ஜெயிலர் 2 படத்தை பற்றி லோகேஷ் கனகராஜ் போட்ட போஸ்ட்.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்!
சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ஜெயிலர் 2 படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜும் படத்தைப் பார்த்துவிட்டு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டிருக்கிறார். ஆனால், அவர் போட்ட ஒரு வாழ்த்து பதிவுக்கே சமூக வலைதளங்களில் சிலர் பாராட்டியும், பலர் கிண்டல் செய்தும் வருவது பேசுபொருளாகியிருக்கிறது.

லோகேஷ் கனகராஜ் பதிவு
லோகேஷ் கனகராஜ் தனது பதிவில், "ஜெயிலர் 2 படத்தின் மூலம் ரஜினிகாந்துக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்க வாழ்த்துகள். இயக்குநர் நெல்சனுக்கு வாழ்த்துகள். அனிருத், எப்போதும் உங்களுடைய வேலையின் மிகப்பெரிய ரசிகன். சன் பிக்சர்ஸ் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியாக அமையட்டும்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

நெட்டிசன்கள் கலாய்ப்பு
ரஜினிகாந்த், நெல்சன், அனிருத் மற்றும் படக்குழுவினரைப் பாராட்டி அவர் இந்தப் பதிவை வெளியிட்டிருக்கிறார். இதைப் பார்த்த பலரும் லோகேஷின் வாழ்த்துக்கு ஆதரவு தெரிவித்தாலும், இன்னொரு பக்கம் அவரைக் கலாய்த்த கமாண்டுகளும் அதிகமாக வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக, "லோகேஷ், எப்படி படம் எடுக்க வேண்டும் என்று நெல்சனிடம் கற்றுக்கொள்ளுங்கள்" என்ற ரீதியில் சிலர் கிண்டல் செய்து வருகின்றனர். ஜெயிலர் 2 படத்தைப் பாராட்டியதற்காக லோகேஷை ஏன் இப்படி விமர்சிக்கிறீர்கள் என்று கேட்கும் வகையிலான கருத்துகளும் பதிவாகி வருகின்றன.
ஜெயிலர் 2 விமர்சனம்
ஒரு இயக்குநர் இன்னொரு இயக்குநரின் படத்தைப் பார்த்துவிட்டு வாழ்த்துவது இயல்பான விஷயம்தான். ஆனால், அந்தப் பதிவைக்கூட வைத்து ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த இயக்குநர்களை ஒப்பிட்டுப் பேசுவது சமூக வலைதளங்களில் தொடர்கிறது. இதற்கிடையே, ஜெயிலர் 2 படத்தைப் பற்றிய பாசிட்டிவ் கருத்துகளே இணையத்தில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகின்றன. ரஜினிகாந்தின் ஸ்கிரீன் ப்ரெசென்ஸ், அனிருத்தின் பின்னணி இசை, நெல்சனின் காமெடி ஸ்டைல் போன்றவற்றை பலரும் பாராட்டி வருகின்றனர்.
படத்தைப் பார்த்த பலருமே முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் சூப்பராக இருக்கிறது என்றே சொல்லி வருகின்றனர். ஜெயிலர் முதல் பாகம் அதிக வசூலை பெற்றிருந்தாலும் 2வது பாகம் அதைவிட அதிக வசூலை பெறும் என்று நம்பிக்கை இப்போது ரசிகர்களுக்கு வந்து இருக்கிறது. அந்த அளவிற்கு சோசியல் மீடியாவில் இந்த படத்தை பற்றிய கிளிப்ஸ்களும் பாசிட்டிவ் கமெண்ட்ஸ்களும் அதிகரித்து கொண்டிருக்கிறது.
ஒருபக்கம் ஜெயிலர் 2 படத்துக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில், இன்னொரு பக்கம் லோகேஷ் கனகராஜின் வாழ்த்து பதிவே ட்ரோல்களுக்கு காரணமாகியிருக்கிறது. படத்தைப் பாராட்டியதற்காகவே அவரைக் கிண்டல் செய்யும் இந்த விவாதம் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.




Click it and Unblock the Notifications
