• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இது நிஷாவா மெழுகு சிலையா குழப்பத்தில் நெட்டிசன்கள்...குதூகலிக்கும் ரசிகர்கள்.

Google Oneindia Tamil News

சென்னை: தன்னுடைய மகளுக்கு போட்டியாக மகளை விட அதிகமாக மேக்கப்பில் ஜொலிக்கும் நிஷாவை பார்த்து கலாய்ப்பதற்காக நெட்டிசன்கள் கிளம்பிவிட்டார்கள்.

அம்மாவும் மகளும் ஒரே கலரில் உடை அணிந்து இன்ஸ்டாகிராமை கலக்கி விட்டார்கள்.

அதுவும் அந்த தங்கமே தங்கமே பாட்டுக்கு நிஷாவின் எக்ஸ்பிரஷன் தான் வேற லெவலில் வைரலாகி வருகிறது.

சென்னை அருகே பிரபல கல்லூரியின் 5வது மாடியில் இருந்து குதித்த மாணவி.. பெற்றோர் கண் முன்னே துயரம் சென்னை அருகே பிரபல கல்லூரியின் 5வது மாடியில் இருந்து குதித்த மாணவி.. பெற்றோர் கண் முன்னே துயரம்

முதல் வீடியோவே செம வைரல்

முதல் வீடியோவே செம வைரல்

அறந்தாங்கி நிஷா.. அவங்க குழந்தையைத் தூக்கி.. எடுத்த போட்டோ ஷூட், இரண்டாவது வீடியோ இணையதளத்தில் பரபரப்பாக வலம் வந்துட்டு இருக்கு. நயன்தாரா கெட்டப்புள முதல்ல வெளியிட்டிருந்த ரீல்ஸ் வீடியோ நன்றாகவே வரவேற்பைப் பெற்றிருந்தது. அதனால் தற்போது இரண்டாவது வீடியோவையும் தைரியமாக அப்லோட் செய்து இருக்கிறார்.அப்லோட் செய்வதற்கு எதற்கு தைரியம் வேண்டும்... அதை பார்க்க நமக்குத்தான் தைரியம் வேண்டும்.

வருத்தம் குறைஞ்சு போச்சு

வருத்தம் குறைஞ்சு போச்சு

தற்போது வரை குழந்தை சபா உடன் சரியான போட்டோக்கள் எதுவும் இல்லை என்று வருத்தப்பட்டு வந்த அறந்தாங்கி நிஷா அவர்கள், நம்ம ரோபோ சங்கர் அவர்களின் மனைவியின் பரிந்துரையின் பேரில் ஒரு பியூட்டி பார்லருக்கு சென்று தன்னை மேலும் அழகுபடுத்திக் கொண்டு, குழந்தை சபா உடன் டிசைன் டிசைன் ஆன காஸ்ட்யூமில் போட்டோ ஷூட் நடத்தி நீண்டநாள் ஏக்கத்தை தீர்த்துக் கொண்டார். சின்டிரெல்லா டிரஸ்ஸில் குட்டி நயன்தாரா என்று அவரே சொல்லிக்கொண்டு ரீசன்ட்டாக இவர் போட்டிருந்த வீடியோ, சமூக வலைதளங்கள்களில் சில நெகட்டிவ் கமெண்ட்டுகள் வந்தாலும்,மேக்ஸிமம் பார்வையாளர்கள் இந்த வீடியோவை வரவேற்று கமெண்ட் செய்திருந்தனர்.

 பாலிஸா மாறிட்டாரு

பாலிஸா மாறிட்டாரு

தான் கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கி நிஷாவை நல்ல பாலிஸாவே மாத்தி இருந்தாங்க பியூட்டிசியன். இவர் முதல்ல மேக்கப் பண்ணதால கடையில இருக்குற எல்லா பவுடரும் காலியாகி இருக்கும் போல அந்த குட்டிப் பாப்பாவுக்கு பவுடர் இல்லாம போயிருச்சு. சிண்ட்ரெல்லா டிரஸ் போட்டு இருந்ததால நயன்தாரா பாட்டு போட்டு வீடியோ போட்ட நிஷா, உடல் முழுவதும் தங்கமாய் போட்டிருக்கதனால தங்கமே தங்கமே பாட்டை மேட்ச் பண்ணி இந்த ரீல்ஸ் வீடியோ பண்ணிருக்காங்க .ஒரு நிமிடம் அந்த குட்டிப் பாப்பா சபாவே திகைத்துப்போய் நிஷா முகத்தை வெறிக்க பார்ப்பதுதான் வீடியோவில் ஹைலைட்டே...

 ஸ்டார் கிட்ஸில் கலக்கல்

ஸ்டார் கிட்ஸில் கலக்கல்

பொதுவாக எல்லாரையும் விஜய் டிவில கலாய்ப்பார்கள், ஆனால் விஜய் டிவியையே கலாய்க்கிற அளவுக்கு சில நாட்களுக்கு முன்பு ஸ்டார் கிட்ஸ்னு ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பானது.சார்பட்டா பரம்பரை வாத்தியார் மீம்ஸ்கெல்லாம் இந்த நிகழ்ச்சி தான் ஓய்வு கொடுத்தது. அந்த அளவிற்கு செம கலாய்பிற்கு உள்ளானது.அந்த நிகழ்ச்சியில் கூட நிஷா தன் குழந்தை சபாவை குறித்து தன்னிடம் வரமாட்டார், கொஞ்ச மாட்டார்,என்று கண்ணீர் மல்க கூறினார். ஒருவேளை அது இந்த போட்டோசூட் சமயத்தில்தான் இருக்குமோ!! என்னவோ!?

நீங்களே இப்படி பண்ணலாமா

நீங்களே இப்படி பண்ணலாமா

பொதுவாக செலிபிரிட்டிகள் செய்யும் ஒவ்வொரு செயலும் எளிதில் பெருமளவு மக்களுக்கு சென்றடையும்.இயற்கையாகவே கருப்பாக இருக்கும் நிஷா மேக்கப் மூலம் தன்னை வெள்ளையாக மாற்றிக்கொண்டு போட்டோசூட் எடுத்ததன் மூலம் என்ன சொல்ல வருகிறார்.கருப்பு என்பது அழகில்லையா? வெள்ளை நிறம் தான் அழகா?இவர் இப்படி தோலின் நிறத்திற்கு கொடுத்த மதிப்பு கருப்பாய் இருப்பவர்கள் மனதில் எந்தவிதமான எதிர்மறை கருத்துகளை உண்டாக்கும் என்று இவர் நினைத்துப் பார்த்திருக்க வேண்டாமா...தன் கலரை பெருமையாக நினைத்து சிறிதளவு மேக்கப் மட்டுமே போட்டுக்கொண்டு... குழந்தையுடன் போட்டோ எடுத்து அதை இவர் போஸ்ட் செய்திருந்தால் அது எந்தவித நெகட்டிவ் கமெண்ட்டுகளும் இல்லாமல், இணையவாசிகள் இடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் என்பது மட்டும் உண்மை.தற்போது இவரது மேக்கப்பே இணையத்தில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது....

English summary
Videos of Aranthangi Nisha dancing with her daughter to the song "Thangame Thangame" are going viral on Instagram. She has been busy with photoshoots lately. Her videos with her daughter are causing a stir on the social media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X