மணிமேகலை! வருஷா வருஷம் கிப்ட் தரே! ஆனா இந்த பிறந்தநாளுக்கு நீ கொடுத்தது மேசிவ் கிப்ட்! ஹூசைன் ஹேப்பி
சென்னை: தனது பிறந்தநாளுக்கு மணிமேகலை வாங்கி கொடுத்துள்ள பரிசை நேரில் காண ஆவலாக உள்ளதாக அவரது கணவர் ஹூசைன் தெரிவித்துள்ளார்.
விஜே மணிமேகலை குக் வித் கோமாளி சீசன் 1 முதல் 3 ஆவது வரை தொடர்ந்து மக்களை மகிழ்வித்து வருகிறார். அவரது உடல்மொழி, முக பாவனை என அவர் செய்வது அனைத்துமே சிரிப்பை வரவழைக்கிறது.
இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஹூசைன் என்பவரை காதலித்து தன் வீட்டின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் விஜேவாகவும் பணியாற்றி வரும் மணிமேகலை யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார்.
குக் வித் கோமாளி புகழ், சரத், மணிமேகலை.. இவங்க லிஸ்டில் ரித்திகாவுமா.. இன்ஸ்டாவில் மோட்டிவேஷன்!

ஹூசைனும் மணிமேகலையும்
இந்த யூடியூப் மூலம் ஹூசைனும் மணிமேகலையும் அடிக்கும் லூட்டி இருக்கே அப்பப்பா... ரசிகர்கள் சிரித்து சிரித்தே மகிழ்கிறார்கள். பிஎம்டபிள் யூ கார் வாங்கியதையும் யூடியூப்பில் போடும் மணி, தனது இரு சக்கர வாகனம் திருட்டு போனது குறித்தும் பதிவு செய்திருந்தார்.

அசோக் நகர்
அந்த பதிவில் அசோக் நகரில் நண்பர் வீட்டுக்கு சென்ற போது எங்களது பைக் திருடு போய்விட்டது. கல்யாணத்திற்கு பிறகு கஷ்டப்பட்டு சம்பாதித்து ஆசையா வாங்குன எங்களது முதல் பைக். மிகவும் வருத்தமாக இருக்கிறது. வருஷத்திற்கு ஒரு சம்பவம் எங்க இருந்துதான் வருதோ. போலீஸில் புகார் கொடுத்துள்ளோம் என கூறியுள்ளார்.

ஆறுதல்
கவலையில் இருந்த மணிமேகலைக்கு ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் மணிமேகலையின் கணவர் ஹூசைனுக்கு நேற்று பிறந்தநாள். இதையொட்டி மணிமேகலை ஒரு கிப்டை ஹூசைனுக்கு கொடுத்துள்ளார். அதை ஹூசைன் மகிழ்ச்சியாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

பொம்மை பைக்
அந்த பதிவில் கையில் பொம்மை பைக்குடன், ஆண்டுதோறும் எனக்கென சிறப்பான கிப்ட்டுடன் வருகிறாய். இந்த முறை நீ கொடுத்திருப்பது சூப்பர் கிப்ட். நேரில் அந்த கிப்டை பார்க்க ஆசையாக உள்ளேன் என ஹூசைன் தனது பதிவில் தெரிவித்துள்ளார். நெட்டிசன்களும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.