங்க்யூ ஹேமா நீ என் மீது பாசம் அதிகமாக வெச்சிருப்பாய் என்று எனக்கு தெரியும், நீ தானே எனக்கு எல்லா உதவியும் செஞ்சா, என சொல்ல, நீங்க என்ன பேசுறீங்கன்னு எனக்கு புரியல என ஹேமா சென்று விடுகிறார். பின்பு லட்சுமி நான்தான் உங்களுக்கு லைவ் லொகேஷன் அனுப்பினேன், பேப்பரில் எழுதி வீசினேன். எனக்கு உங்களை ரொம்பவே பிடிக்கும் டாக்டர் அப்பா. நான் உங்கள அப்பா என்று கூப்பிடவா? என்று உருக்கமாக பேசியிருக்கிறார். எந்த பிரமோ தற்போது வைரலாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications