Magarasi Serial: மகராசி ஹரித்வாரில் பிறந்து வளர்ந்த தமிழ்ப் பெண்ணாமே!
சென்னை: மேற்கு வங்காளம் கொல்கத்தா, ஹரித்வார் என்று வட மாநிலங்களின் முக்கிய நகரங்களுக்கும் சென்று தொலைக் காட்சி சீரியல் தயாரிப்பாளர்கள் சீரியல் எடுக்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.
குஷ்பூ கொல்கத்தா சென்று லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலின் சில எபிசோடுகளை கொல்கத்தாவில் படமாக்கி வந்தார்.
இப்போது சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் புது சீரியல் மகராசி ஹரித்வாரில் பிறந்து வளர்ந்த தமிழ் பெண்ணாம்.

ஹரித்வார் படப்பிடிப்பு
மகராசி சீரியலின் ஹீரோயினை ஹரித்வாரில் பிறந்த தமிழ்ப் பெண்ணாக காண்பித்து இருக்கிறார்கள். ப்ரோமோவில் ஹரித்துவார் படப்பிடிப்பு காட்சிகளை காண்பித்து இருப்பதும் நன்றாக இருக்கிறது. அங்குள்ள நதியின் பிரமாண்ட சிவன் சிலை, கரையோர விளக்குகள் என்று காட்சிகளை படம் பிடித்து அசத்தி இருக்கிறார்கள்.

மதிய நேர சீரியல்
சன் டிவியில் மதியம் 2:30 மணி நேரம் என்பது மதிய நேரத்தின் புது சீரியலுக்கு முதலில் ஒதுக்கப்படும் நேரம். பின்னர் அது 3 மணிக்கு ஒளிபரப்பாகப் படும்.பின்னர் இரவு நேரத்துக்கு கூட மாற்றப்படலாம். மதியம் 2:30 மணி நேரம் என்பது சன் டிவிக்கு முக்கியமான நேரம். இரவு 9 மணி நேரம் போல.

சிறிது நாட்கள்
சிறிது நாட்கள் மட்டுமே ஹரித்வாரில் படம் பிடிக்கப்பட்டு இருக்குமோ என்கிற அளவுக்குத்தான் இந்த சீரியலின் ப்ரோமோ இருக்கிறது. அதுவே கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது. அதை அதிகமாக காண்பிக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பும் இருக்கிறது.

தமிழுக்கு புதுசு
இதில் ஹீரோயினாக நடித்து இருப்பவர் தமிழுக்கு புதுமுகம் என்றாலும், நடன இயக்குனர் ராம்ஜி ரொம்ப நாட்களுக்குப் பிறகு சின்னத்திரையின் இந்த சீரியலின் மூலம் என்ட்ரி கொடுக்கிறார். எல்லா சீரியல்களுக்கு வரவேற்பு கொடுக்கும் மக்கள் இதுக்கு மட்டும் ஆதரவு தராமல் இருப்பார்களா என்ன?
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications