Madharaasi Box Office Collection: அடித்து தூக்கும் மதராஸி வசூல்.. கலெக்சனே அள்ளுதே.. சிவகார்த்திகேயன் அசத்தல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், வித்யுத் ஜம்வால், மற்றும் ருக்மணி வசந்த் நடித்த 'மதராசி' திரைப்படம் திரையரங்குகளில் நல்ல விமர்சனங்களுடன் ஓடி வருகிறது. செப்டம்பர் 5 அன்று வெளியான இப்படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வருகின்றன.

முதல் நாளில் உலகளவில் ₹20 கோடி வசூல் செய்த 'மதராசி', இரண்டாவது நாளில் இந்தியாவில் ₹22 கோடி நிகர வசூலை எட்டியது. மூன்றாவது நாளில் மொத்தமாக 40 கோடி ரூபாய் வரை வசூல் பெற்றுள்ளது. சாக்னில்க் அறிக்கையின்படி, இந்தியாவில் மட்டும் தோராயமாக ₹15.28 கோடி நிகர வசூலை ஈட்டியுள்ளது. இதன் மூலம், மொத்த உள்நாட்டு வசூல் ₹40.88 கோடியாக உள்ளது.

Madharaasi sivakarthikeyanm

மதராஸி திரைப்படம் வசூல்

மதராஸி திரைப்படம் தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்பட்டுள்ளது, அங்கு திரையரங்கு நிரம்பல் விகிதம் 61.78% ஆக இருந்தது. ஆனால், தெலுங்கில் இந்த விகிதம் 18.62% மட்டுமே. வார இறுதியில் வசூல் குறைந்திருப்பது படத்திற்கு ஒரு சவாலாக அமைந்துள்ளது, ஏனெனில் வார நாட்களில் இத்திரைப்படம் நல்ல வசூலை ஈட்ட வேண்டியுள்ளது. படத்தின் முதல் நாள் வசூல் இந்தியாவில் ₹13 கோடி நிகரமாகவும், ₹15.35 கோடி மொத்தமாகவும் இருந்தது. வெளிநாட்டு வசூல் ₹5.15 கோடியைச் சேர்த்தால், உலகளவில் முதல் நாளில் ₹20.50 கோடியை இப்படம் வசூலித்தது.

இந்த வசூல் சிவகார்த்திகேயனின் முந்தைய படமான 'அமரன்' படத்தின் முதல் நாள் வசூலை விடக் குறைவு. கடந்த ஆண்டு வெளியான 'அமரன்' இந்தியாவில் மட்டும் ₹21.40 கோடியும், உலகளவில் ₹34.70 கோடியும் வசூலித்தது. இந்த படத்திற்கு ப்ரோமோஷன் குறைவாக இருந்தது. ஆனால் இப்போது பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக படம் பிக் அப் ஆகி வருகிறது.

மதராசி படம்

'மதராசி' படத்தை முருகதாஸ் இயக்கியுள்ளார், ஸ்ரீ லக்ஷ்மி மூவிஸ் தயாரித்துள்ளது. சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், வித்யுத் ஜம்வால், பிஜு மேனன், விக்ராந்த், ஷபீர் கல்லாரக்கல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில், சிவகார்த்திகேயன் 'ஃபிரெகோலி டெல்யூஷன்' என்ற மனநோயால் பாதிக்கப்பட்ட ஒருவராக நடித்துள்ளார். இவர் வட இந்திய சிண்டிகேட்டுகளால் தமிழ்நாட்டிற்குள் சட்டவிரோதமாக ஆயுதங்கள் கொண்டுவரப்படுவதைத் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்.

இயக்குநர் லிங்குசாமி சிவகார்த்திகேயனின் நடிப்பைப் பாராட்டினார். நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி உள்ள மதராஸி திரைப்பட பாசிட்டிவ் (Madharaasi Review) விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படத்தின் முதல் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.

மதராஸி திரைப்படம் விமர்சனம் - Madharaasi Review

வழக்கமான நகைச்சுவை கதாபாத்திரங்களில் இருந்து விலகி, 'மதராஸி' திரைப்படத்தில் தீவிரமான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட ஒரு கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் தைரியமான பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளார். முதல் பாதியில் அவரது நகைச்சுவை உணர்வு ஆங்காங்கே இருந்தாலும், இடைவேளைக்குப் பிந்தைய காட்சிகள் சிறப்பாக உள்ளன. முதல் பாதி மெதுவாகவும் செல்லாமல், வேகமாகவும் செல்லாமல் துப்பாக்கி படம் போல சுவாரசியமாக செல்கிறது.

சிவகார்த்திகேயனின் நடிப்பு

சிவகார்த்திகேயன் அழுத்தமான உணர்ச்சிகளையும், ஹீரோயிசத்தையும் நம்பகத்தன்மையுடன் வெளிப்படுத்துகிறார். அவரது திரைப்பயணத்தின் வலுவான ஒரு படைப்பாக இதை மாற்றியுள்ளது. சிவகார்த்திகேயன் பிளாஷ்பேக் காட்சிகளில் சிறப்பாக நடித்து உள்ளார். முக்கியமாக அவருக்கு இருக்கும் பாதிப்பு ஆக்சன் காட்சிகளில் அவருக்கு பெரிய அளவில் உதவி உள்ளது.

ஏ.ஆர். முருகதாஸின் இயக்கம்

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் தனது ஸ்டைல் கதை சொல்லும் பாணியுடன் சமூக கருத்துக்களையும் இதில் புகுத்தியுள்ளார். சாதாரண ஆக்சன் படம் போல.. கொஞ்சம் லோகேஷ் கனகராஜ் சாயல் இருந்தாலும் படத்தின் இயக்கம் சிறப்பாக உள்ளது. முருகதாஸ் படத்தின் திரைக்கதையை சிறப்பாக வடிவமைத்து உள்ளார். படத்தின் இடைவேளை திருப்பம் சிறப்பாக உள்ளது. துப்பாக்கி படத்தின் 12 பேர் சுடுவது, கத்தி படத்தில் காயின் சண்டை போல இதில் இருக்கும் கை முறுக்கும் சண்டை யுக்தி சிறப்பாக உள்ளது. காதல் ஆக்‌ஷன் மற்றும் சோஷியல் மெசேஜ் ஆகியவை கலந்த கலவையாக படம் உள்ளது. எனினும், இதை இன்னும் சுருக்கமான படமாக எடுத்திருந்தால் படத்தின் ஒட்டுமொத்த வேகம் அதிகரித்திருக்கும் என்று பலரும் விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+